MS Dhoni | IPL 2024 | Lucknow Super Giants | Chennai Super Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு லக்னோவில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீழ்த்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What record did Chennai Super Kings’ MS Dhoni make during clash against Lucknow Super Giants?
'தல' தோனி அதிரடி சரவெடி
இந்நிலையில், இந்தப் போட்டியில் 9 பந்துகளை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 28 ரன்கள் எடுத்து அசத்தினார்.
சாதனைகள்
இந்த நிலையில், இந்த போட்டியில் தோனி படைத்த சாதனைகள் பற்றி இங்கு பார்க்கலாம். இப்போட்டியில் 28 ரன்கள் எடுத்த தோனி, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனை படைத்தார். அவர் 5,023 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பெங்களூரு அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் 4,369 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இதேபோல், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) வரலாற்றில் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி படைத்துள்ளார். அவர் 20-வது ஓவரில் 66 சிக்ஸர்களை அடித்துள்ளார் -
மேலும், ஐ.பி.எல் 2024 சீசனின் 20வது ஓவரில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் தோனி இப்போது முதலிடத்தில் உள்ளார் - 57.
42 வயதான அவர் இந்த சீசனில் 4 முறை கடைசி ஓவரில் ஒரு பந்தையாவது விளையாடியுள்ளார். 16 பந்துகளில், தோனி 6 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் 356.25 ஆக உள்ளது.
ஐ.பி.எல் 2024ல் 20வது ஓவரில் அதிக ரன்கள் வீரர்கள் பட்டியலில் தோனி தான் முதல் இடத்தில் இருக்கிறார்.
1) எம்எஸ் தோனி - 57 ரன்கள், 16 பந்துகள், 6 சிக்ஸர்கள், 356.25 ஸ்ட்ரைக் ரேட்
2) ரொமாரியோ ஷெப்பர்ட் - 47 ரன்கள், 13 பந்துகள், ஐந்து சிக்ஸர்கள், 361.33 ஸ்ட்ரைக் ரேட்
3) தினேஷ் கார்த்திக் - 39 ரன்கள், 14 பந்துகள், 4 சிக்ஸர்கள், 278.57 ஸ்ட்ரைக் ரேட்
தோனி ஏற்கனவே ஐ.பி.எல் வரலாற்றில் கடைசி ஓவரில் 99 இன்னிங்ஸ்களில் (313 பந்துகளை எதிர்கொண்டு) 772 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 246.64 ஆக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“