Advertisment

CSK vs LSG Score, IPL 2024: ஸ்டாய்னிஸ் அதிரடி சதம்... சி.எஸ்.கே-வின் சேப்பாக்கம் கோட்டையைத் தகர்த்தது லக்னோ!

ஐ.பி.எல். 2024 தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
CSK vs LSG LIVE Score IPL 2024 match 39 today Chennai Super Kings vs Lucknow Super Giants scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதல்

IPL 2024 | Chennai Super Kings | Lucknow Super Giants: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது.

Advertisment

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் 108 ரன்கள் அடித்தார். அதே போல, சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் அடித்தது.

இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 124 ரன்கள் அடித்தார். ஒன்மேன் ஆர்மியாக ஸ்டாய்னிஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி லக்னோ அனி அபார வெற்றி பெற்றது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கத்தை தகர்த்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs LSG LIVE Score, IPL 2024

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Apr 23, 2024 23:41 IST
    சி.எஸ்.கே-வின் சேப்பாக்கம் கோட்டையை உடைத்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக விளங்கிய சேப்பாக்கம் மைதானத்திலேயே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சி.எஸ்.கே-வை வீழ்த்தி சேப்பாக்கம் கோட்டையை உடைத்துள்ளது.



  • Apr 23, 2024 23:36 IST
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அபார வெற்றி

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் கடைசை வரை ஆட்டமிழக்காமல், 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்திருந்தார். தீபக் ஹூடா 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார்.



  • Apr 23, 2024 23:31 IST
    வெற்றிக்கு அழைத்துச் சென்றார் ஸ்டாய்னிஸ்

    20-வது ஓவரை முஸ்தாஃபிசுர் வீசினார் 

    முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் 6 ரன்கள் அடித்தார்.

    2வது பந்தில்  ஸ்டாய்னிஸ் 4 ரன்கள் அடித்தார்.

    3வது பந்தில் ஸ்டாய்னிஸ் 4 ரன்கள் அடித்தார். நோ பால், ஃபிரீ ஹிட், மீண்டும் வீசப்பட்ட பந்தில் 4 ரன்கள் அடித்தார் ஸ்டாய்னிஸ்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.



  • Apr 23, 2024 23:25 IST
    ஹூடா பவுண்டரி விளாசல்

    19-வது ஓவரை பதிரானா வீசினார் 

    முதல் பந்தை ஸ்டாய்னிஸ் பவுண்டரிக்கு விரட்டி 4 ரன்கள் செய்தார்.


    2வது பந்தில்  ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார்.

    3வது பந்தில் தீபக் ஹூடா 4 ரன்கள் அடித்தார்.

    4வது பந்தில் ஹூடா 4 ரன்கள் அடித்தார். 

    5வது பந்தை ஹூடா டாட் செய்தார்.

    6வது பந்தில் தீபக் ஹூடா 2 ரன்கள் அடித்தார். 

    எல்.எஸ்.ஜி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 23:20 IST
    ஸ்டாய்னிஸ் அதிரடி சதம்

    18-வது ஓவரை முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசினார் 

    முதல் பந்தை ஸ்டாய்னிஸ் டாட் செய்தார்.


    2வது பந்தில்  ஸ்டாய்னிஸ் 6 ரன்கள் அடித்தார்.

    3வது பந்தை ஸ்டாய்னிஸ் டாட் செய்தார்.

    4வது பந்தில் ஸ்டாய்னிஸ் 2 ரன்கள் அடித்தார். 

    5வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    6வது பந்தில் தீபக் ஹூடா 6 ரன்கள் அடித்தார். 

    எல்.எஸ்.ஜி அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 23:14 IST
    பதிரானா பந்தில் நிக்கோலஸ் பூரண் அவுட் 

    17-வது ஓவரை பதிரானா வீசினார் 

    முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் டாட் செய்தார்.

    2வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    3வது பந்தில் நிக்கோலஸ் பூரண், ஷர்துல் தாக்கூர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து தீபக் ஹூடா பேட்டிங் செய்ய வந்தார்.

    4வது பந்தில் ஹூடா 1 ரன் அடித்தார். 

    5வது பந்தில் ஸ்டாய்னிஸ் 4 ரன்கள் அடித்தார். 

    6வது பந்தில் ஸ்டாய்னிஸ் டாட் செய்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 23:04 IST
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 150 ரன்களைத் தாண்டியது

    16-வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார் 

    முதல் பந்தில் நிக்கோலஸ் பூரண் 6 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தில் நிக்கோலஸ் பூரண் 4 ரன்கள் அடித்தார். 

    3வது பந்தில் நிக்கோலஸ் பூரண் 6 ரன்கள் அடித்தார்.

    4வது பந்தில் நிக்கோலஸ் பூரண் 2 ரன்கள் அடித்தார். 

    5வது பந்தில் நிக்கோலஸ் பூரண் 1 ரன் அடித்தார். 

    6வது பந்தை ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    எல்.எஸ்.ஜி அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:59 IST
    நிக்கோலஸ் பூரண் சிக்ஸ் 

    15-வது ஓவரை முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசினார் 

    முதல் பந்தில் நிக்கோலஸ் பூரண் 1 ரன் அடித்தார். 

    2வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    3வது பந்தில் நிக்கோலஸ் பூரண் 4 ரன்கள் அடித்தார்.

    4வது பந்தில் நிக்கோலஸ் பூரண் 1 ரன் அடித்தார். 

    5வது பந்தில் ஸ்டாய்னிஸ் 6 ரன்கள் அடித்தார். 

    6வது பந்தை ஸ்டாய்னிஸ் டாட் செய்தார். 

    எல்.எஸ்.ஜி அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:53 IST
     நிக்கோலஸ் பூரண் பவுண்டரி

    14-வது ஓவரை பதிரானா வீசினார் 

    முதல் பந்தில் நிக்கோலஸ் பூரண் 1 ரன் அடித்தார். 

    2வது பந்தை ஸ்டாய்னிஸ் டாட் செய்தார்.

    3வது பந்தில் ஸாய்னிஸ் 1 ரன் அடித்தார்.

    4வது பந்தில் நிக்கோலஸ் பூரண் 4 ரன்கள் அடித்தார். 

    5வது பந்தில் நிக்கோலஸ் பூரண் 1 ரன் அடித்தார். 

    6வது பந்தில் ஸ்டாய்னிஸ் 2 ரன்கள் அடித்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:44 IST
    100 ரன்களைக் கடந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

    13-வது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார்.


    முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    2வது பந்தில் நிக்கோலஸ் பூரண் 1 ரன் அடித்தார்.

    3வது பந்தை எதிர்கொண்ட ஸ்டாய்னிஸ் 6  ரன்கள் அடித்தார்.

    4வது பந்தில் ஸ்டாய்னிஸ் 2 ரன்கள் அடித்தார். 

    5வது பந்தில் ஸ்டாய்னிஸ் 2 ரன்கள் அடித்தார். 

    6வது பந்தில் ஸ்டாய்னிஸ் 4 ரன்கள் அடித்தார். நோ பால் ஆனது. அடுத்து வீசிய பந்தும் ஒயிடு ஆனது. அடுத்து வீசிய பந்து டாட் ஆனது.

    எல்.எஸ்.ஜி அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:41 IST
    களமிறங்கிய நிக்கோலஸ் பூரண்

    12-வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார்.

    படிக்கல் அடுத்து நிக்கோலஸ் பூரண் பேட்டிங் செய்ய வந்தார். 

    முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் 4 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார்.

    3வது பந்தை எதிர்கொண்ட பூரண் 1 ரன் அடித்தார்.

    4வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    5வது பந்தில் பூரண் 1 ரன் அடித்தார். 

    6வது பந்து ஒயிடு பந்தானது. மீண்டும் வீசப்பட்டதில், ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:37 IST
    படிக்கல் போல்ட் அவுட்

    11-வது ஓவரை பதிரானா வீசினார்.

    முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    2வது பந்தில் படிக்கல் 1 ரன் அடித்தார்.

    3வது பந்தை ஸ்டாய்னிஸ் டாட் செய்தார்.

    4வது பந்து ஒயிடு பந்தானது. மீண்டும் வீசியதில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    5வது பந்து ஒயிடு பந்தானது. மீண்டும் வீசியதில், படிக்கல் டாட் செய்தார்.

    6வது பந்தில் தேவ்தத் படிக்கல் போல்ட் அவுட் ஆனார்.

    எல்.எஸ்.ஜி அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:30 IST
    ஸ்டாய்னிஸ் அதிரடி அரைசதம்

    10-வது ஓவரை ஜடேஜா வீசினார்.

    முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

    2வது பந்தை படிக்கல் எதிர்கொண்டார், 1 பைஸ் ரன் கிடைத்தது.

    3வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    4வது பந்தை படிக்கல் டாட் செய்தார். 

    5வது பந்தில் படிக்கல் 1 ரன் அடித்தார்.

    6வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 


    எல்.எஸ்.ஜி அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:21 IST
    மொயின் அலி ஓவரில் சிக்ஸ், ஃபோர் பறக்கவிட்ட ஸ்டாய்னிஸ்

    9-வது ஓவரை மொயின் அலி வீசினார்.

    முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் 4 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தில் ஸ்டாய்னிஸ் 6 ரன்கள் அடித்தார். 

    3வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    4வது பந்தில் படிக்கல் 2 ரன்கள் அடித்தார்.

    5வது பந்தில் படிக்கல் 2 ரன் அடித்தார். 

    6வது பந்தை தேவ்தத் டாட் செய்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:19 IST
    ஜடேஜா பந்தில் சிக்ஸ் அடித்த ஸ்டாய்னிஸ்

    8-வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார்.

    முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    2வது பந்தை படிக்கல் டாட் செய்தார்.

    3வது பந்தில் படிக்கல் 1 ரன் அடித்தார். 

    4வது பந்தில் ஸ்டாய்னிஸ் 6 ரன்கள் அடித்தார்.

    5வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    6வது பந்து நோ பால் ஆனது. படிக்கல் 1 ரன் அடித்தார். நோ பாலுக்கு 1 ரன் வழங்கப்பட்டது. மீன்டும் வீசப்பட்ட பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:12 IST
    6 ரன் மட்டுமே கொடுத்த மொயின் அலி

     

    7-வது ஓவரை மொயின் அலி வீசினார்.

    முதல் பந்தில் தேவ்தத் படிக்கல் 1 ரன் அடித்தார். 

    2வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன்கள் அடித்தார். 

    3வது பந்தில் தேவ்தத் படிக்கல் 1 ரன் அடித்தார். 

    4வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார்.

    5வது பந்தில் படிக்கல் 1 ரன் அடித்தார். 

    6வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:07 IST
    ஸ்டாய்னிஸ் அடுத்தடுத்து பவுண்டரி விளாசல்

    6-வது ஓவரை  ஷர்துல் தாக்கூர் வீசினார்.

    முதல் பந்தை ஸ்டாய்னிஸ் பவுண்டரிக்கு விரட்டி 4 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தில் ஸ்டாய்னிஸ் 4 ரன்கள் அடித்தார். 

    3வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார்.

    4வது பந்தில் படிக்கல் 1 ரன் அடித்தார்.

    5வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    6வது பந்தில் படிக்கல் 1 ரன் அடித்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 22:03 IST
    கே.எல்.ராகுல் அவுட்

    5-வது ஓவரை  முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசினார்.

    முதல் பந்தை கே.எல். ராகுல் பவுண்டரிக்கு விரட்டி 4 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தை கே.எல். ராகுல் டாட் செய்தார்.

    3வது பந்தை கே.எல். ராகுல் டாட் செய்தார்.

    4வது பந்தை கே.எல். ராகுல், ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

    அடுத்து, தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்ய வந்தார்.

    5வது பந்தை எதிர்கொண்ட படிக்கல் டாட் செய்தார். 

    6வது பந்தை தேவ்தத் படிக்கல் டாட் செய்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 21:58 IST
    ஸ்டாய்னிஸ் பவுண்டரி விளாசல் 

    4-வது ஓவரை  துஷார் தேஷ் பாண்டே வீசினார்.

    முதல் பந்தை ஸ்டாய்னிஸ் டாட் செய்தார். 

    2வது பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    3வது பந்தில் கே.எல். ராகுல் 2 ரன்கள் அடித்தார்.

    4வது பந்தில் கே.எல். ராகுல் 1 ரன் அடித்தார். 

    5வது பந்தை ஸ்டாய்னிஸ் பவுண்டரிக்கு விரட்டி 4 ரன்கள் அடித்தார். 

    6வது பந்தை ஸ்டாய்னிஸ் டாட் செய்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 21:55 IST
    ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரி விளாசல் 

    ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரி விளாசல் 


    3-வது ஓவரை  தீபக் சாஹர் வீசினார்.

    முதல் பந்தை கே.எல். ராகுல் டாட் செய்தார். 

    2வது பந்தில் கே.எல். ராகுல் 1 ரன் அடித்தார். 

    3வது பந்தை ஸ்டாய்னிஸ் 4 ரன்கள் அடித்தார்.

    4வது பந்தில் ஸ்டாய்னிஸ் டாட் செய்தார். 

    5வது பந்தை ஸ்டாய்னிஸ் டாட் செய்தார். 

    6வது பந்தில் ஸ்டாய்னிஸ் 4 ரன்கள் அடித்தார்.

    எல்.எஸ்.ஜி அணி 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 21:51 IST
    கே.எல். ராகுல் சிக்ஸ் 

    2-வது ஓவரை  துஷார் தேஷ்பாண்டே வீசினார்.

    முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் 1 ரன் அடித்தார். 

    2வது பந்தில் கே.எல். ராகுல் 2 ரன்கள் அடித்தார். 

    3வது பந்தை கே.எல். ராகுல் டாட் செய்தார். 

    4வது பந்தில் கே.எல். ராகுல் சிக்ஸ் அடித்தார். 

    5வது பந்தை கே.எல். ராகுல் டாட் செய்தார். 

    6வது பந்தில் 1 லெக் பை ரன் கிடைத்தது. 

    எல்.எஸ்.ஜி அணி 2 ஓவர்கல் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 21:46 IST
    முதல் ஓவரில் குயிண்டன் டிகாக் போல்ட் அவுட்

    தல் ஓவரை  தீபக் சாஹர் வீசினார்.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில், குயிண்டன் டிகாக், கே.எல். ராகுல் களமிறங்கினர்.

    முதல் பந்தை குயிண்டன் டிகாக் டாட் செய்தார். 

    2வது பந்தை குயிண்டன் டிகாக் டாட் செய்தார். 

    3வது பந்தில் குயிண்டன் டிகாக் போல்ட் அவுட் ஆனார். 

    அடுத்து ஸ்டாய்னிஸ் பேட்டிங் செய்ய வந்தார். 

    4வது பந்தில் ஸ்டாய்னிஸ் டாட் செய்தார். 

    5வது பந்தில் ஸ்டாயினிஸ் 1 ரன் அடித்தார். 

    6வது பந்தில் கே.எல். ராகுல் டட் செய்தார். 


    எல்.எஸ்.ஜி அணி முதல் ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 1 ரன் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 21:19 IST
    211 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சி.எஸ்.கே

    20வது ஓவரை ஸ்டாயினிஸ் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட துபே 6 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தை துபே 2 ரன்கள் அடித்தார். 

    3வது பந்தில் துபே 2 ரன்கள் அடித்தார்.

    4வது பந்தில் துபே ரன் அவுட் ஆனார். அடுத்து, தல தோனி களமிறங்கினார்.

    5வது பந்தில் துபே 1 ரன் அடித்தார். 

    6வது பந்தில் தோனி 4 ரன்கள் அடித்தார். 

    சி.எஸ்.கே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.



  • Apr 23, 2024 21:12 IST
    அதிரடி அரைசதம் அடித்த துபே; சி.எஸ்.கே 19 ஓவர்களில் 196/3

    19வது ஓவரை மோசின் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட துபே 6 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தை துபே டாட் செய்தார். 

    3வது பந்தில் துபே 4 ரன்கள் அடித்தார்.

    4வது பந்தில் துபே 6 ரன்கள் அடித்தார். 22 பந்துகளில் 56 ரன்கள், அதிரடி அரைசதம் அடித்தார்.

    5வது பந்தில் துபே 1 ரன் அடித்தார். டிகாக் கேட்ச் விட்டார். செம அடி.

    6வது பந்தில் ருதுராஜ் டாட் ஆனது 

    சி.எஸ்.கே 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 21:08 IST
    அதிரடி சதம் அடித்தார் ருதுராஜ்; சி.எஸ்.கே 18 ஓவர்களில் 178/3

     

    18வது ஓவரை யஷ் தாக்கூர் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 1 ரன் அடித்தார். 

    2வது பந்தை துபே 1 ரன் அடித்தார்.

    3வது பந்தில் ருதுராஜ் 6 ரன்கள் அடித்தார்.

    4வது பந்தில் ருதுராஜ் 4 ரன் அடித்தார். 56 பந்துகளில் 103 ரன்கள் அடித்தார். ருதுராஜ் அதிரடி சதம் அடித்தார்.

    5வது பந்தில் ருதுராஜ் 4 ரன்கள் அடித்தார். ரவி பிஷ்னோய் இடம் கேட்ச் மிஸ் ஆனது.

    6வது பந்தில் ருதுராஜ் டாட் ஆனது 

    சி.எஸ்.கே 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 21:01 IST
    17 ஓவர்களில் சி.எஸ்.கே 162/3

    17வது ஓவரை மோசின் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 6 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தை ருதுராஜ் டாட் செய்தார்.

    3வது பந்து வெளியே சென்றதால், ருதுராஜ் அடிக்க முடியவில்லை. ரிவியூ கேட்கப்பட்டது ஒயிட் என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் வீசப்பட்ட பந்தில் 1 ரன் அடித்தார்.

    4வது பந்தில் துபே 1 ரன் அடித்தார்.

    5வது பந்தை ருதுராஜ் டாட் செய்தார்.

    6வது பந்து டாட் ஆனது 

    சி.எஸ்.கே 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:55 IST
    ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த துபே

    16வது ஓவரை யஷ் தாக்கூர் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 1 அடித்தார். 

    2வது பந்தில் துபே 6 ரன்கள் அடித்தார். 83 மீட்டர் சிக்ஸ். 

    3வது பந்தில் துபே 6 ரன்கள் அடித்தார். தொடர்ந்து 2 சிக்ஸ்.

    4வது பந்தில் துபே 6 ரன்கள் அடித்தார். தொடர்ந்து 3 சிக்ஸ்.

    5வது பந்து டாட்.

    6வது பந்து டாட் ஆனது 

    சி.எஸ்.கே 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:48 IST
    இந்த போட்டியில் முதல் சிக்ஸ் அடித்தார் ருதுராஜ்

    15வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் மிட் விக்கெட்டில்த் தூக்கிவிட்டு 6 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்தார்.

    3வது பந்தில் துபே 4 ரன்கள் அடித்தார். 

    4வது பந்தில் துபே 2 ரன் அடித்தார். 

    5வது பந்து ஒயிட் பந்தாக வெளியே சென்றது.

    மீண்டும் வீசப்பட்ட 5வது பந்தில் ருதுராஜ் 2 ரன்கள் அடித்தார். 

    6வது பந்தில் ருதுராஜ் 1 அடித்தார். 

    சி.எஸ்.கே 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:41 IST
    துபே பவுண்டரி

    4வது ஓவரை ஹென்ரி வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட துபே 4 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தை துபே டாட் செய்தார்.

    3வது பந்தில் துபே 1 ரன் அடித்தார். 

    4வது பந்தை ருதுராஜ் டாட் செய்தார். 

    5வது பந்தில் ருதுராஜ் 2 ரன்கள் அடித்தார். பவுண்டரியில் தடுக்கப்பட்டது.

    6வது பந்தில் ருதுராஜ் 1 அடித்தார். 

    சி.எஸ்.கே 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:41 IST
    துபே பவுண்டரி

    4வது ஓவரை ஹென்ரி வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட துபே 4 ரன்கள் அடித்தார். 

    2வது பந்தை துபே டாட் செய்தார்.

    3வது பந்தில் துபே 1 ரன் அடித்தார். 

    4வது பந்தை ருதுராஜ் டாட் செய்தார். 

    5வது பந்தில் ருதுராஜ் 2 ரன்கள் அடித்தார். பவுண்டரியில் தடுக்கப்பட்டது.

    6வது பந்தில் ருதுராஜ் 1 அடித்தார். 

    சி.எஸ்.கே 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:37 IST
    போட்டியின் முதல் சிக்ஸ் அடித்த துபே

    3வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட துபே டாட் செய்தார். 

    2வது பந்தில் துபே 1 ரன் அடித்தார்.

    3வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் டாட் செய்தார்.

    4வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்தார்.

    5வது பந்தில் துபே 6 ரன்கள் அடித்தார். 

    6வது பந்தில் துபே 1 அடித்தார். 


    சி.எஸ்.கே 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:32 IST
    ஜடேஜா - ருதுராஜ் பார்ட்னர்ஷிப் 50 ரன்கள்; உடனே ஜடேஜா அவுட்

    12வது ஓவரை மோசின் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா 1 ரன் அடித்தார்.

    2வது பந்தில் ருதுராஜ் 4 ரன் அடித்தார்.

    3வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 2 ரன் அடித்தார். 

    4வது பந்தில் ருதுராஜ் 1 ரன்கள் அடித்தார்.

    5வது பந்தில் ஜடேஜா அவுட் ஆனார். 

    அடுத்து, சிவம் துபே வந்தார். 

    6வது பந்தில் துபே 1 ரன் அடித்தார். 


    சி.எஸ்.கே 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:26 IST
    ஓவர் தவறாமல் பவுண்டரி அடிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்

    1வது யஷ் க்ருணால் பாண்டியா வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா டாட் செய்தார். 

    2வது பந்தில் ஜடேஜா 1 ரன் அடித்தார்.

    3வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 4 ரன்கள் அடித்தார். 

    4வது பந்தில் ருதுராஜ் 1 ரன்கள் அடித்தார்.

    5வது பந்தில் ஜடேஜா 1 ரன் அடித்தார்.

    6வது பந்தில் ஜடேஜா 2 ரன் அடித்தார். 


    சி.எஸ்.கே 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:22 IST
    தொடர்ந்து அடிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்

    10வது யஷ் தாக்கூர் ஓவரை  வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 1 ரன் அடித்தார். 

    2வது பந்தில் ஜடேஜா 1 ரன் அடித்தார்.

    3வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 4 ரன்கள் அடித்தார். 

    4வது பந்தில் ருதுராஜ் 2 ரன்கள் அடித்தார்.

    5வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்தார்.

    6வது பந்தில் ஜடேஜா 2 ரன் அடித்தார். 


    சி.எஸ்.கே 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:15 IST
    அரை சதம் அடித்தார் ருதுராஜ் கெய்க்வாட்

    9வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா டாட் செய்தார்.

    2வது பந்தில் ஜடேஜா 1 ரன் அடித்தார்.

    3வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 1 ரன் அடித்தார். 

    4வது பந்தில் ஜடேஜா 1 ரன் அடித்தார்.

    5வது பந்தை ருதுராஜ் 4 ரன்கள் அடித்தார்.

    6வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்தார். 


    சி.எஸ்.கே 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:12 IST
    ஸ்லோ பவுன்சரை ஜடேஜா பவுண்டரிக்கு அடித்தார்

     

    8வது ஓவரை யஷ் தாக்கூர் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 2 ரன் அடித்தார்.

    2வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 1 ரன் அடித்தார்.

    3வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா டாட் செய்தார். 

    4வது பந்தில் ஜடேஜா 4 ரன்கள் அடித்தார்.

    5வது பந்து வீசிய தாக்கூர் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தார். ரிவியூ எடுக்கப்பட்டுள்ளது. ரிவியூவில் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

    6வது பந்தில் ஜடேஜா 2 ரன் அடித்தார். 


    சி.எஸ்.கே 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:05 IST
    ஜடேஜா முதல் பவுண்டரி அடித்தார்

    7வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 1 ரன் அடித்தார்.

    2வது பந்து ஃபுல்டாஸ், இதை எதிர்கொண்ட ஜடேஜா 1 ரன் அடித்தார்.

    3வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் டாட் செய்தார். 

    4வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்தார்.

    5வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா 4 ரன் அடித்தார்.

    6வது பந்து டாட் ஆனது. 

    சி.எஸ்.கே 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 20:01 IST
    டேரில் மிட்செல் அவுட் 

    6வது ஓவரை யஷ் தாக்கூர் வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 1 ரன் அடித்தார்.

    2வது பந்தை எதிர்கொண்ட மிட்செல் ஹூடோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து, ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார்.

    3வது பந்தை ஜடேஜா டாட் செய்தார். 

    4வது பந்து ஜடேஜா பேட்டில் படாமல் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது. 

    5வது பந்து டாட் ஆனது. 

    6வது பந்து டாட் ஆனது. 

    சி.எஸ்.கே 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 19:55 IST
    ருதுராஜ் மீண்டும் 2 பவுண்டரி

    5வது ஓவரை ஹென்ரி வீசினார்.

    முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 4 ரன்கள் அடித்தார்.

    2வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் மீண்டும் 4 ரன்கள் அடித்தார். 

    3வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்தார்.

    4வது பந்தில் மிட்செல் 1 ரன் அடித்தார்.

    5வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் டாட் செய்தார். 

    6வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்தார். 

    சி.எஸ்.கே 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 19:50 IST
    ருதுராஜ் அடித்த 2 பவுண்டரி

    4வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார்.

    முதல் பந்தை மிட்செல் எதிர்கொண்டார். முதல் பந்தில் 1 ரன் எடுத்தார்.

    2வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ், பவுண்டரி அடித்தார். 

    3வது பந்தை ருதுராஜ் மீண்டும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அது ஹென்ரியால் கடினமான கேட்ச் விடப்பட்டது. 

    4வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்தார்.

    5வது பந்தை எதிர்கொண்ட மிட்செல் 1 ரன் அடித்தார்.

    6வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்தார். 

    சி.எஸ்.கே 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 23, 2024 19:46 IST
    3வது ஓவரில் 5 ரன்கள் 

    3வது ஓவரை ஹென்ரி வீசினார்.

    முதல் பந்தை மிட்செல் எதிர்கொண்டார். முதல் பந்து டாட் ஆனது.

    2வது பந்தில் மிட்செல் 2 ரன் அடித்தார்.

    3வது பந்து டாட் ஆனது. 

    4வது பந்தில் மிட்செல் 1 ரன் அடித்தார்.

    5வது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் 2 ரன் அடித்தார்.

    6வது பந்து டாட் ஆனது.

    சி.எஸ்.கே 3 ஒவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள்



  • Apr 23, 2024 19:41 IST
    ருதுராஜ் அடித்த பந்தை கேட்ச் கோட்டை விட்ட தாக்கூர்

    2வது ஓவரை மோசின் வீசினார்.

    ருதுராஜ் அடித்த பந்தை கேட்ச் கோட்டை விட்ட தாக்கூர்

    முதல் பந்தில் மிட்செல் ஃபோர் அடித்தார். 

    4வது பந்தில் ருதுராஜ் ஃபோர் அடித்தார்.

    6வது பந்தில் ருதுராஜ் 2 ரன் அடித்தார். 

    சி.எஸ்.கே 2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்தது.



  • Apr 23, 2024 19:38 IST
    முதல் ஓவரிலேயே ரஹானே அவுட்; பாய்ந்து கேட்ச் பிடித்த கே.எல். ராகுல்

    முதல் ஓவரை லக்னோ அணியின் பந்துவீச்சாளர் ஹென்ரி வீசினார். 

    முதல் பந்தை சந்தித்த ரஹானே ஒரு ரன் அடித்து விட்டு ஒடி வரும்போது, எதிர்முனையில் இருந்து ஓடிய ருதுராஜ் ரன் அவுட் ஆகாமல் தப்பித்தார்.

    இரண்டாவது பந்டஹி எதிர்கொண்ட ருது ராஜ் டாட் செய்தார். 

    மூன்றாவது பந்தில் ருதுராஜ் 2 ரன்கள் அடித்தார். 

    4-வது பந்தில் ருதுராஜ் 1 ரன் அடித்துவிட்டு எதிர்முனைக்கு வந்தார். 

    5-வது பந்தை எதிர்கொண்ட ரஹானே தட்டிவிட கே.எல். ராகுல் பாய்ந்து கேட்ச் பிடித்தார். இதன் மூலம் ரஹானே  விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

    அடுத்து, மிட்செல் பேட்டிங் செய்ய வந்தார். 

    6-வது பந்தை எதிர்கொண்ட மிட்செல், ஃபோர் அடித்தார். 



  • Apr 23, 2024 19:30 IST
    களமிறங்கிய சி.எஸ்.கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்,  ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்கியா ரஹானே களமிறங்கினர்.



  • Apr 23, 2024 19:07 IST
    டாஸ் வென்ற லக்னோ கேப்டன் பந்து வீச்சு தேர்வு; சி.எஸ்.கே பேட்டிங்

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சி.எஸ்.கே பேட்டிங் செய்கிறது.



  • Apr 23, 2024 18:08 IST
    இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: 

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா அல்லது தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, குருணல் பாண்ட்யா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொசின்கான், யாஷ் தாக்குர்.



  • Apr 23, 2024 18:07 IST
    இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: 

    சென்னை சூப்பர் கிங்ஸ்:  ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி, மொயீன் அலி அல்லது டேரில் மிட்செல் அல்லது தீக்ஷனா, டோனி, தீபக் சாஹர், துஷர் தேஷ் பாண்டே, முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.



  • Apr 23, 2024 18:06 IST
    நம்பிக்கையுடன் களமாடும் லக்னோ  

    லக்னோ அணியும் 4 வெற்றி, 3 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை அணி 177 ரன்னை இலக்காக நிர்ணயித்த போதிலும், கேப்டன் ராகுல், குயின்டான் டி காக் அரைசதம் அடித்து லக்னோவை எளிதில் வெற்றி பெற வைத்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள்.



  • Apr 23, 2024 18:06 IST
    பதிலடி கொடுக்குமா சென்னை?

    சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 3 தோல்வி (டெல்லி, ஐதராபாத், லக்னோவுக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. 

    லக்னோவில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இதே லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சென்னை அணி எதிர்கொண்டது. அதில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு சுடச்சுட பதிலடி கொடுக்குமா? என்பதே சென்னை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.



  • Apr 23, 2024 18:06 IST
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.



Chennai Super Kings Lucknow Super Giants IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment