CSK vs KKR 2021, IPL Finals match Highlights in tamil: 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு அரங்கேறியது. இதில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணி களம் கண்டது. அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ரன்களை சேர்த்தார். மேலும் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றினார். ருதுராஜ் 27 பந்துகளில் 32 ரன்கள் (1 சிக்ஸர் 1 பவுண்டரி) சேர்த்திருந்த நிலையில் சுனில் நரைனின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.
Solid start to the proceedings for @ChennaiIPL in the #VIVOIPL #Final! 👏 👏@Ruutu1331 & @faf1307 complete a 5⃣0⃣-run partnership as powerplay comes to an end. 👍 👍 #CSKvKKR
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
Follow the match 👉 https://t.co/JOEYUSwYSt pic.twitter.com/Iuery3Tbvt
அவருடன் மறுமுனையில் இருந்த தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளை ஓடவிட்டு 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். ருதுராஜின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கி 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் lbw முறையில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும், களத்தில் அதிரடியை நிறுத்தாத டு பிளெஸ்ஸிஸ் – மொயீன் அலி ஜோடி சென்னை அணிக்கு வலுவான ரன்களை சேர்த்தது. தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 59 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளை விளாசி 86 ரன்கள் சேர்ந்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
3⃣rd successive half-century stand for @ChennaiIPL in the #VIVOIPL #Final! 👏 👏 #VIVOIPL | #CSKvKKR | #Final
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
Follow the match 👉 https://t.co/JOEYUSwYSt pic.twitter.com/pBFIkqC3l8
அவருடன் மறுமுனையில் கைகொடுத்து ஆடிய மொயீன் அலி 20 பந்துகளில் 37 ரன்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரி) சேர்த்து களத்தில் இருந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 192 ரன்களை குவித்தது.
INNINGS BREAK!
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
8⃣6⃣ for @faf1307
3⃣7⃣* for Moeen Ali
3⃣2⃣ for @Ruutu1331
3⃣1⃣ for @robbieuthappa
2⃣/2⃣6⃣ for Sunil Narine
1⃣/3⃣2⃣ for @ShivamMavi23
The @KKRiders chase to begin shortly in the #VIVOIPL #Final. #CSKvKKR @ChennaiIPL
Scorecard 👉 https://t.co/JOEYUSwYSt pic.twitter.com/efrXsT1xFY
தொடர்ந்து 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. இதனால் அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்களை சேர்த்தது. எனினும் 11வது வீச வந்த சென்னையின் தாக்கூர் அரைசதம் கடந்து இருந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் அவரின் விக்கெட்டுக்கு பிறகு வந்த நிதிஷ் ராணாவின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
Twin strikes from @imShard! 👌 👌@ChennaiIPL scalp two wickets in an over as #KKR lose Venkatesh Iyer & Nitish Rana. #VIVOIPL | #CSKvKKR | #Final
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
Fine work in the field by @imjadeja & @faf1307! 👍 👍
Follow the match 👉 https://t.co/JOEYUSwYSt pic.twitter.com/rcKcP0vaFu
இந்த நல்ல தருணத்தை தவற விடாத சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து வந்த கொல்கத்தா அணியினரின் விக்கெட்டுகளை சாய்த்தனர். சென்னையின் தொடர் தாக்குதலுக்கு தாக்குபிடிக்காத கொல்கத்தா அணியின் சுனில் நரைன் (2), கேப்டன் இயோன் மோர்கன் (4), தினேஷ் கார்த்திக் (9), ஷகிப் அல் ஹசன் (0), ராகுல் திரிபாதி (2) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
Double-wicket over from @imjadeja! 👏 👏@ChennaiIPL are on fire here in Dubai. 👌 👌#KKR 6 down as Dinesh Karthik & Shakib Al Hasan depart. #VIVOIPL | #CSKvKKR | #Final
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
Follow the match 👉 https://t.co/JOEYUSwYSt pic.twitter.com/VkOdY5WOJe
கடைசி ஓவர்களில் களத்தில் இருந்த கொல்கத்தா அணியின் லோக்கி பெர்குசன் – சிவம் மாவி ஜோடி அதிரடியாக ரன் குவித்திருந்தாலும் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. எனவே 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இறுதிப்போட்டியை வென்று 4 முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
Fantastic FOUR! 🏆 🏆 🏆 🏆
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
The @msdhoni-led @ChennaiIPL beat #KKR by 27 runs in the #VIVOIPL #Final & clinch their 4⃣th IPL title. 👏 👏 #CSKvKKR
A round of applause for @KKRiders, who are the runners-up of the season. 👍 👍
Scorecard 👉 https://t.co/JOEYUSwYSt pic.twitter.com/PQGanwi3H3
கடைசி 10 ஓவர்களில் மிகத்துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ மற்றும் தீபக் சாஹர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Indian Premier League, 2021Dubai International Cricket Stadium, Dubai 17 May 2022
Chennai Super Kings 192/3 (20.0)
Kolkata Knight Riders 165/9 (20.0)
Match Ended ( Day – Final ) Chennai Super Kings beat Kolkata Knight Riders by 27 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. எனவே 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இறுதிப்போட்டியை வென்று 4 முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
Fantastic FOUR! 🏆 🏆 🏆 🏆The @msdhoni-led @ChennaiIPL beat #kkr by 27 runs in the #vivoipl #final & clinch their 4⃣th IPL title. 👏 👏 #cskvkkr A round of applause for @KKRiders, who are the runners-up of the season. 👍 👍Scorecard 👉 https://t.co/JOEYUSwYSt pic.twitter.com/PQGanwi3H3
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் ரன்கள் சேர்த்துள்ளது.
அந்த அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 73 ரன்கள் தேவை!
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தொடக்க வீரர் சுப்மான் கில் 6 பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்துள்ளார்.
அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா அணி ரன் சேர்க்க நிதானம் காட்டி வருகிறது . அந்த அணி 12 ஓவர்கள் 99 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ரன் சேர்த்த தொடக்க வீரர் 31 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்து இருந்து நிலையில் தாக்கூர் வீசிய 10.4 ஓவரில் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த நிதிஷ் ராணா தாக்கூர் வீசிய 10.6 ஓவரில் டு பிளஸிஸ் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்களை சேர்த்துள்ளது.
193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணியில் அதிரடியாக விளையாடி வெங்கடேஷ் ஐயர் 31 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விளாசி அரைசதம் அடித்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர்.
கொல்கத்தா அணி பவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை சேர்த்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர்.
கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்துள்ளது. எனவே, கொல்கத்தா அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியில் சிறப்பான ஆட்டத்தை தொக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி 59 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளை விளாசி 86 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் கடைசி பந்தில் அவுட் ஆனார்.
அவருடன் மறுமுனையில் கைகொடுத்து ஆடிய மொயீன் அலி 20 பந்துகளில் 37 ரன்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரி) சேர்த்து களத்தில் இருந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி வரும் சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணியில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் lbw முறையில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணியில் அதிரடியாக ரன் குவித்து வரும் தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளை பறக்க விட்டு 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணியில் அதிரடியாக ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 27 பந்துகளில் 32 ரன்கள் (1 சிக்ஸர் 1 பவுண்டரி) சேர்த்த நிலையில் சுனில் நரைனின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.
Breakthrough for @KKRiders! 👏 👏Sunil Narine strikes as @ShivamMavi23 takes the catch in the deep! 👍 👍#csk lose Ruturaj Gaikwad. #vivoipl | #cskvkkr | #final Follow the match 👉 https://t.co/JOEYUSwYSt pic.twitter.com/c3aoncNzjo
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணி களமிறங்கியது.
இந்நிலையில், பவர் பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை சேர்த்துள்ளது.
சென்னை அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு சீசனில் பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் 24 ரன்களை சேர்த்து கடந்த நிலையில் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து தட்டிப்பறித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணி களமிறங்குகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெஸ்ஸி ஜோடி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். கொல்கத்தா அணிக்காக முதல் ஓவரை ஷகிப் அல் ஹசன், வீசுகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது 200 வது ஐபிஎல் போட்டியிலும், தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் தனது 100 வது ஐபிஎல் போட்டியிலும் இன்று களமிறங்குகிறார்கள். இருவரும் பல ஆண்டுகளாக சிஎஸ்கேவின் முதுகெலும்பாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#expresssports | #sportsupdate || ஜடேஜா – டு பிளெசிஸிஸ் பதிவு செய்ய உள்ள புதிய மைல்கல்!#ipl2021final | #csk | #kkr | #cskvkkr | #livescore | #liveupdates | @ChennaiIPL லைவ் அப்டேட்ஸ்…https://t.co/x9xPsEbGqO pic.twitter.com/FMme7jicv5
— IE Tamil (@IeTamil) October 15, 2021
The Super Kings Going Miles together 🦁#cskvkkr #whistlepodu #yellove 💛 pic.twitter.com/fQivdaXwDG
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 15, 2021
சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்ய களம் காணும். அணியில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் XI):
ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸ்ஸி, ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (விளையாடும் XI):
சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), இயோன் மோர்கன் (கேப்டன்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
Team News@ChennaiIPL & @KKRiders remain unchanged. #vivoipl | #cskvkkr | #final Follow the match 👉 https://t.co/JOEYUSwYStHere are the Playing XIs 🔽 pic.twitter.com/K89cCREnCv
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
துபாயில் இன்றிரவு 7:30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
🚨 Toss Update 🚨@Eoin16 has won the toss & @KKRiders have elected to bowl against the @msdhoni-led @ChennaiIPL in the #vivoipl #final. #cskvkkr Follow the match 👉 https://t.co/JOEYUSwYSt pic.twitter.com/pK6iBIupcR
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
சென்னை அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (603 ரன்) நடப்பு சீசனில் பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இன்றைய ஆட்டத்தில் 24 ரன்கள் சேர்த்தால் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து தட்டிப்பறித்து விடுவார்.
#expresssports | #sportsupdate || ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்துவரா ருதுராஜ்? #ipl2021final | #csk | #kkr | #cskvkkr | #livescore | #liveupdates | @ChennaiIPL லைவ் அப்டேட்ஸ்… pic.twitter.com/TZshmSuvJL
— IE Tamil (@IeTamil) October 15, 2021
சென்னை அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (603 ரன்) நடப்பு சீசனில் பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இன்றைய ஆட்டத்தில் 24 ரன்கள் சேர்த்தால் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து தட்டிப்பறித்து விடுவார்.
#expresssports | #sportsupdate || ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்துவரா ருதுராஜ்? #ipl2021final | #csk | #kkr | #cskvkkr | #livescore | #liveupdates | @ChennaiIPL லைவ் அப்டேட்ஸ்… pic.twitter.com/TZshmSuvJL
— IE Tamil (@IeTamil) October 15, 2021
கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் களமிறங்கும் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்தோனி, 300 டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ( ஐபிஎல், சிஎல் டி 20, டி 20 ஆசிய கோப்பை, டி 20 உலகக் கோப்பை) கேப்டனாக இருந்தவர் புதிய மைல்கல் எட்டவுள்ளார்.
Yellove on wheels.! 🦁 En route! 💛#cskvkkr #whistlepodu pic.twitter.com/EQwm3U0QlV
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 15, 2021
சென்னை சூப்பர் கிங்ஸ்:
1 ருதுராஜ் கெய்க்வாட், 2 ஃபாஃப் டு பிளெஸ்ஸி, 3 மொயீன் அலி, 4 அம்பதி ராயுடு, 5 ராபின் உத்தப்பா, 6 எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), 7 ரவீந்திர ஜடேஜா, 8 டுவைன் பிராவோ, 9 ஷர்துல் தாக்கூர், 10 தீபக் சாஹர், 11 ஜோஷ் ஹேசில்வுட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
1 சுப்மான் கில், 2 வெங்கடேஷ் ஐயர், 3 ராகுல் திரிபாதி, 4 நிதிஷ் ராணா, 5 தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 6 இயான் மோர்கன் (கேப்டன்), 7 ஷாகிப் அல் ஹசன், 8 சுனில் நரைன், 9 லோக்கி பெர்குசன், 10 வருண் சக்கரவர்த்தி , 11 சிவம் மாவி
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Just a matter of a few hours before we see them in action. 👊 ⌛️Are you ready for the #vivoipl #final❓#cskvkkr pic.twitter.com/rbRA4YhwZp
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.