Advertisment

CSK vs GT: இறுதிப்போட்டியை நேரில் பார்க்க சென்ற வரலட்சுமி; டிக்கெட் மட்டும் விலை இவ்வளவா?

சென்னை அணியின் தீவிர ரசிகையாக நடிகை வரலட்சுமி ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டிக்கான டிக்கெட் பெற்றுள்ளதை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
May 29, 2023 20:41 IST
CSK vs GT IPL 2023 Final: Actress Varalaxmi Sarathkumar with ticket Tamil News

Varalaxmi Sarathkumar - CSK vs GT IPL 2023 Final

 IPL 2023 Final -  CSK vs GT Varalaxmi Sarathkumar Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடருக்கான இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை புகுந்து விளையாடியது. இடி, மின்னலுடன் விட்டுவிட்டு கொட்டித்தீர்த்த மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் காட்சியளித்தது.

Advertisment
publive-image

தொடர்ந்து மழை நீடித்ததால் நேற்று போட்டி ஒத்தி வைக்கப்படுவதாகவும், மாற்றுநாளான இன்று (திங்கட்கிழமை, இரவு 7.30 மணி) இறுதிப்போட்டி நடக்கும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் நேற்றிரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, போட்டி இன்று நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளை தமிழ் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று கண்டு களித்து வருகின்றனர். சென்னை அணி விளையாடும் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி, இந்தியாவில் எங்கு நடந்தாலும் சினிமா பிரபலங்கள் பார்கின்றனர்.

publive-image

இந்த நிலையில், சென்னை அணியின் தீவிர ரசிகையாக நடிகை வரலட்சுமி ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டிக்கான டிக்கெட் பெற்றுள்ளதை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த டிக்கெட்டில் இருந்து அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்பது தெரிய வந்துள்ளது. இது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

publive-image
publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Cricket #Sports #Chennai Super Kings #Varalakshmi Sarathkumar #Gujarat Titans #Ipl Finals #Ipl News #Ipl Cricket #Ahmedabad #Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment