தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருவதால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டத்தை மழை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐ.பி.எஸ் நடப்பு தொடரில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையே மே 3-ம் தேதி நடைபெற்ற போட்டி, லக்னோ அணி மட்டும் பேட்டிங் செய்த நிலையில் அந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று (மே 6) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் 49-வது லீக் போட்டியில் விளையாடுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் வானிலை எப்படி இருக்கும், சென்னையில் மழை பொழியும், மழை ஆட்டத்தை பாதிக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில், இந்த ஐ.பி.எஸ் தொடரில் ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டாவது முறையாகவும், 2019-க்குப் பிறகு முதல் முறையாகவும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. சென்னை அணி உள்ளூரில் 2 போட்டிகளில் வெற்றியையும் 2 போட்டிகளில் தோல்வியையும் அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக பரவலாக கோடை மழை பெய்து வருவதால், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்குவதற்கு முன்பு, இன்றைய பிட்ச் அறிக்கை மற்றும் வானிலை முன்னறிவிப்பைப் பார்ப்போம்.
மே 6 சனிக்கிழமை சென்னை வானிலை முன்னறிவிப்பு
இந்த வார இறுதியில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்யூவெதர் படி போட்டிக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பில்லை. சனிக்கிழமை (மே 6) காலை 7 முதல் 9 வரை மற்றும் மாலை 7 மணி வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், Weather.com, காலை 11:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மாலை முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கணித்துள்ளது. இன்றைய அதிகபட்ச வெப்பநிலை அதிகபட்சம் 32o C ஆகவும், குறைந்தபட்சம் 30o C ஆகவும் இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னும் போட்டி முடிந்த பின்னரும் மழை இருக்கும் என்பதால் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ஆடுகள நிலவரம்
பல ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானம் மெதுவாக பந்துவீசுபவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ந்து சாதகமாக இருக்கும். அதே நேரத்தில், சமீபகாலமாக பேட்டர்களும் எளிதாக ஸ்கோர் செய்ய முடிந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.