தீக்ஷனா இல்லை - சான்ட்னரை சேர்ப்பது கடினம்
Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று செவ்வாய்க்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் - முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சுடன் மோதியது.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளாரான மகேஷ் தீக்ஷனாவுக்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களின் புருவங்களை உயர்த்தக்கூடும் என்றாலும், மதீஷ பத்திரனைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை முற்றிலும் அர்த்தமுள்ளதாக இருந்தது. நான்கு ஓவர்கள் வீசும் திறன் கொண்ட ரச்சின் ரவீந்திரா லெவன் அணியில் இருப்பதால், பத்திரனா அவர்களுக்கு எட்ஜ் தருவார் என சென்னை நம்பியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs GT Emotional Rollercoaster: Comical fielding error, usual adulation for MS Dhoni, destruction from ‘Yuvraj Singh lite’
தீக்ஷனாவைப் பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்ததில் இருந்து, அணி அவரிடமிருந்து எதிர்பார்க்கும் விதமான தாக்கத்தை அவர் உருவாக்க முடியவில்லை. குறிப்பாக அணியின் சொந்த மைதானமாக இருக்கும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.
இதேபோல் இடது கை சுழற்பந்துவீச்சாளரான மிட்செல் சான்ட்னரும் அணியில் இடம் பிடிப்பது கடினமான் ஒன்றாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்காக அவர் சிறப்பாக விளையாடினார். ஆனால் அவர் மீண்டும் சேப்பாக்கத்தில் நடந்த சி.எஸ்.கே போட்டியில் பெஞ்ச் செய்யப்பட்டார்.
கோட்டை விட்ட குஜராத்
இரண்டு பேட்டர்களுக்கு இடையே ஏற்படும் தவறான புரிதல் பெரும்பாலும் ரன் அவுட் ஆகிவிடும். ஆனால், இரண்டு பீல்டர்களுக்கிடையில் தவறான புரிதல் ஏற்படும் போது ஒருவருக்கு எப்போதுமே இதுபோன்ற கடுமையான விளைவுகள் இருக்காது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் ஏற்கனவே ரச்சின் ரவீந்திராவின் அதிரடி ஆட்டத்தால் அவரை வீழ்த்த திணறிக்கொண்டிருந்தது.
அப்போது, 9வது ஓவரில் டேவிட் மில்லர் மற்றும் ராகுல் டெவாடியா இடையே நிகழ்ந்த குழப்பத்தால் பந்து பவுண்டரிக்கு உருண்டு சென்றது. அஜிங்க்யா ரஹானே ஆன்சைடில் விரட்டிய அந்த பந்தில் அதிகபட்சம் ஒரு ரன் மட்டுமே எடுத்திருக்க முடியும் ஆனால், லாங்-ஆனில் இருந்து மில்லர் ஓடி வர, டீப் மிட்விக்கெட்டிலிருந்தும் ஓடி வந்தார் தெவாடியா. அவர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பந்தை அடைந்தனர். எனினும், பந்தை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல், இருவரும் கோட்டை விட்டனர். முக்கியமான கட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லின் கூடுதலாக எரிச்சலடைந்தார்.
ஆட்டத்தை மாற்றிய துபே
ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருமுறை அவரை ‘யுவராஜ் சிங் லைட்’ (குட்டி யுவராஜ் சிங்) என்று அழைத்தார். பேட்டை நன்றாக சுழற்றி பந்துகளை பறக்கவிடுவது. பவுண்டரிகளை க்ளியர் பண்ணுவது போன்றவை சிவம் துபேவுக்கும் ‘யுவி’க்கும் உள்ள சில ஒற்றுமைகள். ஆனால் உடனடி தாக்கத்தை ஏற்படுத்திய யுவராஜ் போலல்லாமல், துபேவின் கிரிக்கெட் வாழ்க்கை மேலும் கீழுமாக இருந்தது. சென்னை அணியில் அவர் சுமையற்றவர் மற்றும் தோல்வி பயம் ஜன்னலுக்கு வெளியே சென்றது போல் தெரிகிறது. துபே, நிறைய இந்திய பேட்ஸ்மேன்களைப் போலவே, ஷார்ட் பந்துக்கு கஷ்டப்படுகிறார். மேலும் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் அனுமதிக்கப்படுவதால், அவர் தனது ஷாட்களைத் தேர்ந்தெடுத்து தேர்வு செய்ய வேண்டும்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, துபே பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனின் ஷார்ட் பந்தை அவர் எளிதாக சமாளித்து அதை டீப் ஃபைன் லெக்கில் சிக்ஸருக்கு அனுப்பினார். இடது கை ஆட்டக்காரர் ரஷித் கானின் கூக்லியை முற்றிலும் அலட்சியமாக விளாசினார். இதேபோல் தொடக்க ஆட்டத்தில் ஆர்.சி.பி-க்கு எதிராக ஆட்டமிழக்காமல் 34 ரன்களுடன் 51 ரன்களில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார். யுவராஜ் சிங் லீக்கில் இன்னும் இல்லை என்றாலும், அவரது புதிய நம்பிக்கை அவரை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும் என்று சொல்ல முடியாது.
தோனி தருணம்
"என்னால் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிகிறது" என்பது போல் திங்கட்கிழமை இரவு பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தனது அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு விராட் கோலி கூறினார். அதையே நீங்கள் தோனிக்கும் கூறலாம். 42 வயதான அவர் விக்கெட் கீப்பராக புலிபோல் பாய்ந்து பந்தை கேட்ச் பிடித்தார். டேரில் மிட்செல் ஓவரில் விஜய் ஷங்கர் எட்ஜ் அடிக்க டைவ் செய்து அசத்தலாக கேட்ச் எடுத்தார்.
அப்போது, ரசிகர்கள் தோனி, தோனி... என பெரும் ஆரவாரம் செய்தார்கள்.
இதேபோல், மாலை முழுவதும், சென்னை ரசிகர்கள் தங்களது "தல தோனி" பேட் செய்ய வெளியே வர வேண்டும் என ஆவல் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் அவரது முகம் திரையில் காட்டப்படும்போது, மைதானத்தில் மிகப் பெரிய ஆரவாரம் எழுந்தது. ஆனால், அவர் கடைசி வரை பேட்டிங் செய்ய வெளியே வரவே இல்லை. துபே-வின் விக்கெட்டுக்குப் பின் சமீர் ரிஸ்வி செல்ல, அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா சென்றார். அதனால் ஏமாற்றம் அடைத்தனர். இருப்பினும், சென்னை அணியின் பீல்டிங் போது ரசிகர்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணை முட்டியது. 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது சி.எஸ்.கே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“