/indian-express-tamil/media/media_files/2025/04/11/h3z0pLa3jiv67xIUjoHx.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 25-வது லீக் போட்டி - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 25-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs KKR LIVE Cricket Score, IPL 2025
காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலகியிருக்கும் நிலையில், அனைவரது கவனமும் புதிய கேப்டன் தோனி மீது இருக்கும். 4 தொடர் தோல்விகளைச் சந்தித்து துவண்டுள்ள சென்னை அணிக்கு அவர் திருப்பு முனையை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
Apr 11, 2025 22:37 IST
கொல்கத்தா அபார வெற்றி
சென்னை சார்பில் 11வது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்து நோபாலாகி 2 ரன்கள் கிடைத்தது. ப்ரீஹிட்டில் ரிங்கு சிங் சிக்ஸ் அடிக்க கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து, சென்னையை வீழ்த்தியது.
-
Apr 11, 2025 22:34 IST
கொல்கத்தா: 10 ஓவர் முடிவில் 98/2
சென்னை சார்பில் 10வது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 22:33 IST
கொல்கத்தா: 9 ஓவர் முடிவில் 92/2
சென்னை சார்பில் 9வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 22:18 IST
கொல்கத்தா: 8 ஓவர் முடிவில் 87/2 நரைன் அவுட்
சென்னை சார்பில் 8வது ஓவரை நூர் அகமது வீசினார். முதல் பந்திலே நரைன் போல்டானார். நரைன் 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸ் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். இந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 22:16 IST
கொல்கத்தா: 7 ஓவர் முடிவில் 85/1
சென்னை சார்பில் 7வது ஓவரை அஸ்வின் வீசினார். நரைன் 2 சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 22:10 IST
கொல்கத்தா: 6 ஓவர் முடிவில் 71/1
சென்னை சார்பில் 6வது ஓவரை கலீல் வீசினார். ரஹானே ஒரு சிக்ஸ் அடித்த நிலையில் நரைன் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 22:08 IST
கொல்கத்தா: 5 ஓவர் முடிவில் 53/1 டி காக் அவுட்
சென்னை சார்பில் 5வது ஓவரை காம்போஜ் வீசினார். முதல் பந்திலே டி காக் போல்டானார். டி காக் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக ரஹானே களமிறங்கி ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 22:06 IST
கொல்கத்தா: 4 ஓவர் முடிவில் 46/0
சென்னை சார்பில் 4வது ஓவரை அஸ்வின் வீசினார். நரைன் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 22:04 IST
கொல்கத்தா: 3 ஓவர் முடிவில் 34/0
சென்னை சார்பில் 3வது ஓவரை கலீல் வீசினார். டி காக் 2 சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி 3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 22:03 IST
கொல்கத்தா: 2 ஓவர் முடிவில் 19/0
சென்னை சார்பில் 2வது ஓவரை காம்போஜ் வீசினார். முதல் பந்தில் டி காக் சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 22:02 IST
கொல்கத்தா: முதல் ஓவர் முடிவில் 7/0
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் நரைன் களமிறங்கினர். சென்னை சார்பில் முதல் ஓவரை கலீல் வீசினார். கடைசி பந்தில் நரைன் சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 21:23 IST
சென்னை: 20 ஓவர் முடிவில் 103/9
கொல்கத்தா சார்பில் 20வது ஓவரை அரோரா வீசினார். துபே 2 பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 21:15 IST
சென்னை: 19 ஓவர் முடிவில் 90/9
கொல்கத்தா சார்பில் 19வது ஓவரை ரானா வீசினார். துபே ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 19 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 21:12 IST
சென்னை: 18 ஓவர் முடிவில் 84/9 நூர் அவுட்
கொல்கத்தா சார்பில் 18வது ஓவரை அரோரா வீசினார். 2வது பந்தில் நூர் அகமது அவுட் ஆனார். நூர் 1 ரன்னில் வருணிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக காம்போஜ் களமிறங்கினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 18 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 21:05 IST
சென்னை: 17 ஓவர் முடிவில் 78/8
கொல்கத்தா சார்பில் 17வது ஓவரை வருண் வீசினார். இந்த ஓவரில் 1 ரன் கிடைத்தது. சென்னை அணி 17 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 21:03 IST
சென்னை: 16 ஓவர் முடிவில் 77/8 தோனி அவுட்
கொல்கத்தா சார்பில் 16வது ஓவரை நரைன் வீசினார். 3வது பந்தில் தோனி எல்.பி.டபுள்யூ ஆனார். தோனி 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக நூர் அகமது களமிறங்கினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 21:01 IST
சென்னை: 15 ஓவர் முடிவில் 74/7 ஹூடா அவுட்
கொல்கத்தா சார்பில் 15வது ஓவரை வருண் வீசினார். 2வது பந்தில் ஹூடா டக் அவுட் ஆனார். அரோராவிடம் கேட்ச் கொடுத்து ஹூடா வெளியேறினார். அடுத்ததாக தோனி களமிறங்கினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 15 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:59 IST
சென்னை: 14 ஓவர் முடிவில் 71/6 ஜடேஜா அவுட்
கொல்கத்தா சார்பில் 14வது ஓவரை நரைன் வீசினார். 3வது பந்தில் ஜடேஜா டக் அவுட் ஆனார். ஜடேஜா கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக ஹூடா களமிறங்கினார். இந்த ஓவரில் 1 ரன் கிடைத்தது. சென்னை அணி 14 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:56 IST
சென்னை: 13 ஓவர் முடிவில் 70/5 அஸ்வின் அவுட்
கொல்கத்தா சார்பில் 13வது ஓவரை ரானா வீசினார். 5வது பந்தில் அஸ்வின் அவுட் ஆனார். அஸ்வின் 7 பந்துகளில் 1 ரன் அடித்து அரோராவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக ஜடேஜா களமிறங்கினார். இந்த ஓவரில் 1 ரன் கிடைத்தது. சென்னை அணி 13 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:54 IST
சென்னை: 12 ஓவர் முடிவில் 69/4
கொல்கத்தா சார்பில் 12வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 12 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:52 IST
சென்னை: 11 ஓவர் முடிவில் 65/4 திரிபாதி அவுட்
கொல்கத்தா சார்பில் 11வது ஓவரை நரைன் வீசினார். கடைசி பந்தில் திரிபாதி போல்டானார். திரிபாதி 22 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக அஸ்வின் களமிறங்கினார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 11 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:49 IST
சென்னை: 10 ஓவர் முடிவில் 61/3 விஜய் சங்கர் அவுட்
கொல்கத்தா சார்பில் 10வது ஓவரை வருண் வீசினார். 4வது பந்தில் விஜய் சங்கர் அவுட் ஆனார். 21 பந்தில் 29 ரன்கள் அடித்திருந்த விஜய் சங்கர் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக துபே களமிறங்கினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:18 IST
சென்னை: 9ஆவது ஓவர் முடிவில் 56/2
கொல்கத்தா சார்பில் 8வது ஓவரை நரைன் வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:17 IST
சென்னை: 8ஆவது ஓவர் முடிவில் 50/2
கொல்கத்தா சார்பில் 8வது ஓவரை ரானா வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:16 IST
சென்னை: 7ஆவது ஓவர் முடிவில் 43/2
கொல்கத்தா சார்பில் 7வது ஓவரை மொயீன் அலி வீசினார். விஜய் சங்கர் ஒரு சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:14 IST
சென்னை: 6ஆவது ஓவர் முடிவில் 31/2
கொல்கத்தா சார்பில் 6வது ஓவரை வருண் வீசினார். முதல் பந்தில் ரவீந்திரா அவுட் ஆனார். விஜய் சங்கர் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:12 IST
சென்னை: 5ஆவது ஓவர் முடிவில் 18/2
கொல்கத்தா சார்பில் 5வது ஓவரை ஹர்சித் ரானா வீசினார். முதல் பந்தில் ரவீந்திரா அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திரா ரன்களில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக திரிபாதி களமிறங்கினார். இந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 5 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 20:09 IST
சென்னை: 4ஆவது ஓவர் முடிவில் 16/1
கொல்கத்தா சார்பில் 4வது ஓவரை மொயீன் அலி வீசினார். முதல் பந்தில் கான்வே எல்.பி.டபுள்யூ ஆனார். கான்வே 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக விஜய் சங்கர் களமிறங்கினார். இந்த ஓவர் மெய்டன் ஆனது. சென்னை அணி 4 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 19:46 IST
சென்னை: 3ஆவது ஓவர் முடிவில் 16/0
கொல்கத்தா சார்பில் 3வது ஓவரை வைபவ் வீசினார். கான்வே 4 ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 19:44 IST
சென்னை: 2ஆவது ஓவர் முடிவில் 10/0
கொல்கத்தா சார்பில் 2வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சென்னை அணி 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 19:41 IST
சென்னை: முதல் ஓவரில் 4/0
சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். கொல்கத்தா சார்பில் வைபவ் முதல் ஓவரை வீசினார். கான்வே 4 ஆவது பந்தில் பவுண்டரி விளாசினார். சென்னை அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது
-
Apr 11, 2025 19:14 IST
இரு அணிகளின் இம்பாக்ட் ப்ளேயர்ஸ் விவரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, மனிஷ் பாண்டே, ரோவ்மேன் பவல், லுவ்னித் சிசோடியா, அனுகுல் ராய்
சென்னை சூப்பர் கிங்ஸ்: மதீஷா பத்திரனா, ஜேமி ஓவர்டன், தீபக் ஹூடா, ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோடி
-
Apr 11, 2025 19:12 IST
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயீன் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி
-
Apr 11, 2025 19:11 IST
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது
-
Apr 11, 2025 19:10 IST
அடிப்படைகளை சரியாகச் செய்வது முக்கியம் - தோனி
எம்.எஸ். தோனி: நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம். சில சமயங்களில் நாங்கள் சேசிங் செய்ய முயற்சித்தோம், மைதானம் கொஞ்சம் மெதுவாகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம், எனவே நீங்கள் நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை என்றால், மிடில் ஆர்டர் அழுத்தத்தில் உள்ளது. ருதுராஜ் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, எனவே அவர் போட்டியிலிருந்து வெளியேறுகிறார். அவர் மிகவும் சிறப்பான பேட்டர், பந்தை சரியாக டைமிங்கில் அடிக்க முயற்சிப்பவர். ஆமாம், அவர் இல்லாதது பெரிய விஷயம் தான். இப்போது அது முக்கியம், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். நாங்கள் நிறைய போட்டிகளில் தோற்றுள்ளோம், இப்போது அடிப்படைகளை சரியாகச் செய்வது முக்கியம் - டாட் பால்களை வைத்திருப்பது, கேட்சுகளை எடுப்பது. இரண்டு ஆட்டங்களில் நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோற்றோம், ஆனால் இல்லையெனில் அது சிறிய விஷயங்களைப் பற்றியது - ஒரு ஓவர் 20 ரன்களுக்குச் செல்வது பற்றியது. எங்கள் பேட்டர்கள் பேட்டர்களாக மிகவும் உண்மையானவர்கள், அவர்கள் எல்லாவற்றையும் சளைக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வை ஆதரிக்க வேண்டும். நன்றாகத் தொடங்குவது, ஆரம்பத்தில் பவுண்டரிகளைப் பெறுவது மற்றும் இரண்டு ஆரம்ப விக்கெட்டுகளையும் எடுக்க முயற்சிப்பது முக்கியம். எங்களுக்கு இரண்டு மாற்றங்கள் - ருதுராஜுக்குப் பதிலாக திரிபாதியும், முகேஷுக்குப் பதிலாக அன்ஷுல் காம்போஜும் வருகிறார்கள்.
-
Apr 11, 2025 19:07 IST
முதலில் பந்து வீசி சேசிங் செய்ய விருப்பம் - ரஹானே
அஜிங்க்யா ரஹானே: நாங்கள் முதலில் பந்து வீசுவோம். கடந்த ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தன. ஒரு அணியாக நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். ஒவ்வொரு ஆட்டத்தையும் மேம்படுத்துவது பற்றியது இது. இது ஒரு நல்ல மைதானம் போல் தெரிகிறது, பெரிதாக மாறாது. நாங்கள் ஆழமாக பேட்டிங் செய்கிறோம், அதனால்தான் முதலில் பந்து வீசி விஷயங்களைத் துரத்தப் பார்க்கிறோம். ஒரு மாற்றம் - ஸ்பென்சருக்குப் பதிலாக மொயீன் அலி வருகிறார்.
-
Apr 11, 2025 19:04 IST
டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது
-
Apr 11, 2025 18:11 IST
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்
கே.கே.ஆர்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மொயின் அலி/ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா.
-
Apr 11, 2025 18:10 IST
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்
சி.எஸ்.கே: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, சிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி/அன்ஷுல் கம்போஜ்.
-
Apr 11, 2025 17:44 IST
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் சி.எஸ்.கே மற்றும் கே.கே.ஆர் அணிகள் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 31 போட்டிகளில், சி.எஸ்.கே 19 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் கே.கே.ஆர் 11 முறை வெற்றி பெற்றுள்ளது.
-
Apr 11, 2025 17:43 IST
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்
ஐ.பி.எல் 2025 தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 25-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
-
Apr 11, 2025 17:43 IST
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐ.பி.எல். 2025 சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி தொடர்பாக உடனுக்குடன் தெரிந்து கொள்ள 'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.