CSK IPL 2025 Schedule: வெளியான ஐ.பி.எல். 2025 அட்டவணை... சி.எஸ்.கே-வின் முதல் போட்டி எப்போது?
ஐ.பி.எல். 2025 தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐ.பி.எல். 2025 தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். டி20 தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முந்தைய சீசனில் பெற்ற பின்னடைவில் இருந்து மீளும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போலவே, அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில், கடந்த சீசன் முழுவதும் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால் தோனி சென்னை அணியில் தொடர்ந்து ஆடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. அதனால், அவரது ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் வழக்கம் போல் தங்களது ஆதரவை அளிப்பார்கள்.
Advertisment
Advertisements
சென்னை அணி இந்த சீசனில், ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா, ஷிவம் துபே மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் தக்கவைத்துள்ளது. மேலும், டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா மற்றும் ஆர் அஷ்வின் போன்ற வீரர்களையும் அவர்கள் மெகா ஏலத்தில் எடுத்துள்ளனர். அவர்களை கொண்ட சிறந்த அணியை சென்னை களமிறக்கும் என நம்பலாம்.
ஐ.பி.எல். 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிகளின் பட்டியல்:
எண்
தேதி
நாள்
நேரம்
எதிரணி
இடம்
1
மார்ச் 23
ஞாயிறு
7.30
மும்பை இந்தியன்ஸ்
சென்னை
2
மார்ச் 28
வெள்ளி
7.30
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சென்னை
3
மார்ச் 30
ஞாயிறு
7.30
ராஜஸ்தான் ராயல்ஸ்
கவுகாத்தி
4
ஏப்ரல் 5
சனிக்கிழமை
3:30
டெல்லி கேபிட்டல்ஸ்
சென்னை
5
ஏப்ரல் 8
செவ்வாய்
7.30
பஞ்சாப் கிங்ஸ்
நியூ சண்டிகர்
6
ஏப்ரல் 11
வெள்ளி
7.30
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சென்னை
7
ஏப்ரல் 14
திங்கள்
7.30
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
லக்னோ
8
ஏப்ரல் 20
ஞாயிறு
7.30
மும்பை இந்தியன்ஸ்
மும்பை
9
ஏப்ரல் 25
வெள்ளி
7.30
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னை
10
ஏப்ரல் 30
புதன்
7.30
பஞ்சாப் கிங்ஸ்
சென்னை
11
மே 3
சனிக்கிழமை
7.30
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பெங்களூரு
12
மே 7
புதன்
7.30
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா
13
மே 12
திங்கள்
7.30
ராஜஸ்தான் ராயல்ஸ்
சென்னை
14
மே 18
ஞாயிறு
3.30
குஜராத் டைட்டன்ஸ்
அகமதாபாத்
ஐ.பி.எல் 2025 தொடரில் குவாலிபயர் 1 மே 20-ம் தேதியும், எலிமினேட்டர் மே 21-ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. குவாலிபயர் 2 மே 23-ம் தேதியும் இறுதிப்போட்டி மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளன. மொத்தம் 74 ஆட்டங்கள் 13 மைதானங்களில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.