CSK vs DC ipl 2023 – MS Dhoni Entry – Chennai chapauk Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, 168 ரன்கள் வெற்றி கொண்ட இலக்கை துரத்திய டெல்லி அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடித்து வருகிறது.
பிளே ஆஃப் உறுதி
நடப்பு சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, அதில் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 15 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னையில்) மற்றும் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் (டெல்லியில்) அணிகளை சந்திக்கிறது. இந்த போட்டிகளிலும் வெற்றியை ருசித்தால் சென்னை அணி டாப் 2 இடத்திற்குள் நிச்சயம் இருக்கும்.
மேலும், இந்த 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதியாகி விடும். இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

எகிறி போன டெசிபல்
சென்னை அணியின் கோட்டையாக சேப்பாக்கம் மைதானம் இருந்து வரும் நிலையில், அந்த கோட்டையின் ராஜாவான கேப்டன் தோனி டெல்லி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் களமிறங்கிய போது ரசிகர்களின் சத்தம் விண்ணைப் பிளந்தது. அவர் களத்திற்குள் நுழைந்த போது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்தில் அறிமுக பாடலான, ‘வெற்றி கொடி கட்டு… மலைகளை முட்டும் வரை முட்டு… லட்சியம் எட்டும் வரை எட்டு… படையெடு படையப்பா…’ பாடல் ஒலிக்க, அந்த தருணத்தில் ரசிகர்கள் எழுப்பிய சத்தம் விண்ணை முட்டியது.

இந்நிலையில், மைதானத்தில் ரசிகர்கள் எழுப்பிய சத்தம் எவ்வளவு என்பதை ரசிகர் ஒருவரின் ஸ்மார்ட்வாட்ச்-சில் வந்த எச்சரிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தின் அளவு 100 டெசிபில் என்று கணக்கிப்பட்டுள்ளது. மேலும், இந்த சத்தம் இன்னும் சில நிமிடங்கள் தொடர்ந்தால், தற்காலிக காது கேளாமை பிரச்சனை வரும் என்றும் ஸ்மார்ட்வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் நிரந்தர ‘ராஜா’ தோனி தான் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Never has the fall of the sixth wicket given more joy to a 🏠 crowd!
— JioCinema (@JioCinema) May 10, 2023
Enter No.7😎#ThalaDhoni #CSKvDC #IPLonJioCinema #TATAIPL #IPL2023 | @ChennaiIPL pic.twitter.com/ewgaQhIOqc
I’ve never witnessed anything like this at a cricket stadium, MS Dhoni walking out to bat on his home turf. The crowd even celebrated the previous wicket to just get him to the crease. pic.twitter.com/UOueq8GlSr
— David Brooke (@BrookeBack13) May 10, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil