scorecardresearch

CSK vs MI Highlights: பவுலிங், பேட்டிங்கில் மிரட்டல்; மும்பை வெளுத்து வாங்கிய சென்னைக்கு அசத்தல் வெற்றி

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

Chennai (CSK) vs Mumbai (MI) Live Score IPL 2023 Match 49
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர்

IPL 2023 CSK vs MI Live Score Updates in Tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதின.

Indian Premier League, 2023MA Chidambaram Stadium, Chennai   07 June 2023

Chennai Super Kings 140/4 (17.4)

vs

Mumbai Indians   139/8 (20.0)

Match Ended ( Day – Match 49 ) Chennai Super Kings beat Mumbai Indians by 6 wickets

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேமரூன் கிரீன் – இஷான் கிஷன் ஜோடி களமாடிய நிலையில், கிரீன் 6 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் 7 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் டக் அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

களத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் – நேஹால் வதேரா சிறிது நேரம் விக்கெட் சரிவை மீட்ட நிலையில், 3 பவுண்டரிகள் விரட்டிய சூரியகுமார் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த நேஹால் வதேரா அரைசதம் அடித்து 64 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் 2 பவுண்டரியை ஓட விட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்கம் முதலே தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சென்னை அணி தரப்பில் மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடியாக மட்டையைச் சுழற்றி ருதுராஜ் 4 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 30 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரஹானே ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரியை விரட்டி 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராயுடு 12 ரன்னிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் டெவோன் கான்வே 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

களத்தில் இருந்த ஷிவம் துபே – கேப்டன் தோனி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 140 ரன்கள் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது. இதன்மூலம் சென்னை அணி மும்பையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
19:08 (IST) 6 May 2023
சென்னைக்கு அசத்தல் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவோன் கான்வே 44 ரன்கள் எடுத்தார்.

18:58 (IST) 6 May 2023
சென்னை அணியின் வெற்றிக்கு 20 பந்துகளில் 10 ரன்கள் தேவை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது.

சென்னை அணியில் துபே – தோனி ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

சென்னை அணியின் வெற்றிக்கு 20 பந்துகளில் 10 ரன்கள் தேவை

18:38 (IST) 6 May 2023
ராயுடு அவுட்; 13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. ராயுடு 12 ரன்னில் அவுட் ஆகினார்.

சென்னை 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

18:31 (IST) 6 May 2023
12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ராயுடு ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

சென்னை 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

18:06 (IST) 6 May 2023
7 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ரஹானே ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

சென்னை 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

18:00 (IST) 6 May 2023
பவர் பிளே முடிவில் சென்னை அணி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ரஹானே ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

சென்னை 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.

17:55 (IST) 6 May 2023
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ரஹானே ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

சென்னை 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.

17:52 (IST) 6 May 2023
ருதுராஜ் கெய்க்வாட் அவுட்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. சென்னை அணியில் அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

17:40 (IST) 6 May 2023
140 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர்.

சென்னை 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது.

17:19 (IST) 6 May 2023
நேஹால் வதேரா அரைசதம்; பந்துவீச்சில் மிரட்டி எடுத்த சென்னைக்கு 140 ரன்கள் இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை சென்னை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 64 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

17:09 (IST) 6 May 2023
அர்ஷத் கான் அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அர்ஷத் கான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

17:07 (IST) 6 May 2023
19 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – அர்ஷத் கான் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

மும்பை அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

17:05 (IST) 6 May 2023
டிம் டேவிட் அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அதிரடி வீரர் டிம் டேவிட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

17:01 (IST) 6 May 2023
18 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – டிம் டேவிட் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

மும்பை அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.

16:59 (IST) 6 May 2023
நேஹால் வதேரா அரைசதம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த நேஹால் வதேரா 64 ரன்கள் எடுத்த நிலையில் பத்திரனா பந்தில் க்ளீன் போல்ட்-அவுட் ஆகி வெளியேறினார்.

16:55 (IST) 6 May 2023
17 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நேஹால் வதேரா – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

மும்பை அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.

16:53 (IST) 6 May 2023
நேஹால் வதேரா அரைசதம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நேஹால் வதேரா அரைசதம் விளாசியுள்ளார்.

16:50 (IST) 6 May 2023
16 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நேஹால் வதேரா – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

மும்பை அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.

16:50 (IST) 6 May 2023
16 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நேஹால் வதேரா – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

மும்பை அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.

16:46 (IST) 6 May 2023
15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நேஹால் வதேரா – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.

16:38 (IST) 6 May 2023
14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நேஹால் வதேரா – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

மும்பை அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

16:36 (IST) 6 May 2023
13 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் நேஹால் வதேரா – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

மும்பை அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ள

16:30 (IST) 6 May 2023
சூர்யகுமார் யாதவ் அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. 3 பவுண்டரிகளை ஓட விட்ட சூர்யகுமார் யாதவ் 26 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

16:29 (IST) 6 May 2023
11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – நேஹால் வதேரா ஜோடி களத்தில் உள்ளனர்.

மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.

16:22 (IST) 6 May 2023
10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் – நேஹால் வதேரா ஜோடி களத்தில் உள்ளனர்.

மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

16:16 (IST) 6 May 2023
9 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் – நேஹால் வதேரா ஜோடி களத்தில் உள்ளனர்.

மும்பை அணி 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது.

16:14 (IST) 6 May 2023
7 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் – நேஹால் வதேரா ஜோடி களத்தில் உள்ளனர்.

மும்பை அணி 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.

16:06 (IST) 6 May 2023
பவர் பிளே முடிவில் மும்பை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் – நேஹால் வதேரா ஜோடி களத்தில் உள்ளனர்.

மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.

15:51 (IST) 6 May 2023
கேப்டன் ரோகித் அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. பந்துவீசி வரும் சென்னை மிரட்டி வருகிறது.

மும்பை அணி 3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது.

15:10 (IST) 6 May 2023
மும்பை அணியில் 2 மாற்றங்கள்!

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்

15:09 (IST) 6 May 2023
சென்னை அணியில் எந்த மாற்றமும் இல்லை!

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

15:05 (IST) 6 May 2023
டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு; மும்பை முதலில் பேட்டிங்!

இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும்.

15:02 (IST) 6 May 2023
சென்னை ஆடுகளம் எப்படி?

சென்னை சேப்பாக்கம் பெரிய மைதானம். ஆனால் ஒரு பக்கத்தில் ஒரு குறுகிய பவுண்டரி உள்ளது (61 மீ), மற்றொரு சதுர பவுண்டரி 70 மீ மற்றும் ஸ்ட்ரைட் பவுண்டரி 73 மீ உள்ளது.

சென்னை ஆடுகளம் பாறை போல் கடினமாக உள்ளது. விரிசல்கள் இம்முறை குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டு 200+ ரன்களுடன் அதிக ஸ்கோர்கள் அடிபட்டுள்ளது. இது ஒரு நல்ல பேட்டிங் ஆடுகளம், ஆனால், சுழலுக்கு அதிகம் உதவும். சேப்பாக்கத்தில் மேகமூட்டமாக உள்ளது, எனவே டாஸ் வென்ற கேப்டன் 2வது பேட்டிங் செய்ய விரும்புவார்.

14:59 (IST) 6 May 2023
அர்ஜுன் டெண்டுல்கருக்கு இடமில்லை!

மும்பை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் வான்கடேயில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் தனது முதல் சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு ஒரு உண்மை சோதனை வழங்கப்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, அவர் ஓரிரு நல்ல ஓவர்கள் வீசினார், ஆனால் மீண்டும் பயன்படுத்தப்படவில்லை.

அவர் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக அர்ஷத் கான் கொண்டுவரப்பட்டார். அர்ஷத்தின் டெத் பந்துவீச்சு அவரது மெதுவான மாறுபாடுகள் மற்றும் யார்க்கர் மூலம் அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

14:46 (IST) 6 May 2023
மழை இருக்கு… ஆனா சேப்பாக்கத்தில் போட்டி நிச்சயம்: சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் சென்னை மும்பை மோதும் போட்டிக்கு மழை பாதிப்பு இருக்காது. நிச்சயம் போட்டி முழுவதுமாக நடைபெறும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

https://tamil.indianexpress.com/technology/phonepe-gets-upi-lite-support-now-lets-users-make-payments-without-upi-pin-661012/

14:44 (IST) 6 May 2023
இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயின் அலி, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே

14:43 (IST) 6 May 2023
இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால்

14:37 (IST) 6 May 2023
சென்னை – மும்பை மோதல்: நேருக்கு நேர்!

ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகள் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 15-ல் சென்னையும் வெற்றி கண்டுள்ளன.

14:35 (IST) 6 May 2023
மும்பை அணி எப்படி?

இந்த சீசனில் தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி சரியான நேரத்தில் எழுச்சி கண்டிருக்கிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி, 4-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டங்களில் 200-க்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்து (சேசிங்) சாதனை படைத்தது. இவ்விரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அரைசதம் விளாசினார். டிம் டேவிட், திலக் வர்மா, இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளனர்.

கடந்த 3 ஆட்டங்களில் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்த ரோகித் சர்மாவின் பேட்டும் பேச ஆரம்பித்தால், மும்பை மேலும் அபாயகரமான அணியாக மாறி விடும். ஏற்கனவே சென்னையிடம் தோல்வி அடைந்திருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் வரிந்துகட்டுவார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்து விட்டதால் ஸ்டேடியமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிரும்.

14:34 (IST) 6 May 2023
மும்பையை சாய்க்குமா சென்னை?

சென்னை அணி ஏற்கனவே மும்பையை அதன் சொந்த மைதானத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. சேப்பாக்கம் மைதானம் சென்னையின் கோட்டையாக வர்ணிக்கப்படுகிறது. இந்த சீசனில் இங்கு சென்னை அணி ஆடியுள்ள 4 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றது. மற்ற 2 ஆட்டத்திலும் நெருங்கி வந்து நூலிழையில் கோட்டை விட்டது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.

14:31 (IST) 6 May 2023
வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை அணியில் டெவான் கான்வே (5 அரைசதத்துடன் 414 ரன்) ருதுராஜ் கெய்க்வாட் (354 ரன்), ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா (14 விக்கெட்) கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்கிறார். ஆனால் துஷர் தேஷ்பாண்டே (17 விக்கெட்), பதிரானா (7 விக்கெட்) ஆகியோர் கணிசமாக விக்கெட் வீழ்த்தினாலும் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவாக அமைந்துள்ளது.

காயத்தில் இருந்து குணமடைந்து லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் மறுபிரவேசம் செய்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். இதே போல் காயத்தில் இருந்து தேறியுள்ள ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இன்றைய ஆட்டத்தில் அவரது பெயர் அணித்தேர்வுக்கு பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.

14:29 (IST) 6 May 2023
3-வது இடத்தில் சென்னை!

நடப்பு சீசனில் இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானதால் புள்ளியை பகிர்ந்து அளிக்கப்பட்டது.

14:26 (IST) 6 May 2023
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Csk vs mi live cricket score chennai super kings vs mumbai indians ipl 2023 49th match at ma chidambaram stadium chennai in tamil