/indian-express-tamil/media/media_files/2025/05/20/1v5qwazrJgeA3hTkKjIs.jpg)
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் - சென்னை பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க, மறுமகையில், கான்வே, 10, உர்வில் பட்டேல் 0, அஷ்வின் 13, ஜடேஜா 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். விக்கெட்டுகள் சரிந்தாலும், சென்னை அணியின் ஸ்கோர் சரியாக முன்னேற்றம் கண்டது.
அதற்கு முக்கிய காரணமாக இருந்த ஆயுஷ் மாத்ரே அரைசதத்தை நெருங்கிய நிலையில், 20 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைபோலவே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு இளம் வீரர் டேவான் பிரவிஸ், 25 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன், 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடக்கத்தில் மந்தமாக விளையாடியானலும் போக போக அதிரடியில் அசத்திய டூபே, 32 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் கேப்டன் தோனி 17 பந்துகளில் ஒரு சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. கம்பஜ் (5) நூர் அகமது (2) ஆகியோர் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில், யுத்வீர், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 188 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் - சூர்யவன்ஷி ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்த நிலையில், 19 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் - சூர்யவன்ஷியுடன் ஜோடி சேர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய சூர்வன்ஷி அரைசதம் கடந்த நிலையில், 33 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய சாம்சன், 31 பந்துகளில் 3பவுண்டரி 2 சிக்சருடன்,41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் துருவ் ஜொரேல் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். இதனால் 17.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி தரப்பில், அஷ்வின் 2 விக்கெட்டுகளும், கம்பொஜ், நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மூலம் ராஜஸ்தான் அணி 9-வது இடத்தில் நீடிக்கும் நிலையில், சென்னை அணி 10-வது இடத்தில் நீடிக்கிறது. இரு அணிகளுமே ப்ளேஅப் வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
சென்னை: ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், சிவம் துபே, எம்.எஸ் தோனி, ஆர் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.
இம்பாக்ட் பிளேயர் விருப்பங்கள்: மதீஷா பத்திரனா, தீபக் ஹூடா, விஜய் சங்கர், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ்
ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, க்வேனா மபாகா, யுத்விர் சிங், டி யுத்ஹர் சிங், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் மத்வால்
இம்பாக்ட் பிளேயர் விருப்பங்கள்: லுவான்ட்ரே பிரிட்டோரியஸ், ஷுபாம் துபே, குமார் கார்த்திகேயா, அசோக் சர்மா, குணால் ரத்தோர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.