scorecardresearch

‘அவர் வரல; நாங்க வந்துட்டோம்’ தோனியை தேடி மைதானம் வந்த புதுமணத் தம்பதி

கேப்டன் தோனியை திருமணத்திற்கு அழைத்ததாக கூறி பதாகையை ஏந்திய புதுமணத் தம்பதிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CSK vs DC IPL 2023, Newlyweds poster Tamil News
We invited MS Dhoni to our wedding: Newlyweds flaunt funny poster at CSK – DC Clash Tamil News

CSK vs DC IPL 2023 – MS Dhoni Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு தொடங்கிய55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால், டெல்லி அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்திய டெல்லி அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தோனியை திருமணத்திற்கு அழைத்த புதுமணத் தம்பதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீண்ட காலமாக வழிநடத்தி வரும் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி நடப்பு சீசனுடன் ஓய்வு பெற உள்ளதாக கருத்து பரவி வருகிறது. இதனால், அவரை நேரில் காண மைதானத்திற்கு திரண்டு வரும் சென்னை அணியின் ரசிகர்கள் எண்ணிக்கை போட்டிக்கு போட்டி அதிகரித்த வண்ணம் இருக்கிறார்கள். சென்னை அணி இந்தியாவில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அங்கெல்லாம் ரசிகர்கள் கடல் அலை போல் திரள்கிறார்கள்.

அவ்வகையில், இன்றைய ஆட்டம் நடக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் எண்ணிக்கையில் குறைவில்லாமல் உள்ளனர். இந்நிலையில், கேப்டன் தோனியை திருமணத்திற்கு அழைத்ததாக கூறி பதாகையை ஏந்திய புதுமணத் தம்பதிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சென்னை அணி அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

தங்களது திருமணத்தில் கலந்து கொள்ள தோனி வந்தால் என்ன நடந்தது, என்று அந்த பேனரில் எழுதியுள்ளனர். “எங்கள் திருமணத்திற்கு எம்எஸ் தோனியை அழைத்தோம். அவரால் வர முடியவில்லை. அதனால் நாங்கள் இங்கு வந்தோம்” என்று அந்த புதுமணத் தம்பதிகள் முகத்தில் புன்னகையுடன் பதாகையை ஏந்தியுள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Csk vs dc ipl 2023 newlyweds poster tamil news

Best of Express