Advertisment

நியூசி., தொடக்க வீரருக்கு காயம்... சி.எஸ்.கே-வுக்கு பெரும் பின்னடைவு!

நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே ஐ.பி.எல் தொடரின் இந்த சீசனின் (ஐ.பி.எல் 2024) முதல் பாதியில் இருந்து விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
CSK opener Devon Conway ruled out of IPL 2024 until May with injury Tamil News

டெவோன் கான்வே-வுக்கு - ஐ.பி.எல் 2024 தொடரில் இருந்து விலகல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai Super Kings | Devon Conway | IPL 2024: 17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதற்கட்ட  அட்டவணை வெளியாகிய நிலையில், சென்னையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்.பி.சி அணியுடன் மல்லுக்கட்டுகிறது. 

Advertisment

இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான 10 அணிகளும் தங்களது வீரர்களுடன் பயிற்சி அமர்வுகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு சில வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். 

இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே-வுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் வரவிருக்கும் இந்த சீசனின் (ஐ.பி.எல் 2024) முதல் பாதியில் இருந்து விலகியுள்ளார். 

கடந்த ஆண்டு (ஐ.பி.எல் 2023) நடந்த தொடரில் அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது கை தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்து முடிந்த டி20 தொடரில் பங்கேற்றார். இந்த தொடரின் போது அவரது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் 32 வயதான அவர் தற்போது நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வாரம் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

"பல ஸ்கேன்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றி, காயம் குணமடைய குறைந்தபட்சம் 8 வாரங்கள் ஆகும் முடிவு என செய்யப்பட்டது." என்று நியூசிலாந்து கிரிக்கெட் (NZC) தங்கள் அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

நாங்கள் அனைவரும் டெவனுக்காக இருக்கிறோம். அவர் நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக இருக்கிறார், மேலும் அவரது இருப்பை நாங்கள் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இழக்கப் போகிறோம், ”என்று தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறினார்.

கான்வே தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உடன் வலிமையான ஜோடியை உருவாக்கியிருந்தார். தற்போது அவர் இல்லாதது, சென்னை அணி தங்கள் தொடக்க ஜோடியை அமைப்பை மறுகட்டமைக்க கட்டாயப்படுத்தும். இந்த சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ரச்சின் ரவீந்திர கான்வே இடத்தில் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸுடனான ஐபிஎல் தொடரில் இரண்டு சீசன்களில், கான்வே 23 போட்டிகளில் 924 ரன்கள் எடுத்தார். அவரது சராசரி - 48.63 ஆகவும், ஸ்ட்ரைக்-ரேட் 141.28 ஆகவும் இருந்தது. ஒன்பது அரைசதங்களை அடித்துள்ள அவர், 2023 இல் சென்னை அணிக்காக அதிக ரன் எடுத்தவர் ஆவார். இறுதிப் போட்டியில் 47 ரன்கள் உட்பட, 16 போட்டிகளில் இருந்து 672 ரன்கள் குவித்து அசத்தினார். 

கான்வே இல்லாத நிலையில், நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஹென்றி நிக்கோல்ஸை மாற்றியுள்ளது. காயம் அடைந்த வில்லியம் ஓ'ரூர்க்கிற்குப் பதிலாக அணியில்லாத பென் சியர்ஸையும் இணைத்துக்கொண்டது, சீமர் நீல் வாக்னருக்கு ஓய்வில் இருந்து திரும்புவதற்கு எதிராக அந்த அணி இந்த முடிவெடுத்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK opener Devon Conway ruled out of IPL 2024 until May with injury

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Devon Conway IPL 2024 Chennai Super Kings
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment