/tamil-ie/media/media_files/uploads/2023/05/CSK-tirupati.jpg)
IPL 2023 Finals
ஐ.பி.எல் 16-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சி.எஸ்.கே அணி 5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த திங்கட்கிழமை (மே 29) தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்று ஐ.பி.எல் கோப்பையை வென்றது. நாடு முழுவதும் உள்ள சி.எஸ்.கே ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடினர்.
#NEWSUPDATE : ஐபிஎல் கோப்பையுடன் தி.நகர் பெருமாள் கோவிலுக்கு வந்த CSK நிர்வாகம்#IPLTrophy#IPL2023Final#CSK#Chennai#NewsTamil24x7pic.twitter.com/9dGkMNB4i2
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) May 30, 2023
இந்நிலையில் சென்னை கொண்டு வரப்பட்ட ஐ.பி.எல் கோப்பையை சி.எஸ்.கே அணி உரிமையாளர்கள் சென்னை தி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து சி.எஸ்.கே அணி நிர்வாகத்தை சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் துணைத் தலைவர் என்.சீனிவாசன் கேப்டன் தோனி குறித்துப் பேசினார். "நீங்கள் ஒரு அருமையான கேப்டன். அதிசயம் செய்துள்ளீர்கள். அது உங்களால் மட்டுமே முடியும். சி.எஸ்.கே அணி வீரர்களை கண்டு பெருமிதம் கொள்கிறோம் என்றார்.
தொடர்ந்து, இந்த சீசன் ரசிகர்கள் தோனியை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.