New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/05/X6bbTjvD8HayUDQIn2Q6.jpg)
ஐ.பி.எல். 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், சென்னை.
ஐ.பி.எல். 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், சென்னை.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:30 சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெறும் 17-வது ஆட்டத்தில் லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்து ஆடியது. டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் - கே.எல். ராகுல் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடி காட்ட முயன்ற ஜேக் ஃப்ரேசர் கலீல் அகமது வீசிய தொடக்க ஓவரில் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs DC LIVE Cricket Score, IPL 2025
இதன்பிறகு வந்த அபிஷேக் போரல் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரியை விரட்டி 33 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த கேப்டன் அக்சர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரியை விரட்டி 21 ரன் எடுத்த நிலையில் நூர் அகமது சுழலில் சிக்கி அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் ஆடிய கே.எல். ராகுல் - சமீர் ரிஸ்வி ஜோடியில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 20 ரன் எடுத்து சமீர் ரிஸ்வி அவுட் ஆனார்.
இதையடுத்து, களத்தில் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய கே.எல். ராகுல் 51பந்துகளில் 6பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அசுதோஷ் ஷர்மா ரன்-அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் ஆட்டமிழக்கமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களும், விப்ராஜ் நிகம் ஒரு ரன்னும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 183 ரன்கள் எடுத்தது. இதனால், சென்னை அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சி.எஸ்.கே பேட்டிங்
தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கினர். அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்னுக்கு அவுட் ஆகி நடையைக் கட்டினார். அவருக்குப் பின் வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னுக்கு அவுட் ஆனார். களத்தில் இருந்த தொடக்க வீரர் டெவோன் கான்வே ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 13 ரன்னில் அவுட் ஆனார்.
தற்போது விஜய் சங்கர் - சிவம் துபே ஜோடி ஆடி வருகிறார்கள். 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் 53 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஷிவம் தூபே 15 பந்துகளில் ஒரு பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்களும், ஜடேஜா 2 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், களமிறங்கிய தோனி, விஜய் சங்கருடன் இணைந்து விக்கெட் தடுப்பை நிறுத்தினார். ஆனாலும் அணியின் ஸ்கோர் உயராத நிலையில், இருவரும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக விஜய் சங்கர், ஒரு போட்டியை போல் பாலுக்கு பால் சராசரியான ரன்களை மட்டுமே குவித்தார்.
இதன் காரணமாக சென்னை அணியின் ஸ்கோர் மந்தமாக உயர்ந்த நிலையில், 40-க்கு மேற்பட்ட பந்துகளை சந்தித்த விஜய் சங்கர் அரைசதம் கடந்த நிலையில், மறுமுனையில் தோனியும் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு, 158 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கடைசி வரை களத்தில் இருந்த விஜய் சங்கர், 54 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன், 69 ரன்கள் எடுத்தும், தோனி 26 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 30 ரன்களும் எடுத்தும், களத்தில் இருந்தனர். இதன் மூலம் 4-வது போட்டியில் விளையாடிய சென்னை அணி, 3-வது தோல்வியை சந்தித்துள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
டெல்லி கேபிடல்ஸ்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 30 போட்டிகளில், சென்னை அணி 19 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.