Advertisment

வரலாறு தோனிக்கு சாதகம்: ஹர்திக்- கில் சாதனை முயற்சிக்கு சி.எஸ்.கே பதில் என்ன?

2011 முதல் நடந்த 12 இறுதிப் போட்டிகளில் 9ல், தகுதிச் சுற்று 1ல் வெற்றிபெற்ற அணியே இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
CSK vs GT IPL 2023 Final: Why history favours MS Dhoni and Chennai? Hardik Pandya, Shubman Gill on the cusp of historic records

Chennai Super Kings face Gujarat Titans in IPL 2023 final. (File)

CSK vs GT IPL 2023 Final Tamil News: இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐ.பி.எல் 2023) இறுதிப் போட்டியில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

Advertisment

ஐபிஎல் வரலாற்றில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளில் சென்னை அணி மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக உள்ளது. இதேபோல், குஜராத் அணியும் நடப்பு சீசனின் பலம் வாய்ந்த அணியாக வலம் வருகிறது. மேலும், தொடர்ந்து 2 முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள குஜராத் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க ஆயத்தமாகியுள்ளது.

சுவாரஸ்யமாக, 2011 முதல் நடந்த 12 இறுதிப் போட்டிகளில் 9ல், தகுதிச் சுற்று 1ல் வெற்றிபெற்ற அணியே இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, வரலாறு சென்னை அணிக்கு சாதகமாக உள்ளது.

சென்னை அணியின் கேப்டனும், போட்டியின் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவருமான எம்.எஸ்.தோனி, இறுதிப் போட்டியில் தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல விரும்புவார். 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வாகை சூடினால், ஏற்கனவே 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்யும்.

மேலும், குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தோனி களம் இறங்கும் போது, ​​ஐ.பி.எல்-லில் 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். மறுபுறம், குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோனி மற்றும் ரோகித் சர்மாவுக்குப் பிறகு, தனது அணியை தொடர்ச்சியாக ஐபிஎல் பட்டங்களை வெல்லும் 3வது அணியின் கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.

இந்த சீசனில் 851 ரன்களை குவித்துள்ள குஜராத் அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மான் கில், ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். அவர் ஜோஸ் பட்லரை முந்துவதற்கு 13 ரன்கள் மட்டுமே தேவை. ஆனால் 2016 ஐபிஎல் சீசனில் விராட் கோலியின் 973 ரன்கள் என்ற சாதனையை முறியடிக்க, கில் இன்னும் 123 ரன்கள் எடுக்க வேண்டும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையு ம்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Chennai Super Kings Gujarat Titans Ipl Finals Ipl News Ipl Cricket Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment