csk match csk dhoni sixer : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் 2020 தொடரில் இதுவரை 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது சிஎஸ்கே அணி.
CSK IS BACK :
நேற்றைய ஆட்டத்தில், சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான 29வது லீக் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த சீசனில் இது தான் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்யும் போட்டி. சாம் கர்ரன் துவக்க வீரராக களமிறங்கினார்.சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை அடித்தது.
சென்னை அணியில் சாம் குர்ரான் 31 ரன்களையும், அம்பதி ராயுடு 41 ரன்களும், ஷேன் வாட்சன் 42 ரன்களும் அடித்தனர். இதையடுத்து 168 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 57 ரன்கள் அடித்தார்.
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற போது 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை எடுத்து அசத்தினார் டுவைன் பிராவோ.பேட்டிங்கில் 25 ரன்கள், பீல்டிங்கில் 2 கேட்சுகள் பிடித்தது, பந்துவீசி முக்கிய விக்கெட்டை வீழ்த்தியது என ஆல்ரவுண்டராக ஜொலித்த ரவிந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.தோனி தனது வின்டேஜ் ஷாட்களை ஆடி பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து(ஒருசிக்ஸர்,2பவுண்டரி) நடராஜன் பந்துவீச்சில் தோனி விக்கெட்டை இழந்தார்.
ஐபிஎல் 2020 தொடரில் இதுவரை 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 6 ஆவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துள்ளது தோனி தலைமை. சிஎஸ்கே அணி இதுவரை 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு தொடர்ந்து 2-வது தோல்வி. ராஜஸ்தான் அணிக்கு எதிராக திவேத்தியா, பராக் ஆட்டத்தால் வெற்றியைக் கோட்டை விட்ட சன்ரைசர்ஸ் இந்த போட்டியிலும் சேஸிங் செய்ய முடியாமல் தோற்றது. சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 5-வது இடத்தில் இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil