Advertisment

'எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் மஹி பாய்': வங்கதேசம் திரும்பிய சி.எஸ்.கே வீரர் உருக்கமான பதிவு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தனது தாயகமான வங்கதேசம் திரும்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
CSK pacer Mustafizur Rahman leaves IPL 2024 with a special gift from MS Dhoni Tamil News

தனது சொந்த நாடு திரும்பும் முன் சி.எஸ்.கே அணியின் ஜாம்பவான் எம்.எஸ் தோனியை முஸ்தாபிசுர் சந்தித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Mustafizur Rahman | MS Dhoni | Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான். அவர் இதுவரை சென்னை அணி ஆடிய 10 போட்டிகளில் 9ல் களமாடி 14 விக்கெட்டை கைப்பற்றினார். 

Advertisment

மொத்தமாக 34.2 ஓவர்கள் வீசிய அவர் 318 ரன்களை விட்டுக்கொடுத்து 22.71 சராசரியுடன், 9.26 எக்கனாமியில் வைத்துள்ளார். 14 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரர்கள் அணிந்திருக்கும் ஊதா நிற தொப்பியை சென்னை அணியின் முந்தைய போட்டியின் போது அவர் அணிந்தார். 

இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சி.எஸ்.கே வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தாயகம் திரும்பியுள்ளார். இதனையடுத்து, அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமனா பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "எல்லாவற்றிற்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டது ஒரு சிறப்பு உணர்வாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. உங்கள் மதிப்புமிக்க உதவிக்குறிப்புகளைப் பாராட்டுகிறேன், நான் அந்த விஷயங்களை நினைவில் கொள்கிறேன். விரைவில் உங்களை மீண்டும் சந்தித்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று அவர் பதிவிட்டுள்ளார். 

மேலும், தனது சொந்த நாடு திரும்பும் முன் சி.எஸ்.கே அணியின் ஜாம்பவான் எம்.எஸ் தோனியை முஸ்தாபிசுர் சந்தித்தார். அப்போது அவருக்கு "வித் லவ் டு ஃபிஸ்" என்று தோனி தனது கையப்பமிட்ட நம்பர் 7 ஜெர்சி சி.எஸ்.கே அணி ஜெர்சியை பரிசளித்தார். அந்த புகைப்படத்தையும் முஸ்தாபிசுர் ரஹ்மான் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai Super Kings Mustafizur Rahman IPL 2024 Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment