scorecardresearch

சேப்பாக்கம் கிரவுண்டை நன்கு அறிந்த 3 பேர் குஜராத் அணியில்: சி.எஸ்.கே-வுக்கு இதுதான் சவால்

ஐ.பி.எல் பிளே ஆப் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்வது சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தை நன்றாக தெரிந்து வீரர்கள் குஜராத் அணியில் உள்ளனர்.

CSK vs GI
CSK vs GI,

ஐ.பி.எல் பிளே ஆப் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்வது சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தை நன்றாக தெரிந்து வீரர்கள் குஜராத் அணியில் உள்ளனர்.

ஐ.பி.எல் தொடரின் முதல் பிளே ஆப்  போட்டியில் குஜராத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன. இந்நிலையில் இதுவரை இந்த இரண்டு அணிகளுக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குஜாராத் அணியே 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இந்த முறை போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுவதால், சென்னை அணிக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குஜராத் அணியில் சேப்பாக்கம் மைதானத்தை நன்கு அறிந்த வீரர்கள் இருக்கின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு  அணிக்காக சிறப்பாக ஆடி வரும் விஜய் சங்கர் குஜராத் அணிக்கு அசத்தலான பேட்டிங் செய்கிறார். இதுபோல சாய் சுதர்சனும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

சென்னை அணிக்கு நீண்ட ஆண்டுகள் விளையாடிய மோகித் சர்மாவை குஜராத் அணி, டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக மாற்றி வைத்திருக்கிறது. இந்நிலையில் சென்னை அணியை வீழ்த்த மூன்று ஸ்பின்னர்கள் தேவை. இந்த ஸ்பின்கர்களை வைத்திருந்ததால் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் சென்னை அணியை வீத்தியது.

இதனால் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோருடன் சாய் கிஷோர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத் அணியின் வெற்றிக்கு சாய் கிஷோர் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Csk vs gi who has more changes to win csk to concentrate on which