ஸ்டாலின் கையில் ஐ.பி.எல் கோப்பை: நேரில் வழங்கிய சி.எஸ்.கே நிர்வாகம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் IPL - 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ்,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் களம் இறங்கியது.
Advertisment
பத்து அணிகளுக்குள் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனியின் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையாக ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. சென்னை அணி வெற்றி பெற்றதும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரவீந்திர ஜடேஜாவிற்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் IPL - 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் தலைமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil