/indian-express-tamil/media/media_files/2025/04/08/0cXoMNNnZoGqvtyV3mR0.jpg)
ஐ.பி.எல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், 22-வது லீக் போட்டி - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், முல்லன்பூர், சண்டிகர்.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு சண்டிகர் மாநிலம் முல்லன்பூரில் நடக்கும் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, PBKS vs CSK Live Cricket Score Updates
நடப்பு தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, மூன்றில் தோல்வி என பெரும் பின்னடைவை சந்தித்து. அந்த அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வ செய்து களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஒரு பக்கம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில், தொடக்க வீரர் பிரப்சிம்ரன் (0), ஸ்ரேயாஸ் அய்யர் (9), ஸ்டொயினிஸ் (4), வாதரோ (9), மேக்ஸ்வெல் 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனைகயில், அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் பிரியான்ஷ் 6-வது விக்கெட்டுக்கு ஷஷாங் சிங்குடன் சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவர்கள் கொடுத்த பல கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதும் பஞ்சாப் அணி ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் அதிரடி சதத்தை பதிவு செய்த பிரியான்ஷ் 42 பந்துகளில், 7 பவுண்டரி 9 சிக்சருடன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு 7-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷஷாங் சிங், மார்கோ யான்சன் இருவரும் அதிரடியாக விளையாடினர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு, 219 ரன்கள் குவித்தது. ஷஷாங் சிங் 36 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 52 ரன்களும், யான்சன், 19 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 34 ரன்கள் குவித்து களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில், அஸ்வின், கலீல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், நூர் அகமது, சௌத்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 220 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
-
Apr 08, 2025 23:14 IST
சென்னை அணிக்கு 4-வது தோல்வி
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 5-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 4-வது தோல்வியாகும். தற்போது சென்னை அணி 2 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
-
Apr 08, 2025 23:07 IST
கடைசி 6 பந்துகளில் 28 ரன்கள்
19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை
-
Apr 08, 2025 22:59 IST
கான்வே அவுட்
தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் கடந்து அசத்திய கான்வே 49 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
-
Apr 08, 2025 22:45 IST
அரைசதத்தை மிஸ் செய்த டூபே... களத்தில் தோனி
27 பந்துகளில் 42 ரன்கள் குவித்த ஷிவம் டூபே ஆட்டமிழந்த நிலையில், முன்னாள் கேப்டன் தோனி, 5-வது விக்கெட்டுக்காக களமிறங்கியுள்ளார். சென்னை அணி வெற்றி பெற 25 பந்துகளில் 69 ரன்கள் தேவை
-
Apr 08, 2025 22:40 IST
30 பந்துகளில், 75 ரன்கள் தேவை
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு 30 பந்துகளில், 75 ரன்கள் தேவை
-
Apr 08, 2025 22:33 IST
கான்வே அரைசதம்
தொடக்க வீரராக களமிறங்கிய டெவான் கான்வே 37 பந்துகளில், 6 பவுண்டரி 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார்.
-
Apr 08, 2025 22:29 IST
13 ஓவர்கள் முடிவில் 120/2
13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 44 ரன்களுடனும், டூபே 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு 42 பந்துகளில் 100 ரன்கள் தேவை
-
Apr 08, 2025 22:15 IST
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 92/2
220ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. டூபே 12 பந்துகளில் 22 ரன்களும், கான்வே 23 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து களத்தில் உ்ளளனர்.
-
Apr 08, 2025 22:11 IST
கேப்டன் ருத்துராஜ் அவுட்
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 1 ரன் எடுத்திருந்த நிலையில், லூக்கி பெர்கூசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
-
Apr 08, 2025 21:54 IST
ரச்சின் ரவீந்திரா அவுட்: முதல் விக்கெட்டை பறிகொடுத்த சென்னை
23 பந்துகளை சந்தித்த ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 62/1
-
Apr 08, 2025 21:52 IST
6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 59/0
6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் 21 பந்துகளில் 35 ரன்களும், கான்வே 16 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
-
Apr 08, 2025 21:44 IST
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 47/0
220 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் 26 ரன்களுடனும், கான்வே 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Apr 08, 2025 20:33 IST
பிரியன்ஷ் அதிரடி சதம்
39 பந்துகளை சந்தித்த பிரியன்ஷ் 7 பவுண்டரி 9 சிக்சருடன் 102 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். 103 ரன்களில் ஆட்டமிழந்தார். 13 ஓவர்களில் பஞ்சாப் அணி 152/5
-
Apr 08, 2025 20:27 IST
12 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 128/5
12 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. பிரியான்ஷ் 80 ரன்களுடனும், ஷஷாங் 22 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
-
Apr 08, 2025 20:17 IST
பிரியான்ஷி அதிரடி: விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப் அணி
9 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் பிரியான்ஷி 59 ரன்களுடன் விளையாடி வரும் நிலையில், மற்ற 5 பேரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
-
Apr 08, 2025 19:53 IST
பிரியான்ஷ் அதிரடி: பஞ்சாப் அணி ரன் குவிப்பு
தொடக்க வீரர் பிரியான்ஷ் 13 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 35 ரன்கள் எடுக்க, 4 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு, 46 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 08, 2025 19:38 IST
பஞ்சாப்: முதல் ஓவர் முடிவில் 17/0
பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். கலீல் அகமது முதல் ஓவரை வீசினார். ஆர்யா 2 சிக்சர்களை விளாசினார். பஞ்சாப் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை எடுத்துள்ளது.
-
Apr 08, 2025 19:13 IST
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் ப்ளேயர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் ப்ளேயர்ஸ்: சூர்யன்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர், பிரவீன் துபே, அஸ்மத்துல்லா ஓமர்சாய், வைஷாக் விஜய்குமார்
-
Apr 08, 2025 19:12 IST
சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பாக்ட் ப்ளேயர்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பாக்ட் ப்ளேயர்ஸ்: சிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, அன்ஷுல் கம்போஜ்
-
Apr 08, 2025 19:11 IST
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்
-
Apr 08, 2025 19:09 IST
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
-
Apr 08, 2025 19:05 IST
டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு; சென்னை முதலில் பந்துவீச்சு
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை அணி முதலில் பந்து வீசுகிறது
-
Apr 08, 2025 18:10 IST
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 30 போட்டிகளில், சென்னை அணி 16 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி 14 முறை வெற்றி பெற்றுள்ளது.
-
Apr 08, 2025 18:10 IST
சென்னை - பஞ்சாப் அணிகள் மோதல்
ஐ.பி.எல். 2025 தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு சண்டிகர் மாநிலம் முல்லன்பூரில் நடக்கும் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
-
Apr 08, 2025 17:57 IST
'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணைய பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐ.பி.எல். 2025 தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் தொடர்பாக உடனுக்குடன் அறிந்து கொள்ள 'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.