ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இரண்டு அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள்தான் என்று கூறலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது என்றால் மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் சென்னை அணியின் ஜெர்ஸி அணிந்து மைதானமே மஞ்சளாக காட்சி அளிக்கும். சென்னை அணிக்கு அந்த அளவுக்கு உள்ளூரில் ரசிகர்களின் ஆதரவு இருக்கும். அதனால், சென்னை பெரும்பாலான போட்டிகளில் சென்னை சேப்பாக்கத்தில் வெற்றியைக் குவிக்கத் தவறுவதில்லை.
தற்போது நடந்துவரும் ஐ.பி.எல் தொடரில், சென்னை – மும்பை அணிகள் இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 6) மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதனால், சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த போட்டிகளில் சென்னை அணியின் ஆட்டம் எப்படி இருந்தது. சேப்பாக்கம் மைதானம் எந்த அணிக்கு சாதகமாக இருக்கும், சேப்பாக்கத்தில் எந்த அணி சிறப்பாக விளையாடி இருக்கிறது என்று திரும்பிப் பார்த்தால், சென்னை அணி மும்பையை அணியைவிட குறைவாகவே வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் அதன் உறுதியான மற்றும் வறண்ட பிட்ச்க்கு புகழ் பெற்றது. சேப்பாக்கம் மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இருந்தாலும்கூட, பேட்டிங்குக்கு சாதகமாகவும் இருக்கும். ஏனெனில், ஆடுகளம் குறைந்த புல்வெளியைக் கொண்டுள்ளது, இது பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இருப்பினும், பிற்பகல் விளையாட்டுகளின் போது நிலைமை மாறுபடலாம். மெதுவாக பந்துவீசுபவர்கள் பிற்பகலில் ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தலாம், இதனால் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 போட்டிகளில் விளையாடி 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 17 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 1 போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிந்துள்ளது.
அதே போல, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 7 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
ஐ.பி.எல் வரலாற்றில் இரு அணிகளும் 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய ஓரிரு அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று. சென்னைக்கு எதிரான 35 ஆட்டங்களில் 20 வெற்றிகளுடன் மும்பை முன்னணியில் உள்ளது.
இதன் மூலம், சென்னை அணியின் மட்டமான சாதனையால், சென்னை அணியைவிட மும்பை அணி பெர்ஃபார்மன்ஸில் முதலிடத்தில் உள்ளது. இதனால், சேப்பாக்கத்திலும் மும்பை அணிக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“