IPL 2024 Auction | Chennai Super Kings:17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) துபாயில் நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர்.
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணி, இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அசத்திய நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவை ரூ. 1. 80 கோடிக்கு எடுத்தது.
தொடர்ந்து, இந்திய ஆல்-ரவுண்டர் வீரரான ஷர்துல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. இதன்பிறகு, நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை ரூ. 14 கோடிக்கு சென்னை அணி அதிரடியாக வாங்கி அசத்தியது.
இதன்பிறகு, சென்னை அணி இந்திய வீரரான சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடிக்கு வாங்கியது. இதற்கிடையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் (ரூ.2 கோடி), அவனிஷ் ராவ் ஆரவல்லி (ரூ.20 லட்சம்) ஆகியோரையும் ஏலத்தில் வசப்படுத்தியது சென்னை அணி.
சி.எஸ்.கே பிளேயிங் 11 எப்படி?
இந்த மினி ஏலத்தில் சென்னை அணி அசத்தலாக செயல்பட்ட நிலையில், ஏராளமான ஆல்-ரவுண்டர்களுடன் அணி அசுர பலம் பெற்றுள்ளது. பேட்டிங் வரிசை தொடக்க வீரர் முதல் 10வது வீரரை வரையில் நீண்டு வலுவாக உள்ளது.
சி.எஸ்.கே ஐ.பி.எல் 2024 ஆடக்கூடிய உத்தேச லெவன்:
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரச்சின் ரவீந்திரா/மிட்செல் சான்ட்னர், சிவம் துபே, எம்.எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், மதீஷ் பத்ரானா/முஸ்தாபிசுர் ரஹ்மான்.
ஐபிஎல் 2024 ஏலத்தில் வாங்கப்பட்ட சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்:
ரச்சின் ரவீந்திரா (ரூ. 1.8 கோடி), ஷர்துல் தாக்கூர் (ரூ. 4 கோடி), டேரில் மிட்செல் (ரூ. 14 கோடி), சமீர் ரிஸ்வி (ரூ. 8.40 கோடி), முஸ்தபிசுர் ரஹ்மான் (ரூ. 2) கோடி), அவனிஷ் ராவ் ஆரவெல்லி (ரூ. 20 லட்சம்).
சி.எஸ்.கே ஐ.பி.எல் 2024 அணி வீரர்கள் பட்டியல்
விக்கெட் கீப்பர்கள்: எம்.எஸ் தோனி, டெவோன் கான்வே (நியூசிலாந்து), அவனிஷ் ராவ் ஆரவெல்லி.
பேட்டர்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி.
ஆல்ரவுண்டர்கள்: மொயீன் அலி (இங்கிலாந்து), சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் (நியூசிலாந்து), அஜய் மண்டல், நிஷாந்த் சிந்து, ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), டேரில் மிட்செல் (நியூசிலாந்து), ஷர்துல் தாக்கூர்.
பந்துவீச்சாளர்கள்: தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா (இலங்கை), சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா (இலங்கை), முஸ்தபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்), முகேஷ் சவுத்ரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.