CSK skipper MS Dhoni Advise Sri Lanka board, Matheesha Pathirana ODI debut Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனியின் அறிவுரையை இலங்கை கிரிக்கெட் வாரியம் அலட்சியம் செய்த நிலையில், ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Advertisment
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை முத்தமிட்டது.
சென்னை அணி கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனா. 21 வயது வீரரான இவரை தோனி தான் அடையாளப்படுத்தினார். கடந்த சீசனில் ஆடும் லெவனில் களமிறங்கும் வாய்ப்பையும் கொடுத்தார். அவர் நம்பிக்கையை காப்பாற்றிய பதிரனா நடப்பு சீசனில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். 14 போட்டிகளில் விளையாடி இருந்த அவர் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
தோனி அறிவுரை
Advertisment
Advertisements
இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி இளம் வேகப்புயலான மதீஷா பதிரனாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு சில அறிவுரைகளை வழங்கி இருந்தார். அவற்றில், அவர் குறைந்தபட்சம் டி20 போட்டியில் மட்டும் பயன்படுத்த வேண்டும், ஒருநாள் போட்டிகளில் முக்கிய தொடர்களில் அவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். மேலும், டெஸ்ட் போட்டிக்கு பதிரனாவை ஆடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். ஐசிசி தொடர்களில் பதிராணாவை பயன்படுத்துங்கள், பதிரனா இலங்கை அணியின் சொத்து என்றும் கேப்டன் தோனி பாராட்டி இருந்தார்.
இலங்கை வாரியம் அலட்சியம்
இந்த நிலையில், தோனியின் அறிவுரையை இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்கவில்லை. இதனால் முக்கியத்துவம் இல்லாத ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பதிரனாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் விளையாட வைத்தது. ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு நாட்களில் பதிரனாவை அவசர அவசரமாக தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
ஐ.பி.எல்-லில் கலக்கியது போல் பதிரனா ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி 66 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதாவது ஒரு ஓவருக்கு சுமார் 8 ரன்கள் பதிரனா விட்டுக்கொடுத்தார். இதனால் இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிஎஸ்கே-வில் சிறப்பாக செயல்பட்ட பதிரனா இலங்கை அணிக்கு வந்ததும் எப்படி சொதப்பினார் என்று பலரும் தங்களது சந்தேகத்தை கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்துள்ள இந்திய ரசிகர்கள், பதிரானாவை எப்படி பயன்படுத்துவது என்பது தோனிக்கு நன்றாக தெரிந்திருந்தது.அது உங்கள் அணி வீரர்களுக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் பதிராணாவை இது போன்ற போட்டிகளில் விளையாடினால் அவருடைய பந்துவீச்சு பாதிக்கப்படும் என்றும் தோனி சொன்னது போல் கேட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதோடு, தயவு செய்து பதிரானாவை இதுபோன்ற போட்டிகளில் விளையாட வைக்காமல் அவருக்கு போதிய ஓய்வு கொடுங்கள் என்றும் தோனி சொல்வதைக் கேளுங்கள் என்று சிஎஸ்கே ரசிகர்கள் அறிவுரை கூறியிருக்கின்றனர்.
🎉🏏 Exciting moment for Matheesha Pathirana as he receives his One Day International cap from skipper Dasun Shanaka! 🙌#SLvAFGpic.twitter.com/2EaBAXYwzC
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 2, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil