Chennai Super Kings vs Delhi Capitals, IPL 2023 Match 55 Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இன்று இரவு 7:30 மணிக்கு அரங்கேறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
புள்ளி பட்டியலில் 13 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேற தங்களது வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ளும் முனைப்புடன் உள்ளது. அதே வேளையில் 4 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி வெற்றிக்காக போராடும்.
இந்நிலையில், டெல்லி அணி தனது டிவிட்டர் பக்கத்தில் இரு அணிகளின் கேப்டன்களான தோனி மற்றும் வார்னர் கையில் இளநீருடன் பாரம்ப்பரிய உடையான வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில், “வணக்கம் வாழவைக்கும் சென்னை! இன்னைக்கு மேட்ச்-க்கு ரெடியா? என பதிவிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
வணக்கம் வாழவைக்கும் சென்னை! இன்னைக்கு Match-ku ready ah? 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) May 10, 2023
🫸🏼💛💙🫷🏼#CSKvDC is H. E. R. E. #YehHaiNayiDilli #IPL2023 @davidwarner31 @msdhoni pic.twitter.com/tdIMzZdRCW
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil