scorecardresearch

CSK vs LSG Highlights: மழையால் போட்டி ரத்து; இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி

சென்னை – லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

CSK vs LSG Live Score | IPL 2023 Score | Chennai vs Lucknow Score
ஐபிஎல் 2023, சென்னை சூப்பர் கிங்ஸ் Vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்கோர்

 Chennai Super Kings vs Lucknow Super Giants IPL 2023 Highlights in Tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கிய 45வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

Indian Premier League, 2023Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow   08 June 2023

Lucknow Super Giants 125/7 (19.2)

vs

Chennai Super Kings  

Match Abandoned ( Day – Match 45 ) Match Abandoned

இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுதலின் போது மழை காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக மனன் வோரா மற்றும் கைல் மேயர்ஸ் ஜோடி களமிறங்கினர்.

இந்த ஜோடிக்கு சரியான தொடக்கம் கிடைக்காத நிலையில், மேயர்ஸ் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், தொடக்க வீரர் மனன் வோரா 10 ரன்னிலும் அவருக்குப் பின் வந்த கரண் சர்மா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் க்ருனால் பாண்ட்யா டக்-அவுட் ஆகி வெளியேற, அதிரடி ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 6 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினார்.

சென்னை அணி பந்துவீச்சில் மிரட்டலை தொடரவே, லக்னோ அணி 44 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு, களத்தில் இருந்த நிகோலஸ் பூரன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் பூரன் 20 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சென்னை அணியின் தீபக் சாஹரின் ஓவரை வெளுத்து வாங்கிய படோனி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 59 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. அந்த தருணத்தில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து இருந்தது.

தொடர்ந்து மழை பொழிவு நீடித்ததால், லக்னோ பேட்டிங் செய்ய வாய்ப்பு குறைவு என்றும், சென்னையின் வெற்றி இலக்கு 19 ஓவர்களில் 127 ரன்கள் – 17 ஓவர்களில் 117 ரன்கள் – 15 ஓவர்களில் 106 ரன்கள் – 12 ஓவர்களில் 89 ரன்கள் – 10 ஓவர்களில் 76 ரன்கள் -ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. மேலும், 5 ஓவர்கள் சேஸிங்கிற்கான கட்-ஆஃப் இரவு 7.28 வரை எனவும், அதற்குள் போட்டி தொடங்கவில்லை என்றால் ஆட்டம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மிதமான மழை கனமழையாக பொழிய தொடங்கியதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக 6:57 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதனால், சென்னை – லக்னோ அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு புள்ளி மூலம் சென்னை அணி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2வது இடத்தில் உள்ள லக்னோ அணியின் நெட் ரன்ரேட் +0.639 ஆக உள்ளது. சென்னையின் நெட் ரன்ரேட் +0.329 ஆக உள்ளது. 10 புள்ளிகளுடனும், +0.800 நெட் ரன்ரேடுடனும் ராஜஸ்தான் அணி 4வது இடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடனும், +0.532 ரன்ரேடுடனும் குஜராத் முதல் இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பந்துவீச்சில் மிரட்டிய சென்னை அணி தரப்பில் மொயின் அலி, மதீஷா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக பரம போட்டியாளரான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற சனிக்கிழமை (மே 6ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
19:13 (IST) 3 May 2023
மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து; இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

18:54 (IST) 3 May 2023
இரவு 7.28 மணிக்குப் பிறகு போட்டி நடக்க வாய்ப்பில்லை!

சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், ஐந்து ஓவர்கள் சேஸிங்கிற்கான கட்-ஆஃப் இரவு 7.28 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் போட்டி தொடங்கவில்லை என்றால் ஆட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்படும்.

18:30 (IST) 3 May 2023
லக்னோ பேட்டிங் செய்ய வாய்ப்பு குறைவு; சென்னையின் வெற்றி இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. லக்னோ அணியின் இன்னிங்சின் கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதமிருக்க மழை மீண்டும் பெய்ய தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. லக்னோ அணி மீண்டும் பேட் செய்யவில்லை என்றால், சென்னை அணியின் வெற்றிக்கான இலக்குகள் பின்வருமாறு இருக்கும் என்று கணிப்பட்டுள்ளது.

19 ஓவர்களில் 127 ரன்கள்

17 ஓவர்களில் 117 ரன்கள்

15 ஓவர்களில் 106 ரன்கள்

12 ஓவர்களில் 89 ரன்கள்

10 ஓவர்களில் 76 ரன்கள் எடுக்க வேண்டும்.

18:27 (IST) 3 May 2023
பந்துவீச்சில் மிரட்டிய சென்னைக்கு 19 ஓவரில் 127 ரன்கள் இலக்கு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டம் ஏற்கனவே 15 நிமிடம் தாமதமாக தொடங்கிய நிலையில், 20வது ஓவரில் 4 பந்துகள் மீதமிருக்க மழை மீண்டும் குறுக்கிட்டது. அதனால், 19.2 ஓவரில் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த ஆயுஷ் படோனி 59 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்படத் தொடங்குவதற்கு இன்னும் 40 நிமிடங்கள் உள்ள நிலையில், லக்னோ அணி மீண்டும் பேட் செய்யாவிட்டால், சென்னைக்கு இலக்கு 19 ஓவர்களில் 127 ரன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17:18 (IST) 3 May 2023
19 ஓவர் முடிவில் லக்னோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் கிருஷ்ணப்ப கவுதம் – ஆயுஷ் படோனி ஜோடி விளையாடி வருகின்றனர்.

தற்போது 19 ஓவர் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்துள்ளது.

17:13 (IST) 3 May 2023
18 ஓவர் முடிவில் லக்னோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் கிருஷ்ணப்ப கவுதம் – ஆயுஷ் படோனி, ஜோடி விளையாடி வருகின்றனர்.

தற்போது 18 ஓவர் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்துள்ளது.

17:11 (IST) 3 May 2023
நிக்கோலஸ் பூரன் அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சார்பில் களமாடிய நிக்கோலஸ் பூரன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

17:00 (IST) 3 May 2023
16 ஓவர் முடிவில் லக்னோ அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் – ஆயுஷ் படோனி, ஜோடி விளையாடி வருகின்றனர்.

தற்போது 16 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை எடுத்துள்ளது.

16:46 (IST) 3 May 2023
13 ஓவர் முடிவில் லக்னோ அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் – ஆயுஷ் படோனி, ஜோடி விளையாடி வருகின்றனர்.

தற்போது 13 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை எடுத்துள்ளது.

16:39 (IST) 3 May 2023
11 ஓவர் முடிவில் லக்னோ அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் – ஆயுஷ் படோனி, ஜோடி விளையாடி வருகின்றனர்.

தற்போது 11 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களை எடுத்துள்ளது.

16:31 (IST) 3 May 2023
9 ஓவர் முடிவில் லக்னோ அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் – கரண் சர்மா ஜோடி விளையாடி வருகின்றனர்.

தற்போது 9 ஓவர் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை எடுத்துள்ளது.

16:24 (IST) 3 May 2023
மார்கஸ் ஸ்டோனிஸ் அவுட்; க்ளீன் போல்ட் செய்த ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் கேப்டன் க்ருனால் பாண்டியா டக் -அவுட் ஆகி வெளியேறிய நிலையில், ஒரு பவுண்டரியை விரட்டிய மார்கஸ் ஸ்டோனிஸ் ஜடேஜாவின் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

7 ஓவர் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை எடுத்துள்ளது.

16:21 (IST) 3 May 2023
தீக்ஷனா-வுக்கு அடுத்த விக்கெட்; க்ருனால் பாண்டியா அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் மனன் வோஹ்ரா விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய கேப்டன் க்ருனால் பாண்டியா டக் -அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.

16:16 (IST) 3 May 2023
மனன் வோஹ்ரா அவுட்; க்ளீன் போல்ட் செய்த தீக்ஷனா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மனன் வோஹ்ரா 10 ரன்கள் எடுத்த நிலையில் தீக்ஷனா பந்தில் ஆட்டமிழந்தார்.

16:06 (IST) 3 May 2023
கைல் மேயர்ஸ் அவுட்; தொடக்க ஜோடியை காலி செய்த மொயீன் அலி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கைல் மேயர்ஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி (3.4வது ஓவரில்) பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

16:02 (IST) 3 May 2023
3 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் – மனன் வோஹ்ரா ஜோடி பேட்டிங் செய்து வருகின்றனர்.

3 ஓவர் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்களை எடுத்துள்ளது.

16:00 (IST) 3 May 2023
2 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் – மனன் வோஹ்ரா ஜோடி பேட்டிங் செய்து வருகின்றனர்.

2 ஓவர் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்துள்ளது.

15:54 (IST) 3 May 2023
ஆட்டம் இனிதே ஆரம்பம்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. அதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

லக்னோ அணியில் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் – மனன் வோஹ்ரா ஜோடி பேட்டிங் செய்து வருகின்றனர்.

முதல் ஓவர் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்களை எடுத்துள்ளது.

15:38 (IST) 3 May 2023
டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு; லக்னோ முதலில் பேட்டிங்!

லக்னோவில் இன்று பிற்பகல் 3:45 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்

15:27 (IST) 3 May 2023
டாஸ் 3:30 மணிக்கு; ஆட்டம் 3:45-க்கு தொடங்கும்!

லக்னோவில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

லக்னோவில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், டாஸ் 3:30 மணிக்கு என்றும், ஆட்டம் 3:45-க்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15:12 (IST) 3 May 2023
சென்னை – லக்னோ ஆட்டத்தில் மழை குறுக்கீடு; டாஸ் போடுவதில் தாமதம்!

லக்னோவில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், லக்னோவில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

14:52 (IST) 3 May 2023
சென்னை – லக்னோ அணிகளின் ஆடும் லெவன் எப்படி?

லக்னோ:

கைல் மேயர்ஸ், மனன் வோஹ்ரா, ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கே கௌதம், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், மார்க் வுட்

இம்பெக்ட் பிளேயர் – அமித் மிஸ்ரா

சென்னை

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேட்ச் & விக்கெட்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மிட்செல் சான்ட்னர்

இம்பெக்ட் பிளேயர் – ஆகாஷ் சிங்

14:50 (IST) 3 May 2023
தீக்ஷனாவுக்கு பதில் சான்ட்னர்!

இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர், பார்மில் இல்லாத மஹீஷ் தீக்ஷனாவுக்கு பதிலாக களமிறங்கலாம். இந்த சீசனில் 8.4 என்ற எக்கனாமியில் 6 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். பவர்பிளேயில் அவர் வீசிய 9 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. சான்ட்னரை மீண்டும் கொண்டு வர சிஎஸ்கே ஆசைப்படலாம்.

14:48 (IST) 3 May 2023
ராகுல், உனத்கட் வெளியே; வுட் உள்ளே!

திங்களன்று பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ராகுலின் வலது தொடையில் காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் உனட்கட் நெட்ஸில் பந்துவீசும்போது மோசமானகாயத்தை எதிர்கொண்டார். இந்த இருவரின் காயங்களின் அளவு இன்னும் கண்டறியப்படவில்லை.

ஆனால் இன்று புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் எல்எஸ்ஜி அணியில் அவர்கள் இடம் பெறுவது சந்தேகம்தான். ராகுல் இல்லாத நிலையில் க்ருனால் பாண்டியா அணியை வழிநடத்துவார். கேஎல் ராகுலுக்கு பதிலாக மனன் வோஹ்ரா களமிறங்குகிறார்.

மார்க் வுட் தனது மகளின் பிறப்புக்காக வீட்டிற்குச் செல்வதற்கு முன் லக்னோ அணியின் அடுத்த இரண்டு ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவப்பு மண் ஆடுகளம் பயன்பாட்டில் இருந்தால் அவர் நிச்சயம் களமிறங்குவார். வூட் தனது வேகத்துடன் எல்எஸ்ஜிக்கு விதிவிலக்கானவர். நான்காவது வெளிநாட்டு வீரர் இடத்திற்கான வுட் மற்றும் நவீன்-உல்-ஹக் இடையே டாஸ் அப் இருக்கும்.

14:12 (IST) 3 May 2023
கடினமான ஆடுகளம்

நடப்பு சீசன் போட்டிகள் நடக்கும் மற்ற ஆடுகளங்களை போல் லக்னோ, ரன் வேட்டைக்கு உகந்தது கிடையாது. மெதுவான மற்றும் மந்தமான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் பந்தை வலுவாக துரத்தியடிப்பது கடினம். உள்ளூர் அணியான லக்னோ இங்கு 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 3-ல் தோற்று இருக்கிறது. இதில் கடைசி இரு ஆட்டங்களில் குஜராத்துக்கு எதிராக 136 மற்றும் பெங்களுருவுக்கு எதிராக 127 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் சரண் அடைந்து விட்டது. எனவே ஆடுகள சூழலுக்கு ஏற்ப சாதுர்யமாக செயல்படும் அணியின் கையே களத்தில் ஓங்கி நிற்கும்.

14:11 (IST) 3 May 2023
லக்னோ அணி எப்படி?

கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் தொடையில் தசைப்பிடிப்பு காயத்தில் சிக்கியிருப்பது நிச்சயம் பின்னடைவாகும். பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது காயமடைந்த அவர் வேறுவழியின்றி வலியை தாங்கிக் கொண்டு 10-வது விக்கெட்டுக்கு பேட்டிங் செய்தார்.

ஆனால் அவரால் வேகமாக நகர்ந்து பேட்டை சுழற்ற முடியவில்லை. அவரது காயத்தன்மை குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிலைமையை பார்க்கும் போது, இன்றைய ஆட்டத்தில் அவர் களம் காண வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அவருக்கு பதிலாக குருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார்.

மற்றபடி லக்னோ அணியில் நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், கைல் மேயர்ஸ், பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக் நல்ல நிலையில் உள்ளனர். இந்த சீசனில் இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாத குயின்டான் டி காக் ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படலாம்.

14:09 (IST) 3 May 2023
வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை?

எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி 4ல் தோல்வியுடன் 10 புள்ளிகள் மற்றும் +0.329 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக மோதிய ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. அதனால், சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பவே முயலும்.

பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 200 ரன்கள் குவித்தும் கடைசி பந்தில் வெற்றியை கோட்டை விட்ட சென்னை அணியில் இறுதிகட்ட பந்து வீச்சு சீரற்ற வகையில் இருப்பது பலவீனமாக பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ், மகாலா காயத்தால் வெளியில் இருக்கும் நிலையில் பதிரானா, ஆகாஷ் சிங், துஷர் தேஷ்பாண்டே ஆகிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு கேப்டன் டோனி சமாளித்து வருகிறார். இதில் தேஷ்பாண்டே 9 ஆட்டத்தில் 17 விக்கெட் வீழ்த்தியிருந்தாலும் ரன்களை வாரி வழங்குகிறார். அவர் ஓவருக்கு சராசரியாக 11.07 ரன் விட்டுக்கொடுத்துள்ளார்.

பேட்டிங்கை பொறுத்தவரை டிவான் கான்வே (5 அரைசதத்துடன் 414 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (354 ரன்), ஷிவம் துபே (264 ரன்), ரஹானே (224 ரன்) ஆகியோர் சூப்பராக ஆடி வருகிறார்கள். சென்னை அணி ஏற்கனவே 12 ரன் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

13:46 (IST) 3 May 2023
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

இன்று பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Web Title: Csk vs lsg live cricket score chennai super kings vs lucknow super giants ipl 2023 live updates in tamil