RCB vs CSK highlights: கடைசி ஓவரில் சொதப்பிய சி.எஸ்.கே: பெங்களூர் த்ரில் வெற்றி

RCB vs CSK Live Score: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.

RCB vs CSK Live Score: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK vs RCK 2025

IPL 2025, RCB vs CSK Live Cricket Score Updates: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: IPL 2025 Today Match, RCB vs CSK Predicted Playing 11 LIVE Updates: Playing XI and toss coming up from Bengaluru

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்பிற்கு, 213 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக, பெத்தெல் 55 ரன்களும், விராட்கோலி 62 ரன்களும் எடுத்தனர், கடைசி கட்டத்தில் அதிரடியில் அசத்திய ஷெப்பாட், 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 53 ரன்கள் எடுத்த அவர் கடைசிவரை களத்தில் இருந்தார்.  சென்னை அணி தரப்பில், பதிரானா 3 விக்கெட்டுகளும், சாம்கரன், நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

தொடர்ந்து 214 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியான தொடக்கம் கொடுத்து அசத்தினார். இதனால் சென்னை அணி வெற்றியை நோக்கி முன்னேறிய நிலையில், மாத்ரே ஜடேஜா இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்தினார். இதனால் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால், ஆயுஷ் மாத்ரே ஆட்டமிழந்தவுடன் ஆட்டம் தலைகீழாக மாறியது.

Advertisment
Advertisements

சதத்தை நெருங்கிய மாத்ரே 94 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த டேவிட் பிரவெஸ் 0 ரன்களில் வீழ்ந்தார். அடுத்த கேப்டன் தோனி களமிறங்கினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் இரு பந்துகளில் 2 ரன்கள் கிடைக்க, 3-வது பந்தில் தோனி ஆட்டமிழந்தார். 4-வது பந்து நோபாலாக வீச, அந்த பந்தை ஷிவம் டூபே சிக்சருக்கு விரட்டினார். இதனால் கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சென்னை அணி 3 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்ததால்,  2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி த்ரில் வெற்றியை பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த ஜடேஜா, 45 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்தார். ஷிவம் டூபே 3 பந்துகளில் ஒரு சிக்சருடன் 8 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 9-வது தோல்வியை சந்தித்த சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், 8வது வெற்றி பெற்ற பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

  • May 03, 2025 23:19 IST

    கடைசி ஓவரில் தோனி அவுட்

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில், 3-வது பந்தில் தோனி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை



  • May 03, 2025 23:14 IST

    19 ஓவரில் சென்னை அணி 199/4

    19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை. ஜடேஜா தோனி களத்தில் உள்ளனர்.



  • May 03, 2025 23:11 IST

    இந்த சீசனில் அதிக உயரம் சிக்சர் அடித்த ஜடேஜா

    17-வது ஓவரின் 5-வது பந்தில் ஜடேஜா அடித்த ஒரு சிக்சர் 109 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. இதன் மூலம் இந்த சீசனில் அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். 18 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவை



  • May 03, 2025 23:00 IST

    வந்த வேகத்தில் சென்ற டேவிட் பரெவிஸ்

    5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டேவிட் பரெவிஸ் தான் சந்தித்த முதல் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 



  • May 03, 2025 22:57 IST

    சதத்தை நெருங்கிய ஆயுஷ் மாத்ரே அவுட்

    தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடியில் அசத்திய ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சருடன் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து 6 ரன்களில் சதத்தை தவறவிட்டார். 



  • May 03, 2025 22:52 IST

    16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 171/2

    16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. மாத்ரே 94 ரன்களுடனும், ஜடேஜா 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு இன்னும் 24 பந்துகளில், 43 ரன்கள் தேவை



  • May 03, 2025 22:47 IST

    3-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள்

    சென்னை அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே - ஜடேஜா ஜோடி 56 பந்துகளில் 100 ரன்களை கடந்துள்ளது.



  • May 03, 2025 22:46 IST

    அரைசதம் கடந்த ஜடேஜா

    3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், 29 பந்துகளில், 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 30 பந்துகளில் வெற்றிக்கு, 54 ரன்கள் தேவை



  • May 03, 2025 22:34 IST

    13 ஓவர்களில் சென்னை அணி 140/2

    13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. ஆயுஷ் மாத்ரே 40 பந்துகளில் 81 ரன்களுடனும், ஜடேஜா 22 பந்துகளில் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சென்னை அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 74 ரன்கள் தேவை. 



  • May 03, 2025 22:17 IST

    10-வது ஓவரில் 18 ரன்கள்

    10-வது ஓவரை எதிர்கொண்ட இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 2 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் சேர்த்து அசத்தினார். 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு 60 பந்துகளில் 108 ரன்கள் தேவை. 



  • May 03, 2025 22:10 IST

    9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 88/2

    214 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 50 ரன்கள், ஜடேஜா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சென்னை அணி வெற்றிக்கு 66 பந்துகளில், 126 ரன்கள் தேவை. 



  • May 03, 2025 22:09 IST

    அரைசதம் கடந்த ஆயுஷ் மாத்ரே

    தொடக்க வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.



  • May 03, 2025 22:06 IST

    8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 79/2

    8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. ஆயுஷ் மாத்ரே 48 ரன்களுடனும், ஜடேஜா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • May 03, 2025 21:54 IST

    வந்த வேகத்தில் வெளியேறிய சாம் கரன்

    3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கரன் கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய நிலையில, இந்த போட்டியில் 5 ரன்களுடன் ஆட்டமிழந்தார். சென்னை அணி 5.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.



  • May 03, 2025 21:48 IST

    ஷேக் ரஷித் அவுட்: சி.எஸ்.கே முதல் விக்கெட்

    தொடக்க வீரராக களமிறங்கி 11 பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.



  • May 03, 2025 21:36 IST

    2 ஓவர்களில் சி.எஸ்.கே 11/0

    214 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள சென்னை அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது. ரஷீத் 2, மாத்ரே 9 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.



  • May 03, 2025 21:15 IST

    அதிரடியில் மிரட்டிய ரோசாரியோ ஷெப்பர்ட்: சென்னை அணிக்கு 214 ரன்கள் இலக்கு

    கடைசி 2 ஓவர்களில் அதிரடியில் மிரட்டிய ரோசாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்த நிலையில், பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை அணி 214 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது,



  • May 03, 2025 21:08 IST

    19-வது ஓவரில் 33 ரன்கள்

    கலீல் அகமது வீசிய 19-வது ஒவரில், 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்தார் பெங்களூர் அணியின் ரோசாரியோ சர்ப்பர்டு



  • May 03, 2025 20:57 IST

    கேப்டன் ரஜத் படித்தார் அவுட்

    15 பந்துகளை சந்தித்த கேப்டன் ரஜத் படித்தார் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 17.4 ஓவர்களில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு, 157 ரன்கள் எடுத்துள்ளது. ரொமரியோ ஷப்பர்டு அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கியுள்ளார்.



  • May 03, 2025 20:52 IST

    4-வது விக்கெட்டை பறிகொடுத்த பெங்களூரு

    4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விக்கெட் கீப்ப ஜித்தேஷ் சர்மா, 8 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். 17 ஓவர்களில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.



  • May 03, 2025 20:44 IST

    தேவ்தத் படிக்கல் அவுட்

    14 பந்துகளை சந்தித்த படிக்கல் 1 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 17 ரன்கள் எடுத்து பதிரானா பந்துவீச்சில், ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • May 03, 2025 20:43 IST

    14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள்

    15 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது படிக்கல் 17, படித்தார் 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.



  • May 03, 2025 20:39 IST

    14 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 140/2

    14 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.படிக்கல் 15 ரன்களுடனும், படித்தார் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • May 03, 2025 20:37 IST

    விராட் கோலி அவுட்

    அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த விராட்கோலி, 33 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்துவீச்சில் கலீல் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • May 03, 2025 20:21 IST

    அரைசதம் கடந்த கோலி

    ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் விராட் கோலி, 29 பந்துகளில், 3 பவுண்டரி 5 சிக்சருடன் அரைசதம் கடந்து அசத்தினார். 11 ஓவர்கள் முடிவில், பெங்களூர் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.



  • May 03, 2025 20:17 IST

    அரைசதம் கடந்த ஜேக்கப் பெத்தேல் அவுட்

    அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ஜேக்கப் பெத்தேல் 33 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து பதிரான பந்துவீச்சில், டாவல்ட் பிரெவேஸின் அற்புதாமான கேட்சில் ஆட்டமிழந்தார். 



  • May 03, 2025 20:11 IST

    அதிரடி ஆட்டத்தால் அரைசதம் கடந்த பெத்தேல்

    தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் ஜேக்கப் பெத்தேல் 28 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து அசத்தினார்.



  • May 03, 2025 20:02 IST

    7 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி 73/0

    7 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது. விராட்கோலி 18 பந்துகளில் 30 ரன்களும், பெத்தேல் 24 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.



  • May 03, 2025 19:40 IST

    2 ஓவர்கள் முடிவில் 16 ரன்கள்

    முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது. பெத்தெல் 15 ரன்களும், கோலி ஒரு ரன்னுடனும் களத்தில் உளளனர்.



  • May 03, 2025 19:24 IST

    இரு அணிகளிலும் ஆடும் லெவன் வீரர்கள்

    சி.எஸ்.கே ஆடும் லெவன்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் பிரேவிஸ், தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி(கே/வி), நூர் அஹமத், கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், மதீஷா பத்திரனா.

    ஆர்.சி.பி ஆடும் லெவன்: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கே), ஜிதேஷ் சர்மா(வி), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி என் கிடி, யாஷ் தயாள்.



  • May 03, 2025 19:21 IST

    டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு

    இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.



Csk Vs Rcb Ipl Live Score

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: