Advertisment

CSK vs RR: ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த சென்னை; ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி

3 விக்கெட் வீழ்த்திய சிமர்ஜித்; 141 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான்; ருதுராஜ் சிறப்பான ஆட்டம்; 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி

author-image
WebDesk
New Update
csk vs rr

ஐ.பி.எல். 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதல்

IPL 2024 | Chennai Super Kings | Rajasthan Royals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும் 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

Advertisment

நடப்பு சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஆடிய 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. குஜராத் அணிக்கு எதிரான முந்தைய போட்டி தோல்வி சென்னையின் பிளேஆஃப் வாய்ப்பை மங்க செய்தது. இருப்பினும், மீதமுள்ள 2 போட்டிகளில் நல்ல நெட் ரன்ரேட்டுடன் அபார வெற்றி பெற்றால் அந்த அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மீண்டும் பிரகாசமாகி விடும். அதனைக் கருத்தில் கொண்டு சென்னை அணியினர் தீவிரமாக செயல்பட நினைப்பார்கள். 

மறுபுறம், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 11 போட்டிகளில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் அந்த அணி பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும். ஆதலால், இந்த ஆட்டத்தில் வெற்றி ருசிக்க ராஜஸ்தான் அணியினர் வரிந்து கட்டுவார்கள். அதற்கு முட்டுக்கட்டை போட்டி சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த சென்னை அணி முயற்சிக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

நேருக்கு நேர் 

ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 15ல் வெற்றி பெற்றுள்ளது, ராஜஸ்தான் 13 முறை வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • May 12, 2024 19:10 IST
    5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி

    19 ஆவது ஓவரை போல்ட் வீசினார். முதல் 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி வெற்றிக்கு வித்திட்டார் ரிஸ்வி. சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் 42 ரன்களுடனும், ரிஸ்வி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் சென்னை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.



  • May 12, 2024 19:04 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 18 ஓவர்கள் முடிவில் 137/5

    18 ஆவது ஓவரை பர்கெர் வீசினார். 4 ஆவது பந்தில் ருதுராஜ் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 19:02 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 17 ஓவர்கள் முடிவில் 129/5

    17 ஆவது ஓவரை சந்தீப் வீசினார். 4 ஆவது பந்தில் ரிஸ்வி பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:58 IST
    ஜடேஜா அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 16 ஓவர்கள் முடிவில் 121/5

    16 ஆவது ஓவரை அவேஷ் கான் வீசினார். 5 ஆவது பந்தில் ரன் எடுக்க முயலும் போது பீல்டிங்கிற்கு இடையூறாக இருந்ததாக ஜடேஜா அவுட் ஆனார். ஜடேஜா 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து இம்பாக்ட் ப்ளேயராக ரிஸ்வி களமிறங்கினார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:47 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 15 ஓவர்கள் முடிவில் 116/4

    15 ஆவது ஓவரை சஹல் வீசினார். முதல் பந்தில் ருதுராஜ் பவுண்டரிக்கு அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:43 IST
    துபே அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 14 ஓவர்கள் முடிவில் 107/4

    14 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த துபே, அடுத்த 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் கடைசி பந்தில் துபே அவுட் ஆனார். துபே 18 ரன்களில் ரியானிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:37 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 13 ஓவர்கள் முடிவில் 92/3

    13 ஆவது ஓவரை சஹல் வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:36 IST
    மொயீன் அலி அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 12 ஓவர்கள் முடிவில் 87/3

    12 ஆவது ஓவரை பர்கெர் வீசினார். 5 ஆவது பந்தில் மொயீன் அலி அவுட் ஆனார். மொயீன் அலி 10 ரன்களில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:34 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 11 ஓவர்கள் முடிவில் 84/2

    11 ஆவது ஓவரை சஹல் வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:21 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 10 ஓவர்கள் முடிவில் 77/2

    10 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:18 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 9 ஓவர்கள் முடிவில் 74/2

    9 ஆவது ஓவரை அவேஷ் கான் வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:16 IST
    மிட்சல் அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 8 ஓவர்கள் முடிவில் 67/2

    8 ஆவது ஓவரை சஹல் வீசினார். 5 ஆவது பந்தில் மிட்சல் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து மொயீன் அலி களமிறங்கினார். இந்த ஓவரில் 1 ரன் கிடைத்தது. சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:05 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 7 ஓவர்கள் முடிவில் 66/1

    7 ஆவது ஓவரை பர்கெர் வீசினார். 3 ஆவது பந்தில் ருதுராஜ் சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:02 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 6 ஓவர்கள் முடிவில் 56/1

    6 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். முதல் பந்தில் மிட்சல் பவுண்டரி அடித்தார். மீண்டும் 5 ஆவது பந்தில் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 18:01 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 5 ஓவர்கள் முடிவில் 45/1

    5 ஆவது ஓவரை சந்தீப் வீசினார். 3 ஆவது பந்தில் மிட்சல் பவுண்டரி அடித்தார். மீண்டும் 5 ஆவது பந்தில் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 17:55 IST
    ரவீந்திரா அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 4 ஓவர்கள் முடிவில் 34/1

    4 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். 4 ஆவது பந்தில் ரவீந்திரா, அஸ்வினிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரவீந்திரா 18 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து மிட்சல் களமிறங்கினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 17:49 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 3 ஓவர்கள் முடிவில் 28/0

    3 ஆவது ஓவரை போல்ட் வீசினார். 3 ஆவது பந்தில் ரவீந்திரா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 17:44 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 2 ஓவர்கள் முடிவில் 16/0

    2 ஆவது ஓவரை சந்தீப் வீசினார். 3 ஆவது பந்தில் ரவீந்திரா சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 17:42 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: முதல் ஓவர் முடிவில் 4/0

    சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ரவீந்திரா மற்றும் ருதுராஜ் களமிறங்கினர். முதல் ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 17:21 IST
    சென்னைக்கு 142 ரன்களை இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான்

    20 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்தில் துருவ் அவுட் ஆனார். துருவ் 28 ரன்களில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஷூபம் துபே முதல் பந்திலே ஷிவம் துபேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து அஸ்வின் களமிறங்கினார். 5 ஆவது பந்தில் ரியான் சிக்சர் அடித்தார். ரியான் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 17:07 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 19 ஓவர்கள் முடிவில் 131/3

    19 ஆவது ஓவரை தாக்கூர் வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 17:05 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 18 ஓவர்கள் முடிவில் 124/3

    18 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். 3 ஆவது பந்தில் துருவ் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 17:02 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 17 ஓவர்கள் முடிவில் 113/3

    17 ஆவது ஓவரை சிமர்ஜித் வீசினார். முதல் பந்தில் துருவ் பவுண்டரி அடித்தார். 3 ஆவது பந்தில் ரியான் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:56 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 16 ஓவர்கள் முடிவில் 103/3

    16 ஆவது ஓவரை தாக்கூர் வீசினார். 3 ஆவது பந்தில் துருவ் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:48 IST
    சஞ்சு சாம்சன் அவுட்; ராஜஸ்தான் ராயல்ஸ்: 15 ஓவர்கள் முடிவில் 94/3

    15 ஆவது ஓவரை சிமர்ஜித் வீசினார். 2 ஆவது பந்தில் சஞ்சு சாம்சன் அவுட் ஆனார். சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து துருவ் ஜூரல் களமிறங்கினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:38 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 14 ஓவர்கள் முடிவில் 89/2

    14 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். 2 ஆவது பந்தில் ரியான் சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:36 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 13 ஓவர்கள் முடிவில் 79/2

    13 ஆவது ஓவரை தீக்‌ஷனா வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:33 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 12 ஓவர்கள் முடிவில் 74/2

    12 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:29 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 11 ஓவர்கள் முடிவில் 68/2

    11 ஆவது ஓவரை தாக்கூர் வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:23 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 10 ஓவர்கள் முடிவில் 61/2

    10 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:19 IST
    பட்லர் அவுட்; ராஜஸ்தான் ராயல்ஸ்: 9 ஓவர்கள் முடிவில் 56/2

    9 ஆவது ஓவரை சிமர்ஜித் வீசினார். முதல் பந்திலே பட்லர் அவுட் ஆனார். பட்லர் 21 ரன்கள் எடுத்து, தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய ரியான் 4 ஆவது பந்தில் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:12 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 8 ஓவர்கள் முடிவில் 49/1

    8 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 16:11 IST
    ஜெய்ஷ்வால் அவுட்; ராஜஸ்தான் ராயல்ஸ்: 7 ஓவர்கள் முடிவில் 46/1

    7 ஆவது ஓவரை சிமர்ஜீத் வீசினார். 2 ஆவது பந்தில் ஜெய்ஷ்வால் அவுட் ஆனார். ஜெய்ஷ்வால் 24 ரன்கள் அடித்து ருதுராஜிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 15:59 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 6 ஓவர்கள் முடிவில் 42/0

    6 ஆவது ஓவரை தீக்‌ஷனா வீசினார். கடைசி பந்தில் பட்லர் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 15:58 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 5 ஓவர்கள் முடிவில் 36/0

    5 ஆவது ஓவரை தாக்கூர் வீசினார். 4 ஆவது பந்தில் பவுண்டரி அடித்த ஜெய்ஷ்வால், அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 15:51 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 4 ஓவர்கள் முடிவில் 27/0

    4 ஆவது ஓவரை தீக்‌ஷனா வீசினார். 3 ஆவது பந்தில் சிக்சர் அடித்த ஜெய்ஷ்வால், கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 15:45 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 3 ஓவர்கள் முடிவில் 14/0

    3 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். 4 ஆவது பந்தில் பட்லர் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 15:44 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: 2 ஓவர்கள் முடிவில் 7/0

    2 ஆவது ஓவரை தீக்‌ஷனா வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 15:39 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ்: முதல் ஓவர் முடிவில் 3/0

    ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். சென்னை அணியில் தேஷ்பாண்டே முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது.



  • May 12, 2024 15:12 IST
    இரு அணிகளின் இம்பாக்ட் ப்ளேயர்ஸ்

    ராஜஸ்தான் ராயல்ஸ்: ரோவ்மேன் பவல், டாம் கோஹ்லர்-காட்மோர், நந்த்ரே பர்கர், தனுஷ் கோட்டியான், கேசவ் மகாராஜ்

    சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி



  • May 12, 2024 15:11 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்

    சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா



  • May 12, 2024 15:10 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேயிங் லெவன்

    ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷுபம் துபே, துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்



  • May 12, 2024 15:09 IST
    ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற விரும்புகிறோம் - ருதுராஜ் கெய்க்வாட்

    ருதுராஜ் கெய்க்வாட்: பனி ஒரு காரணி அல்ல, நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது பந்து வீசினாலும் பரவாயில்லை. ஆட்டம் முழுவதும் ஆடுகளம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த சூழ்நிலையில் நீங்கள் மனதளவில் தயாராக வேண்டும். நாங்கள் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் பற்றி பேசினோம். நீங்கள் ஒரு நல்ல தலைவர் இடத்தில் இருக்க வேண்டும் மற்றும் எதிர்பார்த்ததை வழங்க வேண்டும். நாங்கள் சரியான சமநிலையைப் பெற்றுள்ளோம், ரச்சினும் நானும் ஓபன் செய்வோம், மிட்செல் 3வது இடத்தில் பேட் செய்வார். சான்ட்னருக்கு பதிலாக தீக்ஷனா வருகிறார். நம்பிக்கை மற்றும் ஆதரவு அவசியம். சாத்தியமான ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம், அதற்கு சரியான மனநிலையுடன் இருக்க வேண்டும்.



  • May 12, 2024 15:06 IST
    முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம் - சஞ்சு சாம்சன்

    சஞ்சு சாம்சன்: நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். மைதானம் நன்றாக இருப்பது போல் தெரிகிறது, பனியை எதிர்பார்க்க வேண்டாம். சூழ்நிலைகள் மற்றும் வானிலை மாற்றம், அதற்கு ஏற்ப நேரம் கிடைத்தது. இந்த போட்டியில் அனைத்தையும் கொடுக்க வேண்டும். நமக்கான சிறந்தவற்றை கடைபிடிக்க வேண்டும். எங்கள் அடிப்படை செயல்முறைகளை செய்ய வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக செயல்பட வேண்டும், முடிவுகள் மகிழ்ச்சியாக உணர உங்கள் வழியில் செல்ல வேண்டும். ஜூரல் அணிக்கு திரும்பி வந்துள்ளார்.



  • May 12, 2024 15:03 IST
    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



  • May 12, 2024 14:41 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணி

    ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரியான் பராக், சுபம் துபே/துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், டோனோவன் ஃபெரீரா/ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா [இம்பாக்ட் ப்ளேயர்: ஜோஸ் பட்லர்]



  • May 12, 2024 14:38 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி

    சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் [இம்பாக்ட் ப்ளேயர்: அஜிங்க்யா ரஹானே/சமீர் ரிஸ்வி]



Chennai Super Kings IPL 2024 Rajasthan Royals
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment