முதலிரண்டு இடத்தை தக்க வைக்குமா சென்னை அணி? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

Chennai Super Kings (csk) vs Punjab Kings (pbks) Dream11 Prediction, Fantasy Cricket Tips in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று வியாழக்கிழமை மாலை 3:30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

CSK vs PBKS match in tamil: CSK aims to finish in top two

CSK vs PBKS match in tamil: இதுவரை நடந்த 13 ஆட்டங்களில் 9ல் வெற்றி 4ல் தோல்வி என்று 18 புள்ளிகள் மற்றும் +0.739 நெட் ரன்ரேட்டுடன் 2வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் – பாஃப் டு பிளசிஸ் ஜோடி அணிக்கு மிகவும் நேர்த்தியான தொடக்கத்தை அளித்து வருகிறது. மிடில்-ஆடரில் அம்பதி ராயுடு, மொயீன் அலி ஆகியோர் கைகொடுக்கிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் போட்டிகளில் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய சுரேஷ் ரெய்னா டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ராபின் உத்தப்பா சேர்க்கப்பட்ட நிலையில் ரெய்னா அணிக்கு திருப்புவாரா என்பதில் சந்தேகம் தான்.

சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா முக்கிய வீரராக வலம் வருகிறார். பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அவர் ஜொலிக்கும் பட்சத்தில் அணி கூடுதல் வலு பெறும். மேலும், அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் டுவைன் பிராவோ போன்றோர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தால் அணி அசுர பலத்துடன் இருக்கும்.

கேஎல் ராகுல் வழிநடத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. அந்த அணியில் கேப்டன் ராகுல் (13 ஆட்டங்களில் – 528 ரன்கள்), மற்றும் மயங்க் அகர்வால் (429 ரன்கள்) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் பெரிதும் சோபிக்கவில்லை. இதனால் அந்த பேட்டிங்கில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பந்துவீச்சில், முகமது ஷமி (13 போட்டிகளில் – 18 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (16 விக்கெட்) மற்றும் ரவி பிஷ்னோய் குறிப்பிடும்படியான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே சென்னை அணிக்கெதிரான ஆட்டத்திலும் விக்கெட் வேட்டையை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

13 ஆட்டங்களில் 5 வெற்றி, 8 தோல்வியை சந்தித்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் கணித ரீதியாக வேண்டுமானால் பிளே – ஆப் வாய்ப்பு கிடைக்கும். எனினும், நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே-ஆப்க்குள் நுழைந்துள்ள சென்னை அணி முதலிரண்டு இடங்களுள் நீடிக்க தீவிரம் காட்டும். எனவே இரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Csk vs pbks match in tamil csk aims to finish in top two

Next Story
கடைசி போட்டி சென்னை மைதானத்தில் தான்… நெகிழும் கேப்டன் தோனி!Ipl Tamil News: MS Dhoni’s last game in Chennai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com