Advertisment

சிஸ்கே-வின் ஃபைனல்ஸ் கனவு பலிக்குமா? பலம் வாய்ந்த டெல்லியை வீழ்த்த தோனி போட்டிருக்கும் கணக்கு!

தோனியை மட்டுமே நம்பி வீரர்கள் களம் இறங்கினால் அது சரியாக வராது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Csk vs dc

Csk vs dc

Csk vs dc : 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த

Advertisment

எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை அணியை வீழ்த்தி டெல்லி அணி அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் சென்னையை டெல்லி அணி நாளை எதிர்கொள்கிறது. ’

சேப்பாக்கத்தில் நடந்த பிளேஆப் சுற்றின் குவாலியர்-1’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இருப்பினும் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்தாலும், இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.

அந்த வகையில், நாளை நடைபெறவிருக்கும் இரண்டாம் தகுதி சுற்றில் சென்னை அணியும், டெல்லி அணியும் பலபரீட்சை நடத்துக்கின்றன.இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் பைன்ல்சில் மும்பை அணியுடன் மோதும். ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் சென்னை vs டெல்லி ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறுகிறது.

பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் டெல்லி அணியை சிஎஸ்கே வீழ்த்த கேப்டன் தோனி பல திட்டங்களை வகுத்துள்ளார்.இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள சென்னை அணி, டெல்லி அணியை வீழ்த்தி 8 ஆவது முறையாக பைனல்சில் நுழைய வேண்டும் என உறுதி மொழி எடுத்துள்ளது. இந்த தொடரில் சென்னை அணி இதுவரை டெல்லி அணியுடன் மோதி 2 முறை வெற்றி கண்டுள்ளது.

அதே கணிப்புடன் நாளையும் ஆடினால் அது சிஸ்கே எடுக்கும் ரிஸ்க். காரணம், டெல்லி அணி நேற்று ஐதரபாத் அணியுடன் நடத்திய பலபரீட்சையில் டெல்லி அணி, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிகவும் கைத்தேர்ந்த அணியாக இருப்பது தெளிவாகியுள்ளது.

அதே போல், எல்லா சீசனிலும் தோனி தலைமையிலான சென்னை அணி சிறப்பாக ஆடி இமாலய ரன்களை குவித்திருந்தாலும் இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் மோசமான சில ஆட்டங்களும் ரசிகர்களுக்கு சற்று பயத்தை தந்துள்ளனர். குறிப்பாக குவாலிபையர்1 ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோத முடியாமல் சிஸ்கே அணி மிகப் பெரிய தோல்வியை சந்திருந்தது.

ரசிகர்கள் மற்றும் ஐபிஎல் விமர்சகர்களின் கருத்துப்படி இந்த சீசனில் சென்னை அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதனை மனதில் கொண்டு பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவது மிகவும் அவசியம்.

கடந்த ஆட்டங்களை போலவே பேட்டிங்கில் தோனியை மட்டுமே நம்பி வீரர்கள் களம் இறங்கினால் அது சரியாக வராது. சிறந்த பேட்ஸ்மேன்களான ரெய்னா, டுபெலிசிஸ், அம்பதி ராயுடு, வாட்சன் போன்றோரும் சிறப்பாக ஆட வேண்டும். பவுலிங்கில் அடித்து நொறுக்கும் சென்னை அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பம்.

நாளை நடைபெறும் ஆட்டத்தில் தோனி சில வீரர்களை மாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‌ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது. டெல்லி அணியை பொருத்தவரையில் பேட்டிங்கில் மிகவும் வலிமையான அணி. தவான் , ஷிரேயாஸ் அய்யர், பிரித்விஷா போன்றோர் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது தவிர இங்ராம், ருதர்போர்டு போன்றோரும் அணிக்கு மிகச் சிறந்த பலம்.

இரு அணியின் பலமும், பலவீனமும் இருவருக்கும் தெரியும். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு வீரர்கள் நாளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த ஆட்டமே அவர்களை இறுதி போட்டிக்கு அழைத்து செல்லும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment