IPL 2023 Playoffs Scenario – Chennai Super Kings Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
4 அணிகள் போட்டி
புள்ளிகள் பட்டியலில் 2வது இடம் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த இடத்திற்கு வர ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 4 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. +0.381 என்ற சிறப்பான நெட் ரன்ரேட்டை கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நாளை (சனிக்கிழமை) மாலை 3:30 மணிக்கு டெல்லியில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சென்னை களம் இறங்குகிறது.

சென்னை அணி எப்படி நம்பர் 2-க்கு வரலாம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடிக்க நாளை நடக்கும் ஆட்டத்தில் வெற்றியை ருசித்தால் போதும். எனினும், சென்னை அணி இந்த ஆட்டத்தில் தோற்றால் கூட 2ம் இடத்திலே நீடிக்கலாம். அதற்கு, லக்னோ, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும்.

சென்னையின் நெட் ரன்ரேட் +0.381 லக்னோவின் +0.304 நெட் ரன்ரேட்டை விட சற்று சிறப்பாக உள்ளது. அவர்கள் 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் உள்ளனர். எனவே, சென்னை அணி நெட் ரன்ரேட்டில் கணிசமான முன்னணியை இலக்காகக் கொள்ள வேண்டும். ஆனால் முதலாவதாக, டெல்லிக்கு எதிரான வெற்றி இன்றியமையாதது. அது அவர்களை பிளேஆஃப்-க்கு எளிதில் தகுதி பெற உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil