IPL 2021, CSK vs PBKS match highlights in tamil: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு துபாயில் நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
🚨 Toss Update 🚨@PunjabKingsIPL have elected to bowl against @ChennaiIPL. #VIVOIPL #CSKvPBKS
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/H94DPnktyv— IndianPremierLeague (@IPL) October 7, 2021
இதனையடுத்து சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் - ஃபாஃப் டு பிளெஸ்ஸி ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க முடியாமல் தவித்து வந்த இந்த ஜோடியில் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 1 பவுண்டரியை விரட்டிய நிலையில் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
First strike from @PunjabKingsIPL, courtesy @arshdeepsinghh! 👏 👏#CSK lose Ruturaj Gaikwad. #VIVOIPL #CSKvPBKS
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/QITTZJzzZM— IndianPremierLeague (@IPL) October 7, 2021
தொடர்ந்து வந்த மொயீன் அலி (0), ராபின் உத்தப்பா (2), மற்றும் அம்பதி ராயுடு (4) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விக்கெட் சரிவை சரிகட்ட களம் கண்ட கேப்டன் தோனி தொடக்க வீரர் டு பிளெஸ்ஸியுடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், பஞ்சாபின் பிஷ்னோய் வீசிய கூகுலியில் சிக்கி போல்ட் அவுட் ஆனார்.
Big wicket for @bishnoi0056 and @PunjabKingsIPL ! 👍 👍#CSK lose captain MS Dhoni. #VIVOIPL #CSKvPBKS
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/XeLlKqR71F— IndianPremierLeague (@IPL) October 7, 2021
மீண்டும் விக்கெட் சரிவை சந்தித்த சென்னை அணி 12.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே சேர்த்தது. எனினும் தொடக்கம் முதல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து மறுமுனையில் இருந்த ஜடேஜாவுடன் இணைந்து அணி வலுவான ஸ்கோரை எட்ட அதிரடி காட்டிய டு பிளெஸ்ஸி கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 55 பந்துகளில் 2 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் 76 ரன்களை சேர்த்தார்.
5⃣0⃣ for @faf1307! 👏 👏
He brings up his 2⃣1⃣st IPL half-century as @ChennaiIPL move past 100. 👍 👍 #VIVOIPL #CSKvPBKS
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/yjjA2m1tFA— IndianPremierLeague (@IPL) October 7, 2021
களத்தில் இருந்த ஜடேஜா மற்றும் பின்னர் வந்த பிராவோ தலா 1 பவுண்டரிகளை விரட்டி இருந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 134 ரன்கள் சேர்த்தது. எனவே, தொடக்கம் முதலே பந்து வீச்சில் மிரட்டி வந்த பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
INNINGS BREAK!
Solid 7⃣6⃣ for @faf1307
2⃣ wickets each for @arshdeepsinghh & @CJordan
The @PunjabKingsIPL's chase to begin soon. #VIVOIPL #CSKvPBKS @ChennaiIPL
Scorecard 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/FTbXbn0QL6— IndianPremierLeague (@IPL) October 7, 2021
தொடர்ந்து 135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதனால் அந்த அணி 13 வது ஓவர் முடிவிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 98 ரன்கள் (42 பந்துகளில், 8 சிக்ஸர், 7 பவுண்டரி உட்பட) குவித்து களத்தில் இருந்தார்.
.@klrahul11 leading from the front! 👍 👍
The @PunjabKingsIPL captain brings up a 25-ball fifty. 👏 👏 #VIVOIPL #CSKvPBKS
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/4IZR8xuZv5— IndianPremierLeague (@IPL) October 7, 2021
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ள பஞ்சாப் அணி 12 புள்ளி மற்றும் -0.001 நெட் ரன்ரேட்டுடன் பட்டியலில் 5வது இடத்திலேயே நீடிக்கிறது. தோல்வியை தழுவியுள்ள சென்னை அணி 18 புள்ளி மற்றும் +0.455 நெட் ரன்ரேட்டுடன் பட்டியலில் அதே 2வது இடத்திலேயே நீடிக்கிறது.
Dominant performance from @PunjabKingsIPL! 💪 💪
Captain @klrahul11 leads the charge with the bat as #PBKS seal a clinical 6⃣-wicket win over #CSK. 👏 👏 #VIVOIPL #CSKvPBKS
Scorecard 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/rBVh6CssHf— IndianPremierLeague (@IPL) October 7, 2021
பஞ்சாப் அணி பிளே-ஆப்க்குள் நுழைய கணித அடிப்படியிலான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. இன்று இரவு 7:30 மணிக்கு (வியாழக்கிழமை) நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா அணி ராஜஸ்தானிடம் படுதோல்வி அடைய வேண்டும். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி ஐதராபாத்திடம் அடங்க வேண்டும்.
இப்படி நடக்கும் பட்சத்தில் பஞ்சாப், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருப்பார்கள். அப்போது ரன்ரேட்டில் முன்னிலையில் இருக்கும் அணிக்கு ‘பிளே-ஆப்’ வாய்ப்பு கிட்டும்.
அந்த வகையில் கணக்கிட்டால் உதாரணமாக, பஞ்சாப் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்துகிறது என்றால், கிட்டத்தட்ட அதே வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, ராஜஸ்தானிடம் தோற்க வேண்டும். அப்போது தான் பஞ்சாப் அணி ரன்ரேட்டில் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு உருவாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 18:54 (IST) 07 Oct 2021சென்னையை வீழ்த்திய பஞ்சாப்; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் 135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- 18:38 (IST) 07 Oct 202110 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி!
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் 135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை சேர்த்துள்ளது.
- 18:17 (IST) 07 Oct 2021கேப்டன் ராகுல் அரைசதம்!
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் 135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் அணியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் கேஎல் ராகுல் ஐபிஎல்.லில் 27 வது அரைசதத்தை பதிவு செய்துள்ளார். அவர் 26 பந்துகளில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்துள்ளார்.
- 18:11 (IST) 07 Oct 2021பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி!
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் 135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை சேர்த்துள்ளது.
- 17:37 (IST) 07 Oct 2021பந்து வீச்சில் மிரட்டிய பஞ்சாப்புக்கு 135 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால், தொடக்கம் முதலே பந்து வீச்சில் மிரட்டி வந்த பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
INNINGS BREAK!
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
Solid 7⃣6⃣ for @faf1307
2⃣ wickets each for @arshdeepsinghh & @CJordan
The @PunjabKingsIPL's chase to begin soon. vivoipl cskvpbks @ChennaiIPL
Scorecard 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/FTbXbn0QL6 - 17:06 (IST) 07 Oct 2021டு பிளெஸ்ஸி அரைசதம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் விக்கெட் இழப்பை சந்தித்து இருந்தாலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி தனது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
டு பிளெஸ்ஸி vs பஞ்சாப் அணி 2019 முதல்
54 (38)
96 (55)
87*(53)
48 (34)
36*(33)
50*(46) - இன்று
- 17:05 (IST) 07 Oct 2021டு பிளெஸ்ஸி அரைசதம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் விக்கெட் இழப்பை சந்தித்து இருந்தாலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி தனது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
டு பிளெஸ்ஸி vs பஞ்சாப் அணி 2019 முதல்
54 (38)
96 (55)
87*(53)
48 (34)
36*(33)
50*(46) - இன்று
- 16:53 (IST) 07 Oct 2021விக்கெட் சரிவால் தடுமாறிய சென்னை அணி நிதான ஆட்டம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் விக்கெட் இழப்பை சந்தித்து வந்த நிலையில், தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி உடன் ஜோடி சேர்த்துள்ளார் ஆல் -ரவுண்டர் வீரர் ஜடேஜா. இந்த ஜோடி நிதானம் கலந்த அதிரடியை காட்டி வருகிறது. எனவே சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது.
- 16:42 (IST) 07 Oct 2021மீண்டும் தொடரும் விக்கெட் சரிவு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை 5 விக்கெட்டுகளை (12.2 ஓவர்கள் முடிவில்) இழந்து 64 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
- 16:37 (IST) 07 Oct 2021தொடரும் விக்கெட் சரிவு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை 5 விக்கெட்டுகளை (12.2 ஓவர்கள் முடிவில்) இழந்து 64 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
- 16:19 (IST) 07 Oct 2021தொடரும் விக்கெட் சரிவு; தடுமாறும் சென்னை அணி!
பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் சேர்ந்திருந்த சென்னை அணி முதல் இடைவேளையின் (8.3ஓவர்) முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் சேர்ந்துள்ளது
- 16:08 (IST) 07 Oct 2021அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; நிதான ஆட்டத்தில் சென்னை அணி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடித் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அவரது வெக்கேட்டு பிறகு வந்த மொயீன் அலி ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
இதனால் சென்னை அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்களை சேர்த்துள்ளது.
- 15:51 (IST) 07 Oct 2021ருதுராஜ் அவுட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி தடுமாற்றத்துடன் தொடங்கியது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 1 பவுண்டரியை துரத்தி 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
- 15:40 (IST) 07 Oct 2021ஆட்டம் இனிதே ஆரம்பம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் - ஃபாஃப் டு பிளெஸ்ஸி ஜோடி தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கியுள்ளனர்
- 15:12 (IST) 07 Oct 2021இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் XI): ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸ்ஸி, ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
பஞ்சாப் கிங்ஸ் (விளையாடும் XI): KL ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், சர்பராஸ் கான், ஷாருக் கான், மொயிஸ் ஹென்றிக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
Team News@ChennaiIPL remain unchanged.
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
1⃣ change for @PunjabKingsIPL as Chris Jordan picked in the team. vivoipl cskvpbks
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ
Here are the Playing XIs 👇 pic.twitter.com/CZzrTF82uM - 15:11 (IST) 07 Oct 2021சென்னைக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு துபாயில் தொடங்கும் 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில், சென்னைக்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
🚨 Toss Update 🚨@PunjabKingsIPL have elected to bowl against @ChennaiIPL. vivoipl cskvpbks
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/H94DPnktyv - 15:06 (IST) 07 Oct 202138வது பிறந்த நாளை கொண்டாடும் பிராவோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரராக வலம் வரும் டுவைன் பிராவோ இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சென்னை அணியினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
💿 Champion 🎉🎂superbirthday cham47ion whistlepodu yellove 🦁💛 pic.twitter.com/MDf8sPEyhV
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021B'day Match Day DJ 😉superbirthday cham47ion whistlepodu yelllove 🦁🥳 pic.twitter.com/szRyOTMHVa
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021 - 14:58 (IST) 07 Oct 2021முக்கியமான ஆட்டம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் லேசாக வாய்ப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த அணியின் இறுதி லீக்கின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்த வேண்டும். அதன் பிறகு கொல்கத்தா அணி ராஜஸ்தானிடம் படுதோல்வி அடைய வேண்டும். மும்பை அணி, ஐதராபாத்திடம் அடங்க வேண்டும்.
இப்படி நடக்கும் பட்சத்தில் பஞ்சாப், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருப்பார்கள். அப்போது ரன்ரேட்டில் முன்னிலையில் இருக்கும் அணிக்கு ‘பிளே-ஆப்’ வாய்ப்பு கிட்டும்.
அந்த வகையில் கணக்கிட்டால் உதாரணமாக, பஞ்சாப் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்துகிறது என்றால், கிட்டத்தட்ட அதே வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, ராஜஸ்தானிடம் தோற்க வேண்டும். அப்போது தான் பஞ்சாப் அணி ரன்ரேட்டில் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு உருவாகும்.
ஒருவேளை சென்னை அணி வெற்றியை ருசித்தால் அந்த அணி முதலிரண்டு இடத்தில் ஒன்றைத் தக்கவைத்துக்கொள்ளும். தோல்வியை தழுவினால் 3ம் இடத்திற்கு நகரும் நிலையில் ஏற்படும். எனினும், தொடரின் தொடக்கம் முதலே பட்டியலில் டாப் 2 இடத்தில் இருந்த சென்னை அதை தக்க வைக்க தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கலாம்.
🏟️vivoipl cskvpbks pic.twitter.com/AJaNXnPqwB
— IndianPremierLeague (@IPL) October 7, 2021 - 14:57 (IST) 07 Oct 2021‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு துபாயில் தொடங்கும் 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதுகிறது.
Hello & welcome from Dubai for Match 5⃣3⃣ of the vivoipl. 👋
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
The @msdhoni-led @ChennaiIPL square off against @klrahul11's @PunjabKingsIPL. 👌 👌 cskvpbks
Which team are you rooting for❓ 🤔 🤔 pic.twitter.com/ppX9XkouQq
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.