Advertisment

ஐ.பி.எல். 2024: தொடக்கப் போட்டியில் மோதும் சி.எஸ்.கே - ஆர்.சி.பி... ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?

சென்னை அணி கடந்த சீனில் விட்ட அதே இடத்தில் இருந்து அதே உத்வேகத்துடன் களமாடும். பெங்களூரு அணி கோப்பை தேடலுக்கு முடிவு கட்ட தொடரை வெற்றியுடன் தொடங்கவே முயலும்.

author-image
WebDesk
New Update
CSK vs RCB Live Streaming IPL 2024 match 01 Tamil News

ஐ.பி.எல். 2024 சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் - லைவ் ஸ்ட்ரீமிங்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | CSK vs RCB | Chennai Super Kings vs Royal Challengers Bangalore Live Streaming: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் -  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

Advertisment

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட கால கேப்டனாக பணியாற்றி வந்த எம்.எஸ் தோனி தனது கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைத்துள்ளார். அதன்படி, ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs RCB Live Streaming, IPL 2024

இந்த நிலையில், கோலாகலமாக அரங்கேறும் ஐ.பி.எல். 2024 தொடர் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியானும், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் -  ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்ச்சை நடந்த உள்ளன. சென்னை அணி கடந்த சீனில் விட்ட அதே இடத்தில் இருந்து அதே உத்வேகத்துடன் களமாடும். பெங்களூரு அணி கோப்பை தேடலுக்கு முடிவு கட்ட தொடரை வெற்றியுடன் தொடங்கவே முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான ஐ.பி.எல் 2024 போட்டி எந்த தேதியில் நடைபெறும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் 2024 தொடக்கப் போட்டி மார்ச் 22 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான ஐ.பி.எல் 2024 போட்டி எங்கு நடைபெறும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் 2024 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான ஐ.பி.எல் 2024 போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் 2024 போட்டி வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் 2024 போட்டியை எந்த டி.வி சேனல்கள் ஒளிபரப்பும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் 2024 போட்டியின் ஒளிபரப்பை நேரலையில் பார்ப்பது எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியை  ஜியோ சினிமா செயலியில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Super Kings Csk Vs Rcb Royal Challengers Bangalore IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment