CSK vs MI Live Score, Chennai Super Kings vs Mumbai Indians: ஐபிஎல் 2020 திருவிழா தொடங்கியது. சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் இடையே பலப்பரீட்சை! கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சந்தித்த அணிகள் என்ற அடிப்படையில் இவை இரண்டும் இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை எப்போதுமே தனது வலிமையை நிரூபித்து வந்திருக்கிறது. அதை இன்றும் தொடர்வதே அந்த அணியின் இலக்கு. கடந்த முறை இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் கோப்பையை பறிகொடுத்த சி.எஸ்.கே அதற்கு பழி தீர்ப்பதை இலக்காக வைத்திருக்கிறது.
சி.எஸ்.கே. – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் தகவல்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
Live Blog
CSK vs MI Live Score: தொடங்கியது ஐபிஎல் 2020, சி.எஸ்.கே- மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை
மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றிருக்கிறது. சி.எஸ்.கே 2011, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்றது. மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கை கொடுப்பார்கள். சி.எஸ்.கே அணிக்கு கேப்டன் டோனி, வாட்சன், பிராவோ, டுபிளிசிஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.
19.2 ஓவர்களில் சி.எஸ்.கே அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் 2020 சீசனை வெற்றியுடன் தொடங்கியது சி.எஸ்.கே. தவிர, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்ந்து 5 தோல்விகளை பதிவு செய்திருந்த சி.எஸ்.கே, அந்த தோல்வி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
கடந்த சீசன் இறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் தோற்றதற்கு பழி தீர்த்துக் கொண்டது சி.எஸ்.கே. இறுதி வரை அவுட் ஆகாமல் நின்ற பாப் டு பிளிசிஸ் 44 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். டோனி 2 பந்துகளில் ரன் எடுக்காமல் களத்தில் நின்றார். கடைசி கட்டத்தில் சாம் குர்ரன் 6 பந்துகளில் அடித்த 18 ரன்கள், டுபிளிசிஸின் பொறுமையான ஆட்டம், ராயுடுவின் அதிரடி காட்டம் ஆகியன சி.எஸ்.கே வெற்றிக்கு காரணமாக இருந்தன.
கடைசி ஓவரில் சி.எஸ்.கே வெற்றிக்கு 5 ரன்களே தேவை. டிரெண்ட் போல்ட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சி.எஸ்.கே, அடுத்த பந்தையும் பவுண்டரி ஆக்கி வெற்றி பெற்றது.
5வது விக்கெட்டுக்கு களம் இறங்கி அதிரடி காட்டிய சாம் குர்ரன் 6 பந்துகளில் 2 சிக்சர்கள் சகிதமாக 18 ரன்கள் எடுத்தார். 10 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்கிற நிலையில் டோனி வந்தார்.
5 பந்துகளில் 2 பவுண்டரி சகிதமாக 10 ரன்கள் எடுத்த ஜடேஜா எல்.பி.டபிள்யூ முறையில் குணால் பாண்ட்யா பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது சி.எஸ்.கே வெற்றிக்கு 17 பந்துகளில் 29 ரன்கள் தேவை.
கடைசி 2 ஓவர்களி சி.எஸ்.கே வெற்றிக்கு 16 ரன்கள் தேவை
48 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து அம்பத்தி ராயுடு அவுட் ஆனார். அப்போது சி.எஸ்.கே 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்திருந்தது. டு பிளிசிஸ் 41 ரன்களுடன் களத்தில் நின்றார்.
கடைசி 4 ஓவர்களில் சி.எஸ்.கே வெற்றிக்கு 42 ரன்கள் தேவை.
13 ஓவர்களில் சி.எஸ்.கே 2 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்தது. ஒரு முனையில் டு பிளிசிஸ் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்கிற விகிதத்தில் விளையாட, மறுமுனையில் ராயுடு அதிரடி காட்டினார்.
13.2 ஒவர்களில் அணியின் ஸ்கோர் 102- ஆக இருந்தபோது டு பிளிசிஸ் 32 ரன்களும் (31 பந்துகள்), ராயுடு 40 பந்துகளில் 63 ரன்களும் சேர்த்தனர். ராயுடு ஸ்கோரில் 6 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.
9 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்தது. பாப் டு பிளிசிஸ் 21 ரன்களுடனும், அம்பத்தி ராயுடு ஒரு சிக்சர் உள்பட 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
முரளி விஜய் 1 ரன்னில் ஜேம்ஸ் பேட்டின்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். உண்மையில் பந்து ஸ்டம்பில் இருந்து லெக் திசையில் விலகிச் சென்றது. முரளி விஜய் ரிவ்வியூ போயிருக்கலாம். எதிர் முனையில் நின்றிருந்த டு பிளிசிஸ் இது பற்றி விஜய்யிடம் சைகை செய்தார். ஆனால் விஜய் அதை பொருட்படுத்தாமல் வெளியேறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த அற்புதமான வாய்ப்பை முரளி விஜய் வீணடித்தார். 5 ஒவர்கள் முடிவில் சி.எஸ்.கே 2 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் சேர்த்தது.
முதல் ஓவரின் கடைசி பந்தை டிரெண்ட் போல்ட் வீசியபோது எல்.பி.டபிள்யூ ஆனார் வாட்சன். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவர், ஒரு பவுண்டரி மூலமாக 4 ரன்கள் மட்டுமே பெற்றிருந்தார்.
163 ரன்கள் இலக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்த சி.எஸ்.கே., தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனையும், முரளி விஜயையும் களம் இறக்கியது. மும்பை தரப்பில் டிரெண்ட் போல்ட் பந்து வீச்சை தொடங்கி வைத்தார்.
20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. ஆரம்பத்தில் வேகமாக ரன்களைக் குவித்த அந்த அணி, நடுவில் சி எஸ் கே அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால், ரன் எடுக்கத் திணறியது. இதனால் மும்பை அணி பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை.சென்னை அணி வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது
சென்னை தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகள், சாகர், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள், குர்ரன், சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களில் ஜடேஜா பந்தில் எல்லைக்கோட்டில் டு பிளிசிஸிடன் கேட்ச் ஆனார். திவாரியும் 42 ரன்களில் அதே ஜடேஜா பந்தில் டு பிளிசிஸிடம் கேட்ச் ஆனார். 16 ஓவர்களில் மும்பை 136 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது.
ஜடேஜா 2 விக்கெட், சாவ்லா, குர்ரன், சாகர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து குணால் பாண்ட்யாவும் நிகிடி பந்தில் டோனியிடம் கேட்ச் ஆனார். இதனால் 6 விக்கெட்டுகளை இழந்தது மும்பை. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை மும்பை இழந்ததால் ரன் வேகம் கட்டுப்பட்டது.
மும்பை அணியில் ரோகித், குயிண்டான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முறையே 12, 33, 17 ரன்களில் அவுட் ஆனார்கள். 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை மும்பை குவித்தது. திவாரி 38 ரன்களுடனும், பாண்ட்யா 12 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் XI: முரளி விஜய், ஷேன் வாட்சன், ஃபாஃப் டு பிளெசிஸ், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.டோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரன், தீபக் சாகர், பியூஷ் சாவ்லா, லுங்கி நிகிடி
மும்பை இந்தியன்ஸ் XI: ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், சவ்ரப் திவாரி, கிரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குணால் பாண்ட்யா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாகர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா</p>
ரோகித் அடித்த பந்து சாம் குர்ரனிடமும், குயிண்டன் அடித்த பந்து வாட்சனிடமும் கேட்ச் ஆக மாறியது குறிப்பிடத்தக்கது. 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்தது.
பியூஸ் சாவ்லாவின் முதல் ஓவரில் கடைசி பந்தில் ரோகித் அவுட் ஆனார். சாம் குர்ரனின் அடுத்த ஒவரில் முதல் பந்திலேயே குயிண்டன் டி காக்கும் கேட்ச் ஆனார். இரு தொடக்க ஆட்டக்காரர்களையும் மும்பை இழந்தது.
வேகப்பந்து வீச்சை அடித்து நொறுக்கிய ரோகித்- குயிண்டன் ஜோடி சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வந்ததும் திணறியது. அவரது முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா அவுட் ஆனார்.
தீபக் சாகரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் ரோஹித் சர்மா. சி.எஸ்.கே தரப்பில் மற்றொரு தொடக்க பந்து வீச்சாளராக சாம் குர்ரன் களம் இறங்கினார். முதல் இரு ஓவர்களில் மும்பை விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் குவித்தது.
ரோஹித் சர்மாவின் பேட்டில் பந்து லட்டு போல சென்று மோதி சிதறுகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகவே ஆரம்பகட்ட கணிப்பு கூறுகிறது.
சி.எஸ்.கே அணிக்கு முதல் வெற்றி, ஆம், டாஸில் வென்ற சி.எஸ்.கே சேஃப்டியாக பந்து வீச்சை தேர்வு செய்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்குகிறது. மும்பை குவிக்கும் ரன்களுக்கு ஏற்ப விளையாடலாம் என்கிற தற்காப்பு அணுகுமுறை இது, கை கொடுக்குமா? பார்க்கலாம்.