சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐ.பி.எல் 2024 போட்டியில் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மூன்றாவது நடுவரால் ‘பீல்டுக்கு இடையூறாக’ கருதப்பட்டதால் வினோதமான முறையில் வெளியேற்றப்பட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: CSK vs RR: Why was Ravindra Jadeja given out against Rajasthan Royals?
சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில், சென்னை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் குறைந்த ஸ்கோரான 142 ரன்களை சென்னை அணி சேசிங் செய்தபோது, ஜடேஜா ஆறு பந்துகளில் நான்கு ரன்கள் அடித்திருந்தார். அடுத்து ஆவேஷ் கான் ஓவரில், ஷாட்டில் இரண்டாவது ரன் எடுக்க ஜடேஜா முயற்சித்தார். ஜடேஜா ஆடுகளத்தின் நடுவே இருந்தபோது மறுமுனையில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் ரன் எடுக்க மறுத்தார். இதனால் ஜடேஜா ராஜஸ்தான் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடமிருந்து ஒரு த்ரோவில் சிக்கினார், ஆனால் பந்து ஜடேஜா மீது பட்டு விழுந்தது. உடனடியாக சஞ்சு சாம்சன் அப்பீல் செய்தார்.
ஆன்-பீல்ட் அம்பயர்கள் பின்னர் முடிவை மூன்றாம் நடுவருக்கு பரிந்துரைத்தனர். டிவி நடுவர் அனில் சவுத்ரி, ஜடேஜா க்ரீஸ் செய்ய முயற்சிக்கும் போது த்ரோ லைனில் வருவதற்கு முன்பு பந்தை தெளிவாகப் பார்த்ததாக உணர்ந்தார். தற்செயலாக, ஜடேஜாவும் பேட்டிங் ஸ்ட்ரிப் வழியாக நடுவில் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது பந்து வருவதை ஜடேஜா பார்த்ததாக நடுவர் கருதியதால் ஜடேஜா வெளியேற்றப்பட்டார்.
விதிகள் என்ன சொல்கிறது
எம்.சி.சி (MCC) கிரிக்கெட் விதிகளின்படி, சட்டம் 37.1.4 கூறுகிறது: 'ஒரு நடுவர், சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, ஒரு பேட்ஸ்மேன் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடும்போது,
- சாத்தியமான காரணமின்றி குறிப்பிடத்தக்க வகையில் அவரது திசையை மாற்றி, அதன் மூலம் ஒரு பீல்டரின்
- ரன் அவுட் செய்யும் முயற்சியை தடுத்தால், மேல்முறையீட்டின் போது, களத்தில் தடையாக செயல்பட்டதாக பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கப்பட வேண்டும். அது
-ஒரு ரன் அவுட் நடந்திருக்குமா இல்லையா என்பது பொருந்தாது.
ஐ.பி.எல்.,லில் இந்த முறையில் எத்தனை பேர் ஆட்டமிழந்துள்ளனர்
ஐ.பி.எல்.,லில் இந்த முறையில் ஆட்டமிழந்த மூன்றாவது வீரர் ஜடேஜா. மற்ற இரண்டு பேர்
யூசுப் பதான் (KKR v PWI), 2013
அமித் மிஸ்ரா (DC v SRH), 2019.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“