Advertisment

இறுதி வரை போராடிய சென்னை; 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி!

DC VS CSK live match, live score and live updates and match highlights Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் தொடர் நெருக்கடியை கொடுத்த சென்னை அணி தோல்வியை தழுவியது.

author-image
WebDesk
New Update
csk vs dc live match in tamil: DC VS CSK live score, live updates and match highlights

ipl 2021, DC Vs CSK match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய 50வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் - ஃபாஃப் டு பிளெஸ்ஸி ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

Advertisment

அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயன்ற இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை ஓடவிட்டு 10 ரன்கள் சேர்த்த ஃபாஃப் டு பிளெஸ்ஸி அக்சர் படேல் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 2 பவுண்டரிகளை விளாசி 13 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் சென்னை அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை சேர்த்தது.

களத்தில் இருந்த ராபின் உத்தப்பா - மொயீன் அலி ஜோடியில் மொயீன் அலி 5 ரன்களுடனும் ராபின் உத்தப்பா 19 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த அம்பதி ராயுடு - கேப்டன் தோனி 5வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. மிகவும் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் தோனி அவேஷ் கான் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் கீப்பர் பண்ட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதற்கிடையில், நிதான ஆட்டத்தை தொடர்ந்திருந்த அம்பதி ராயுடு 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விளாசிய 40 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்தது. பந்து வீச்சில் தொடக்கம் முதலே மிரட்டி வந்த டெல்லி அணியில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 137 ரன்கள் கொண்ட எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 18 ரன்கள் சேர்த்து அவுட் ஆனா நிலையில் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்னுடனும், கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்களுடனும், ரிபால் படேல் 18 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

எனினும், களத்தில் இருந்த தொடக்க வீரர் ஷிகர் தவான் அணியின் ரன்ரேட்டை உயர்த்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த தருணத்தில் அவருடன் களத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஷர்துல் தாக்கூர் வீசிய 14.1 ஓவரில் போல்ட் அவுட் ஆனார். கடை பந்தில் ஷிகர் தவானையும் ஆட்டமிழக்க செய்து ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார் தாக்கூர். எனவே சென்னை அணி வெற்றியை நோக்கி பயணித்தது.

இருப்பினும், டெல்லி அணியினர் பந்துகளுக்கு ஏற்ப ரன்களை சேர்த்து வந்தனர். அந்த அணியில் இறுதி வரை களத்தில் இருந்த சிம்ரான் ஹெட்மியர் ஹேசில்வுட் வீசிய 18.4 ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்க விட்டு ஆட்டத்தில் டெல்லி அணியின் வெற்றியை பிரகாசமாக்கினார். எனவே டெல்லி அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைபட்டது.

கடைசி 6 பந்துகளை வீச வந்த பிராவோ முதலிரண்டு பந்துகளிலேயே 4 ரன்களை வாரிக்கொடுத்து 3வது பந்தில் அக்சர் படேலின் விக்கெட்டை எடுத்தார்.

ஆனால் அவரத்தொடர்ந்து வந்த டெல்லியின் ககிசோ ரபாடா பிராவோ வீசிய 4வது பந்தில் பவுண்டரி விளாசினார். எனவே 137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் தொடர் நெருக்கடியை கொடுத்த சென்னை அணி தோல்வியை தழுவியது.

இந்த சிறப்பான வெற்றியின் மூலம் மேலும் 2 புள்ளிகளை பெற்றுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 2ம் இடத்திற்கு நகர்ந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 23:11 (IST) 04 Oct 2021
    இறுதி வரை போராடிய சென்னை; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி!

    137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் தொடர் நெருக்கடியை கொடுத்த சென்னை அணி தோல்வியை தழுவியது.


  • 22:52 (IST) 04 Oct 2021
    சென்னையின் வெற்றிக்காக தோனியின் மகள் Prayer....!

    சென்னையின் வெற்றிக்காக தோனியின் மகள் ஜெபிக்கும் புகைப்படம் வைரலாகிறது.


  • 22:40 (IST) 04 Oct 2021
    ஷிகர் தவான் அவுட்!

    137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் 2 சிக்ஸர் 3 பவுண்டரி என அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர் ஷிகர் தவான் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    delhicapitals 6⃣ down as Shikhar Dhawan departs!

    A big wicket for @ChennaiIPL as @imShard strikes. 👏 👏 vivoipl dcvcsk

    Follow the match 👉 https://t.co/zT4bLrDCcl pic.twitter.com/PbjrZncxRG
    — IndianPremierLeague (@IPL) October 4, 2021


  • 22:39 (IST) 04 Oct 2021
    ஷிகர் தவான் அவுட்!

    137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் 2 சிக்ஸர் 3 பவுண்டரி என அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர் ஷிகர் தவான் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.


  • 22:24 (IST) 04 Oct 2021
    IPL 2021 Play Off: மும்பை நிலை இப்படி ஆகிவிட்டதே… ப்ளே ஆஃப் சுற்றுக்கு கடும் போட்டி!

    புள்ளிப்பட்டியலில் மோசமான ரன்-ரேட்டை பெற்றுள்ள மும்பை அணி எதிர் வரும் 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதே அவர்களின் ஒரே வாய்ப்பாக உள்ளது.

    https://tamil.indianexpress.com/sports/ipl-2021-playoffs-tamil-news-kkr-rr-mi-and-pbks-in-ipl-playoff-race-350961/


  • 22:10 (IST) 04 Oct 2021
    ரிஷப் பண்ட் அவுட்!

    137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை விளாசிய 15 ரன்கள் சேர்த்த கேப்டன் ரிஷப் பண்ட் ஜடேஜா சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.


  • 21:54 (IST) 04 Oct 2021
    பவர் பிளே முடிவில் டெல்லி அணி!

    137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது.


  • 21:35 (IST) 04 Oct 2021
    பிரித்வி ஷா அவுட்!

    137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் 3 பவுண்டரிகளை விரட்டிய பிரித்வி ஷா 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


  • 21:32 (IST) 04 Oct 2021
    களத்தில் டெல்லி கேபிட்டல்ஸ்!

    137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா - ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

    அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துள்ள இந்த ஜோடி 2 ஓவர்கள் முடிவில் 20 ரன்களை சேர்த்துள்ளது.


  • 21:15 (IST) 04 Oct 2021
    பந்து வீச்சில் மிரட்டிய டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்கு!

    டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை சேர்த்துள்ளது. எனவே டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


  • 21:14 (IST) 04 Oct 2021
    அம்பதி ராயுடு அரைசதம்!

    தொடர் விக்கெட் சரிவை சந்தித்த சென்னை அணியில் நிதான ஆட்டத்தை தொடர்ந்து 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விளாசிய அம்பதி ராயுடு 40 பந்துகளில் அரைசதம் கடந்தார்.


  • 21:13 (IST) 04 Oct 2021
    பந்து வீச்சில் மிரட்டிய டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்கு!

    டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை சேர்த்துள்ளது. எனவே டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


  • 20:55 (IST) 04 Oct 2021
    4 விக்கெட் இழப்பு; நிதானம் காட்டும் சென்னை!

    சென்னை அணி 62 ரன்கள் சேர்த்த போது 4வது விக்கெட்டை இழந்து. தற்போது நிதானமாக ஆடி வரும் சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 99 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:12 (IST) 04 Oct 2021
    மொயீன் அலி அவுட்!

    தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டுக்கு பிறகு வந்த ஆல்ரவுண்டர் வீரர் மொயீன் அலி 8 ரன்கள் சேர்த்த நிலையில் அக்ஸர் படேல் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.


  • 20:06 (IST) 04 Oct 2021
    IPL 2021 Play Off: மும்பை நிலை இப்படி ஆகிவிட்டதே… ப்ளே ஆஃப் சுற்றுக்கு கடும் போட்டி!

    புள்ளிப்பட்டியலில் மோசமான ரன்-ரேட்டை பெற்றுள்ள மும்பை அணி எதிர் வரும் 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதே அவர்களின் ஒரே வாய்ப்பாக உள்ளது.

    https://tamil.indianexpress.com/sports/ipl-2021-playoffs-tamil-news-kkr-rr-mi-and-pbks-in-ipl-playoff-race-350961/


  • 20:05 (IST) 04 Oct 2021
    பவர் பிளே முடிவில் சென்னை அணி!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து நிலையில், பவர் பிளே முடிவில் 48 ரன்களை சேர்த்துள்ளது.

    ராபின் உத்தப்பா 12 ரன்களுடனும், மொயீன் அலி 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


  • 19:56 (IST) 04 Oct 2021
    ருதுராஜ் கெய்க்வாட் அவுட்!

    சென்னை அணியின் தொடக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் அவுட் ஆனா நிலையில், அவருடன் மறுமுனையில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.


  • 19:51 (IST) 04 Oct 2021
    டு பிளெஸ்ஸிஸ் அவுட்!

    டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீசி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் செய்து வரும் தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 2 பவுண்டரிகளை ஓடவிட்டு 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.


  • 19:39 (IST) 04 Oct 2021
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸ்ஸி ஜோடி களரமிறங்கியுள்ளது.


  • 19:29 (IST) 04 Oct 2021
    டெல்லி அணியில் ரிபால் படேல் அறிமுகம்!

    குஜராத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் வீரர் ரிப்பால் படேல் இன்றை ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பில் ஆறிமுகமாகிறார்.


  • 19:25 (IST) 04 Oct 2021
    இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள்:

    டெல்லி கேபிட்டல்ஸ் (விளையாடும் XI): பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரிபால் படேல், அக்சர் பட்டேல், சிம்ரான் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே

    சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் XI): ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸ்ஸி, ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்


  • 19:25 (IST) 04 Oct 2021
    சென்னைக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது


  • 18:55 (IST) 04 Oct 2021
    டெல்லி கேபிட்டல்ஸ் – விளையாடிய போட்டிகள் – 12, புள்ளிகள் – 18, நெட் ரன்ரேட் +0.55

    பிளே-ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள டெல்லி அணி எதிர்வரும் இரண்டு லீக் ஆட்டங்களில் (சென்னை மற்றும் பெங்களூரு) வென்றால் முதலிரண்டு இடத்தை பாதுகாப்பாக தக்க வைத்துக்கொள்ளும்.


  • 18:55 (IST) 04 Oct 2021
    சென்னை சூப்பர் கிங்ஸ் – விளையாடிய போட்டிகள் – 12, புள்ளிகள் – 18, நெட் ரன்ரேட் +0.82

    சிறந்த நெட் ரன்-ரேட்யை பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை அணி அதன் அடுத்த 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியைப் பெற்றால் போதும். முதலிரண்டு இடத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். இதனால் அந்த அணி இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவினாலும் அந்த அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.


  • 18:45 (IST) 04 Oct 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 7:30 மணிக்கு நடக்கவுள்ள 50வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.


  • 18:24 (IST) 04 Oct 2021
    இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:

    சென்னை சூப்பர் கிங்ஸ்:

    ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டி பிராவோ, எல் நிகிடி, ஷர்துல் தாக்கூர், கேஎம் ஆசிஃப்.

    டெல்லி கேபிட்டல்ஸ்:

    சாம் பில்லிங்ஸ், அஜிங்க்யா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், சிம்ரான் ஹெட்டிமர், ஆர் அஷ்வின், அவேஷ் கான், உமேஷ் யாதவ், ககிசோ ரபாடா/அன்ரிச் நார்ட்ஜே.


Chennai Super Kings Cricket Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Ipl 2021 Ipl 2021 Live Dc Vs Csk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment