scorecardresearch

தோனி செய்த தப்பு; நெட்டிசன்களுடன் இணைந்து கலாய்த்த சி.எஸ்.கே

சென்னை அணியும் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோனி குழம்பியதை ட்ரோல் செய்து மீம்ஸ்சை பகிர்ந்துள்ளது.

CSK Troll MS Dhoni After Confusion Over Shivam Dube's Place in playing 11 vs DC Tamil News
CSK hialriously troll MS Dhoni after he left everyone confused by replacing Shivam Dube from CSK's playing XI against DC Tamil News

CSK’s official Twitter handle troll captain MS Dhoni Tamil News: இந்திய மண்ணில் அரங்கேறி வரும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடந்த 55-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் அதிகபட்சமாக 12 பந்துகளில் 3 சிக்ஸர்களை ஷிவம் துபே 25 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் களமாடிய கேப்டன் தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய டெல்லி அணியால் நிர்ணயிப்பட்ட 20 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

குழப்பம்

நடப்பு ஐபிஎல் தொடரில் ரெட்-ஹாட் ஃபார்மில் இருந்து வரும் சென்னை அணியின் துபே தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் களமிறங்கும் அனைத்து போட்டிகளிலும் குறைந்தபட்சம் 2 சிக்ஸர்களையாவது பறக்க விடுகிறார். அதனால் அவரை சிக்ஸர் துபே என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆட்டம் தொடங்கும் முன்பே தொடக்க லெவன் அணியில் அவரது இடம் குறித்து அதிக குழப்பம் இருந்தது. டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பின்னர், அணியின் பிளேயிங் லெவனில் துபேவுக்குப் பதிலாக அம்பதி ராயுடு சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறினார். ஆனால், அணி வெளியிட்ட வீரர்கள் பட்டியலில் ராயுடுவுடன் துபேயின் பெயர் 5 வது இடத்தில் இருந்தது.

சி.எஸ்.கே ட்ரோல்

டாஸில் தோனி செய்த தவறு அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை பகிரத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, சென்னை அணியும் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோனி குழம்பியதை ட்ரோல் செய்து மீம்ஸ்சை பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில் உள்ள 2 புகைப்படங்களில் முதல் புகைப்படத்தில், தோனி தனது பக்கத்தில் துபேயுடன் பேட்டிங் பயிற்சி செய்கிறார். ஆனால் 2வது புகைப்படத்தில், துபேவை காணவில்லை. அந்த பதிவின் கேப்சனில் ‘தல அட் பிராக்டீஸ்’ மற்றும் ‘தல அட் டாஸ்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Csk troll ms dhoni after confusion over shivam dubes place in playing 11 vs dc tamil news