சி.எஸ்.கே. சாம்பியன் பிராவோ-வுக்கு சச்சின் சொன்ன மெசேஜ்: வீடியோ
சச்சினே ஆசைப்படும் அந்த வீடியோவை இனியும் வெளியிடாமல் பிராவோ தாமதம் செய்வாரா என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் வீரர் டிவையன் பிராவோ-வுக்கு கிரிக்கெட் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் வீடியோவில் சொன்ன மெசேஜ் என்ன தெரியுமா?
டிவையன் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர். குறிப்பாக, ‘டெத் பவுலிங்’கிற்கு இவரை அதிகம் நம்புவார் சி.எஸ்.கே. கேப்டன் டோனி. ஐபிஎல் 2019 முதல் போட்டியில் வருகிற 23-ம் தேதி சென்னையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சி.எஸ்.கே!
இந்தச் சூழலில்தான் சச்சின் டெண்டுல்கரின் வீடியோ மெசேஜ்! விஷயம் வேறொன்றுமில்லை, பிராவோ, கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் இசையிலும் கில்லாடி! அவர் தயாரித்த, ‘ஆசியா’ என்கிற இசை ஆல்பம் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது.
பிராவோவின் இதர இசை ரசிகர்களைப் போல சச்சினும் அந்த இசை ஆல்பத்தை உடனடியாக வெளியிடும்படி வீடியோ மூலமாக பிராவோவுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சச்சின். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்திருக்கிறார்.
Best wishes for your new song, ”ASIA” my friend, @DJBravo47 !???????? pic.twitter.com/Hidq5p1vUB
— Sachin Tendulkar (@sachin_rt) 21 March 2019
சச்சினே ஆசைப்படும் அந்த வீடியோவை இனியும் வெளியிடாமல் பிராவோ தாமதம் செய்வாரா என்ன?
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook