ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக ரசிகர்கள் ’வா தல’ என்று வரவேற்றனர்.
2023ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்துடன், முன்னாள் சாம்பியனான சென்னையுடன் மோத உள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடருக்கான சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் மேள, தாளங்கள் முழங்க, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தற்போது நடக்கும் ஐபிஎல் சீசனுக்கான சென்னை அணியின் கேம்ப் இன்று தொடங்க உள்ளது. தோனியை போல் ரஹானே, ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களும் சென்னை வந்தடைந்தனர்.