Advertisment

டாப் 2-ல் வரணும்னா இதை சி.எஸ்.கே செய்து ஆகணும்: டெல்லியை வீழ்த்த தோனி வியூகம் என்ன?

பெங்களூரு அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

author-image
WebDesk
May 09, 2023 17:42 IST
CSK vs DC: MS Dhoni’s plan against Delhi Capitals in must win game

Chennai Super Kings chase Top 2 spot; must win game for Delhi Capitals Tamil News

Delhi Capitals vs Royal Challengers Bangalore 55th Match IPL 2023 Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடர் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடப்பு சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 6ல் வெற்றி, 4ல் தோல்வி, ஒரு ஆட்டத்திற்கு முடிவு இல்லை என 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

Advertisment

சென்னை - டெல்லி மோதல்

சென்னை அணி அடுத்ததாக நாளை (மே.10) சென்னை சேப்பாக்கத்தில் வைத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியைப் பொறுத்தவரை, நடப்பு சீசனில் முதல் 5 ஆட்டங்களில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4ல் வெற்றியை ருசித்தது. குறிப்பாக, பெங்களூரு அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களான கேப்டன் டேவிட் வார்னர், பில் சால்ட், மிட்செல் மார்ஷ் மற்றும் ரிலீ ரோசோவ் ஆகியோர் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் விளாசிய பில் சால்ட் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் அக்சர் படேல், முகேஷ் குமார், கலீல் அகமது, குலதீப் யாதவ், இஷாந்த் சர்மா போன்றோர் நல்ல நிலையில் உள்ளனர்.

தற்போது 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் 4 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில், ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் கூட, பிளே ஆஃப்-க்கு செல்ல வாய்ப்பு இருக்காது. எனவே, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

தோனி வியூகம்

மறுபுறம், புள்ளிகள் பட்டியலில் 2வது இருக்கும் சென்னை அணி, அந்த இடத்தை தக்க வைக்க நாளை ஆட்டத்தில் வெற்றியைப் பெற வேண்டும். சென்னை அணியைப் பொறுத்தவரை, 5 முறை சாம்பியனான மும்பையை முந்தைய ஆட்டத்தில் வீழ்த்திய உற்சகத்துடனும், நம்பிக்கையுடனும் களமிறங்குவார்கள். தொடக்க ஆட்டங்களின் போது சென்னையின் பந்துவீச்சு வரிசை பெரும் கவலை அளித்தது. ஆனால், அவர்களின் பந்துவீச்சு சமீபகாலமாக மேம்பட்டு வருகிறது.

சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பத்திரனா அணியின் பந்துவீச்சு வரிசைக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும், முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தீபக் சாஹர் திறம்பட பந்துவீசி இருந்தார். சுழற்பந்து வீச்சு வரிசையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேஷ் தீக்ஷனாவுடன் மொயீன் அலி கலக்கி வருகிறார். இந்த திறன்மிகுந்த கலவையைக் கொண்டு டெல்லியை வீழ்த்த தோனி புதிய வியூகம் வகுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

#Cricket #Sports #Chennai #Chennai Super Kings #Delhi Capitals #Csk Vs Dc #Ipl News #Ipl Cricket #Dc Vs Csk #Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment