Advertisment

CSK vs GT: காயத்தில் இருந்து மீண்ட பத்திரனாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? சி.எஸ்.கே ஆடும் லெவன் இழுபறி!

ஐ.பி.எல். போட்டி தொடருக்கு முன்னதாக, தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா அதிலிருந்து மீண்டு தற்போது முழு உடற்தகுதியை அடைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
CSK vs GT Chennai Super Kings vs Gujarat Titans Playing 11 prediction IPL 2024 Tamil News

குஜராத் அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்குப் பதில் நூர் அஹ்மத் ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai Super Kings | Gujarat Titans | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் - முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

Advertisment

நடப்பு சாம்பியன் சென்னை அணி சொந்த மைதானத்தில் நடந்த தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதேபோல், குஜராத் அணி தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த உற்சாகத்துடன் அந்த அணி இந்த போட்டியில் களமாடும். அதேநேரத்தில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடவுள்ள சென்னை அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் களம் இறங்குகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

பத்திரனாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்தப் போட்டிக்கு முன்னதாக, தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா அதிலிருந்து மீண்டு தற்போது முழு உடற்தகுதியை அடைந்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் களமிறங்க தயாராகவும் இருக்கிறார் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது. 

எனினும், அவருக்குப் பதிலாக தொடக்க ஆட்டத்தில் களமிறங்கிய வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானுடன் அணி தொடரும். முஸ்தாபிசுர் ரஹ்மா (எ) ஃபிஷ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதனால் அவர் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார். எனவே, பத்திரனா அவரது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். 

ஸ்பென்சருக்குப் பதில் நூர் 

குஜராத் அணி தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், அது மும்பை அணிக்கு சாதகமாக முடிந்திருக்க வேண்டிய ஆட்டம். அந்த அணியின் ஸ்பென்சர் ஜான்சன் தான் வீசிய 2 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதனால், சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளத்திற்கு ஏற்ப சுழற்பந்து வீசும் நூர் அஹ்மத் ஒரு நல்ல தேர்வாக இருப்பார். 

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் 

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே

இம்பாக்ட் பிளேயர்: ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து மற்றும் மொயீன் அலி.

குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது

இம்பாக்ட் பிளேயர்: பிஆர் ஷரத், மோஹித் ஷர்மா, மானவ் சுதர், அபினவ் மனோகர், ஸ்பென்சர் ஜான்சன். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Super Kings Gujarat Titans IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment