சி.எஸ்.கே வீரருக்கு கெட்டி மேளம்... வைரல் போட்டோஸ்!

தனது பள்ளிக்கால தோழி நபா கட்டம்வாரை திருமணம் செய்துள்ளார் துஷார் தேஷ்பாண்டே. இந்த ஜோடிக்கு கிரிக்கெட் உலகினரும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

தனது பள்ளிக்கால தோழி நபா கட்டம்வாரை திருமணம் செய்துள்ளார் துஷார் தேஷ்பாண்டே. இந்த ஜோடிக்கு கிரிக்கெட் உலகினரும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
CSK star Tushar Deshpande gets married and viral photos Tamil News

பள்ளிக்கால தோழி நபா கட்டம்வாரை திருமணம் செய்தார் சி.எஸ்.கே வீரர் துஷார் தேஷ்பாண்டே.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00
Chennai Super Kings | Tushar Deshpande: சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருபவர் துஷார் தேஷ்பாண்டே மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவரை 2022ம் ஆண்டில் நடந்த மெகா ஏலத்தில் சென்னை அணி அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது. 
Advertisment

ஒட்டுமொத்தமாக 23 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள துஷார் தேஷ்பாண்டே 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பு சீசனில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும், சென்னை அணிக்காக முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்து இருந்தார். 

இந்நிலையில், தனது பள்ளிக்கால தோழி நபா கட்டம்வாரை திருமணம் செய்துள்ளார் துஷார் தேஷ்பாண்டே. இந்த ஜோடிக்கு கிரிக்கெட் உலகினரும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். 

Advertisment
Advertisements

திருமணம் தொடர்பான புகைப்படத்தை துஷார் தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Super Kings

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: