IPL 2023,Chennai vs Delhi Live Score Updates in Tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
Indian Premier League, 2023MA Chidambaram Stadium, Chennai 03 June 2023
Chennai Super Kings 167/8 (20.0)
Delhi Capitals 140/8 (20.0)
Match Ended ( Day – Match 55 ) Chennai Super Kings beat Delhi Capitals by 27 runs
இந்த ஆட்டத்தில் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, சென்னையில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்குவாட் மற்றும் டெவன் கான்வே ஆகியோர் களமிறக்கினர். இந்த ஜோடிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்காத நிலையில், கான்வே 10 ரன்னிலும், கெய்குவாட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த மொயயீன் அலி 7 ரன்னிலும், ரகானே 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே, அம்பதி ராயுடு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடியில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட துபே 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ராயுடு 17 பந்துகளில் 23 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை 16.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 126 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. களத்தில் இருந்த ஜடேஜா – கேப்டன் தோனி கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில், ஜடேஜா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
டெல்லியின் கலீல் அகமது வீசிய 19வது ஓவரை வெளுத்து வாங்கிய கேப்டன் தோனி 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதனால், டெல்லி அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, குல்தீப் யாதவ், லலித் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Fight Night ahead! 💪
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
🦁- 1️⃣6️⃣7️⃣#CSKvDC #WhistlePodu 💛🦁 pic.twitter.com/QTD6JUtHpK
தொடர்ந்து 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் வார்னர் – பிலிப் சால்ட் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் வார்னர் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, மறுமுனையில் இருந்த பிலிப் சால்ட் 17 ரன்களும், களத்தில் இருந்த மிட்செல் மார்ஷ் 5 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே – ரூசோ ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தனர். இந்த ஜோடியில் மணீஷ் பாண்டே 27 (29) ரன்களில் வெளியேறினார். ரிலே ரூசோவும் 35 (37) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய அக்சர் பட்டேல் 21 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த ரிப்பல் படேல் 10 (16) ரன்களும், அடுத்து களமிறங்கிய லலித் யாதவ் 12 (5) ரன்களும் எடுத்து வெளியேறினர்.
இறுதியில் ஹக்கிம் கான் 2 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில், டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
Team spirit and process. 💪🏻#CSKvDC #WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/McIl54OnQ3
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
All about today: Swing, Shine and Sling! 🔥#CSKvDC #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/d0VPXw67DS
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
The one who does everything on that shield!#CSKvDC #WhistlePodu #Yellove @imjadeja pic.twitter.com/cpJDord04a
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் துரத்திய நிலையில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை.
சென்னை அணியில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி வந்த ரிலீ ரோசோவ் 35 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 77 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியின் ரிலீ ரோசோவ் – மனீஷ் பாண்டே ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
13 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 84 தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியின் ரிலீ ரோசோவ் – மனீஷ் பாண்டே ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணியின் வெற்றிக்கு 66 பந்துகளில் 105 தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் பூஜ்ஜிய ரன்னிலும், பிலிப் சால்ட் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு பவுண்டரியை விரட்டிய மிட்செல் மார்ஷ் 5 ரன்னில் அவுட் ஆனார். தற்போது களத்தில் ரிலீ ரோசோவ் – மனீஷ் பாண்டே ஜோடி விளையாடி வருகின்றனர்.
5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக துபே 25 ரன்கள் எடுத்தார். டெல்லியின் கலீல் அகமது வீசிய 19வது ஓவரை வெளுத்து வாங்கிய கேப்டன் தோனி 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், டெல்லி அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, குல்தீப் யாதவ், லலித் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தோனி – ரவீந்திர ஜடேஜா, ஜோடி சேர்ந்து களத்தில் விளையாடி வருகின்றனர்.
19 ஓவர்கள் முடிவில் சென்னை 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தோனி – ரவீந்திர ஜடேஜா, ஜோடி சேர்ந்து களத்தில் விளையாடி வருகின்றனர்.
18 ஓவர்கள் முடிவில் சென்னை 6 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தோனி – ரவீந்திர ஜடேஜா, ஜோடி சேர்ந்து களத்தில் விளையாடி வருகின்றனர்.
17 ஓவர்கள் முடிவில் சென்னை 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அதிரடியாக விளையாடி வந்த ராயுடு 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் அம்பதி ராயுடு – ரவீந்திர ஜடேஜா, ஜோடி சேர்ந்து களத்தில் விளையாடி வருகின்றனர்.
16 ஓவர்கள் முடிவில் சென்னை 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் அம்பதி ராயுடு – ரவீந்திர ஜடேஜா, ஜோடி சேர்ந்து களத்தில் விளையாடி வருகின்றனர்.
15 ஓவர்கள் முடிவில் சென்னை 5 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உடன் ரஹானே ஜோடி சேர்ந்து களத்தில் விளையாடி வருகின்றனர்.
6 ஓவர்கள் முடிவில் சென்னை ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உடன் ரஹானே ஜோடி சேர்ந்து களத்தில் விளையாடி வருகின்றனர்.
5 ஓவர்கள் முடிவில் சென்னை ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டெவோன் கான்வே 10 ரன்னில் அக்சர் படேல் பந்தில் எல்.பி.டபிள்யூ அவுட் ஆகி வெளியேறினார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
3 ஓவர்கள் முடிவில் சென்னை விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டெல்லி அணி பந்துவீசி வருகிறது.
சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர். 2 ஓவர்கள் முடிவில் சென்னை விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதனால், டெல்லி பந்துவீசும்.
🚨 Toss Update 🚨@ChennaiIPL win the toss and elect to bat first against @DelhiCapitals. Follow the match ▶️ https://t.co/soUtpXQjCX #tataipl | #cskvdc pic.twitter.com/pdB9vcbOuu
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
டெல்லி கேப்பிடல்ஸ் பிளேயிங் லெவன்:
டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் சர்மா
A look at the Playing XIs of the two sides 👌🏻👌🏻Follow the match ▶️ https://t.co/soUtpXQjCX #tataipl | #cskvdc pic.twitter.com/nXbdEXvWPJ
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
சென்னையின் சூழல் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். வெப்பநிலை 28 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் இணைந்துள்ளார். அதனால் அவர் நாளைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை. தென்ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நார்ட்ஜே தனது சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். எனவே, அவரும் இன்றைய போட்டியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை.
டேவிட் வார்னர் (கேப்டன்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
இம்பாக்ட் பிளேயர்: லலித் யாதவ்
சென்னை அணி அதன் முந்தைய ஆட்டத்தின் அதே லெவன் வீரர்களுடன் களமிறக்கக்கூடும். அவர்கள் சேஸிங் செய்தால் அம்பதி ராயுடுவை அவர்களின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்குவார்கள். ஆல்ரவுண்டர் வீரரான பென் ஸ்டோக்ஸ் தனது காயத்தில் இருந்து குணமடைந்து இருந்தாலும், அவர் இன்றைய போட்டியிலும் இடம் பெற வாய்ப்பில்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, மற்றும் மதீஷா பத்திரனா.
சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த சீசனில் இங்கு சென்னை அணி ஆடியுள்ள 5 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி கண்டது. 2 ஆட்டங்களில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதாவது வெற்றி, தோல்வியை மாறி, மாறி பெற்று வருகிறது.
கடந்த போட்டிகளை போல இந்த மோதலுக்கும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதால் உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
ஐ.பி.எல். தொடரில் சென்னை – டெல்லி அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17 ஆட்டங்களில் சென்னை அணியும், 10 ஆட்டங்களில் டெல்லி அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன.
சென்னை – டெல்லி அணிகள் சேப்பாக்கத்தில் மோதிய கடைசி 6 ஆட்டங்களில் சென்னை அணியே வெற்றி பெட்டுள்ளது. டெல்லி சேப்பாக்கத்தில் கடைசியாக 2010ல் வெற்றி பெற்றது. இதனால், உள்ளூரில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்து 'பிளே-ஆப்' சுற்றை நோக்கி தொடர்ந்து முன்னேற சென்னை அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும்.
அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும் என்பதால் வெற்றிக்காக எல்லா வகையிலும் டெல்லி அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய போட்டி குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி நேற்று அளித்த பேட்டியில், 'டெல்லி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று நல்ல நிலையில் உள்ளது. எனவே அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர். அந்த அணியை வீழ்த்த வேண்டும் என்றால் எங்களது 100 சதவீத ஆட்டதிறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்' என்று தெரிவித்தார்.
டெல்லி அணியில் பேட்டிங்கில் டேவிட் வார்னர் (4 அரைசதத்துடன் 330 ரன்கள்), பில் சால்ட், மனிஷ் பாண்டேவும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மாவும் வலு சேர்க்கிறார்கள். அக்ஷர் பட்டேல் (246 ரன்கள், 7 விக்கெட்), மிட்செல் மார்ஷ் (120 ரன்கள், 9 விக்கெட்) ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக அசத்தி வருகிறார்கள்.
டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றிகளை குவித்து எழுச்சி கண்டது. கடைசியாக பலம் பொருந்திய குஜராத், பெங்களூரு அணிகளை அடுத்தடுத்து போட்டு தாக்கியது அந்த அணிக்கு நிச்சயம் கூடுதல் நம்பிக்கையை கொடுத்து இருக்கும்.
சென்னை அணியில் டிவான் கான்வே (5 அரைசதத்துடன் 458 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் 3 அரைசதத்துடன் 384 ரன்கள்), ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 290 ரன்கள்), ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அம்பத்தி ராயுடு ஆட்டம் திருப்திகரமாக இல்லை. பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் 19 விக்கெட்களை எடுத்துள்ளார். தவிர, ரவீந்திர ஜடேஜா (15 விக்கெட்), பதிரானா (10 விக்கெட்) மொயீன் அலி, தீக்ஷனா, ஆகாஷ் சிங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 6ல் வெற்றி, 4ல் தோல்வி, ஒரு ஆட்டத்திற்கு முடிவு இல்லை என 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணி, அந்த இடத்தை தக்க வைக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றியைப் பெற வேண்டும்.
சென்னை அணியைப் பொறுத்தவரை, 5 முறை சாம்பியனான மும்பையை முந்தைய ஆட்டத்தில் வீழ்த்திய உற்சகத்துடனும், நம்பிக்கையுடனும் களமிறங்குவார்கள். சென்னை அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையில் இருக்க கூடுதல் பலம் சேர்க்கும்.
ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.