Advertisment

சி.எஸ்.கே கையில் இன்னும் ரூ.20.45 கோடி இருக்கு: தக்க வைத்த- விடுவிக்கப்பட்ட வீரர்கள் முழு விவரம்

சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK IPL 2023 retention full list in tamil

Chennai Super Kings full list of retained players, released players, purse remaining for auction Tamil News

CSK IPL 2023 retention Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 3வது வாரத்தில் தொடங்கி மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.

Advertisment

இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நேற்று மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு முடிந்ததால் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

சி.எஸ்.கே தக்க வைத்த- விடுவிக்கப்பட்ட வீரர்கள் முழு விவரம்

அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதன்படி, சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்கிறார். நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணி நிர்வாகத்தை சுற்றி சுழன்ற நிலையில், தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதன்படி, ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்க வைத்து உள்ளது.

அதே நேரத்தில், அந்த அணி அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ-வை விடுவித்துள்ளது. கடந்த சீசனுக்குப் பிறகு ஓய்வு பெற்ற உத்தப்பாவும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கத்திற்குத் திரும்புவதற்கான ஆட்டங்கள் அனைத்தும் தயாராகிவிட்ட நிலையில், அந்த அணி பல சுழல் விருப்பங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அணியில் இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

மொத்த பர்ஸ் தொகை ரூ.95 கோடியாக உள்ள நிலையில், முந்தைய ஏலத்தில் எஞ்சியிருக்கும் பர்ஸ் மற்றும் ஒவ்வொரு தரப்பும் வெளியிட்ட வீரர்களின் மதிப்பு தவிர, வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ள ஏலத்தில் அணிகள் கூடுதலாக ரூ. 5 கோடி செலவழிக்க வேண்டும். அதன்படி, தற்போது சென்னை அணியின் கைவசம் ரூ. 20.45 கோடி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியல்:-

தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா

விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:-

டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Csk Ipl Auction
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment