Advertisment

ருதுராஜை விட அவரது மனைவிக்கு சென்னை மீது அதிக பாசம்: என்ன செய்தார் பாருங்க!

ருதுராஜ் தனது மனைவி உத்கர்ஷா தங்களது நிச்சயதார்த்தத்தை சென்னை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளதாக தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK opener Ruturaj Gaikwad dedicates his engagement to Chennai people Tamil News

Ruturaj Gaikwad engagement photos. (Instagram/Screengrab)

Ruturaj Gaikwad's engagement dedication Tamil News: ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவர் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் அம்மாநில அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் களமாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் 2020ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021ல் சாம்பியன் பட்டம் வென்றபோது அதிக ரன்கள் (16 போட்டிகளில் 635 ரன்கள்) குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தினர்.

Advertisment

இதன்பின்னர், ருதுராஜ் ஜூலை 2021ல் இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். 2021 முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் இருந்து டி20 மற்றும் லிஸ்ட் ஏ ஆகியவற்றில் மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். 2022 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டிக்கு மகாராஷ்டிராவை வழிநடத்தினார்.

publive-image

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் 15 போட்டிகளில் விளையாடி 43.38 சராசரியுடன் 564 ரன்கள் குவித்தார். தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வரும் பிரீமியர் லீக் (எம்.பி.எல்) தொடருக்கான புனே அணியை ருதுராஜ் வழிநடத்தி வருகிறார். அவரை அந்த அணி நிர்வாகம் சுமார் ரூ.14.8 கோடிக்கு வாங்கியது. அதன் மூலம் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

திருமணம்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் தனது காதலி உத்கர்ஷா பவாரை கடந்த 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். உத்கர்ஷா பவாரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஆவார். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.

அர்ப்பணிப்பு

இந்த நிலையில், ருதுராஜ் – உத்கர்ஷா ஜோடி பாரம்பரிய உடையில் ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும், ருதுராஜ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனது மனைவி உத்கர்ஷா தங்களது நிச்சயதார்த்தத்தை சென்னை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். "உத்கர்ஷா எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் எனது பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே எனது வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைப் பற்றி சரியாகத் தெரிந்தவர்.

அந்த நகரத்தின் முக்கியத்துவம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என் வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதன் காரணமாக, முழு பாரம்பரிய மஹாராஷ்டிர நிச்சயதார்த்தத்தையும் சென்னை மக்கள் மற்றும் தென்னிந்திய கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்க அவர் முடிவு செய்தார்! நான் உன்னை காதலிக்கிறேன் ! உத்கர்ஷா 💛,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்திய வீரரான ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் முடிவடைந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டார்.

“அவர் (ஜெய்ஸ்வால்) தனது திருமணத்தின் காரணமாக பறக்க முடியாது என்று கெய்க்வாட் எங்களிடம் தெரிவித்ததால் அவர் (ஜெய்ஸ்வால்) இந்திய அணியில் இணைவார். ஜூன் 5க்குப் பிறகு அவர் அணியில் சேர முடியும். (ஆனால்) பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு அழைப்பை எடுத்தார். தேர்வாளர்களை மாற்று வீரரை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். எனவே, ஜெய்ஸ்வால் விரைவில் லண்டனுக்குச் செல்வார்” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியிருந்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Chennai Ruturaj Gaikwad Chennai Super Kings Csk Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment