Advertisment

IPL 2019: சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பின்னடைவு.... தோனியின் ஃபேவரைட் வீரர் விலகல்!

லுங்கி ங்கிடியின் பந்துவீச்சில் பெரிதும் இம்ப்ரஸ் ஆனவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lungi Ngidi Out of IPL 2019 Due to Injury MS Dhoni - சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பின்னடைவு.... தோனியின் ஃபேவரைட் வீரர் விலகல்!

Lungi Ngidi Out of IPL 2019 Due to Injury MS Dhoni - சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பின்னடைவு.... தோனியின் ஃபேவரைட் வீரர் விலகல்!

ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும்பின்னடைவாக, வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். ஐபிஎல் 2019 தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் (மார்ச்.23) சென்னை சேப்பாக் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

Advertisment

இந்நிலையில், சென்னை அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி காயம் காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். கடந்த சீசனில் 7 போட்டிகளில் ஆடிய லுங்கி 11 விக்கெட்டுகளை அள்ளினார். அதுவும், அவரது பவுலிங் எகானமி 6 மட்டுமே. ஆகையால், லுங்கி இல்லாதது சிஎஸ்கேவின் பவுலிங் பிரிவில் மிகப்பெரிய சரிவு என்பதில் சந்தேகமேயில்லை.

இவரைத் தவிர, தற்போது அணியில் இருக்கும் ஒரே வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே மட்டுமே. மற்ற ஃபாஸ்ட் பவுலர்கள் அனைவரும் இந்தியர்களே. ஆகையால், லுங்கிக்கு பதிலாக மாற்று பவுலரை களமிறக்கிய வேண்டிய கட்டாயம் சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டு உள்ளது.

கடந்த சீசனில் லுங்கி ங்கிடியின் பந்துவீச்சில் பெரிதும் இம்ப்ரஸ் ஆனவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். லுங்கியின் வேரியேஷன் காட்டும் பந்துவீச்சு, லைன் அன்ட் லென்த் ஆகியவற்றில் தோனிக்கு பரம திருப்தி இருந்தது. அடுத்த சில ஆண்டுகளுக்கு சிஎஸ்கேவுக்கான நிரந்தர ஃபாஸ்ட் பவுலர் கிடைத்துவிட்டார் என்ற ரீதியிலேயே ங்கிடி மீதான தோனியின் அணுகுமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Chennai Super Kings Ipl Lungi Ngidi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment