CSK vs SRH Highlights: கேள்விக்குறியான சி.எஸ்.கே-வின் ப்ளே ஆஃப் வாய்ப்பு; 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி

ஐ.பி.எல். 2025 தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். 2025 தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK vs SRH LIVE Cricket Score 2025 IPL 43th match live cricket score updates Chennai Super Kings vs SunRisers Hyderabad MA Chidambaram Stadium Chepauk  MS Dhoni 400th T20 Pat Cummins Tamil News

ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 43வது லீக் போட்டி - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை.

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs SRH LIVE Cricket Score, IPL 2025

இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

  • Apr 25, 2025 23:26 IST

    5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும், கமிந்து மெண்டிஸ் (32 ரன்கள்), நிதிஷ் குமார் ரெட்டி (19 ரன்கள்), அனிகேத் வர்மா (19 ரன்கள்) ஆகியோர் அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். அந்த அணியில் இஷான் கிஷான் அதிகபட்சமாக 44 ரன்கள் அடித்தார். அதன்படி, 18.4 ஓவர்களில் 155 ரன்களை ஹைதராபாத் குவித்தது. இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.



  • Apr 25, 2025 22:45 IST

    13 ஓவர்களில் 94 ரன்கள்

    ஹைதராபாத் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ரன்களை உயர்த்த போராடிய இஷான் கிஷான், 44 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து, அனிகேத் வர்மாவும், கமிந்து மெண்டிஸும் விளையாடி வருகின்றனர். 



  • Advertisment
    Advertisements
  • Apr 25, 2025 22:28 IST

    நிதானமாக ரன்களை சேர்க்கும் ஹைதராபாத்

    ஹைதராபாத் அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் குவித்துள்ளது. ட்ரவிஸ் ஹெர் 19 ரன்களிலும், க்ளாசன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷான் 34 ரன்களுடன் விளையாவி வருகிறார். அவருடன் அனிகேத் வர்மா கரம் கோர்த்துள்ளார்.



  • Apr 25, 2025 21:48 IST

    ஹைதராபாத்துக்கு ஷாக் கொடுத்த சென்னை; அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தி அசத்தல்

    ஹைதராபாத் அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ட்ரவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். இவர்களில் அபிஷேக் சர்மா ரன்கள் ஏதும் எடுக்காமல் இரண்டவது பந்திலேயே தனது விக்கெட்டை கலீல் அகமதுவிடம் இழந்து பெவிலியன் திரும்பினார்.



  • Apr 25, 2025 21:27 IST

    பேட்டிங்கில் சொதப்பிய சி.எஸ்.கே - ஹைதராபாத்துக்கு 155 ரன்கள் இலக்கு

    பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை அணியில் இருந்து அதிகபட்சமாக டெவால்ட் ப்ரீவிஸ் 42 ரன்களும், ஆயுஷ் மத்ரே 30 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



  • Apr 25, 2025 21:14 IST

    6 ரன்களில் அவுட்டான தோனி

    சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். குறிப்பாக, 10 பந்துகளில் 4 பவுண்டரி அடித்து 6 ரன்கள் எடுத்த தோனி, தனது விக்கெட்டை ஹர்ஷல் படேலிடம் இழந்தார். இதனால், சென்னை அணியின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.



  • Apr 25, 2025 20:59 IST

    16 ஓவர்களில் 130 ரன்கள்

    சென்னை அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அணியின் ரன்களை உயர்த்த போராடிய டெவால்ட் ப்ரீவிஸ், 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபேவும் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், தீபக் ஹூடா மற்றும் தோனி ஆகியோர் தற்போது களத்தில் நிற்கின்றனர்.



  • Apr 25, 2025 20:28 IST

    அடுத்தடுத்து பறிபோகும் விக்கெட்டுகள்; ரன்களை குவிக்க தடுமாறும் சென்னை

    சென்னை அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. ரஷீத், மாத்ரே, சாம் குர்ரான், ஜடேஜா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், சென்னை அணி ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.



  • Apr 25, 2025 20:08 IST

    விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சென்னை

    சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரேவின் விக்கெட்டை, பாட் கம்மின்ஸ் கைப்பற்றினார். அவர், 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்திருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழப்பதால் சென்னை அணி தடுமாறி வருகிறது. அதன்படி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்களை சென்னை அணி எடுத்துள்ளது.



  • Apr 25, 2025 20:03 IST

    அடுத்தடுத்து 2 விக்கெட் இழப்பு; தடுமாறும் சென்னை

    சென்னை அணியின் சாம் குர்ரான் 10 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் தனது விக்கெட்டை சாம் குர்ரா இழந்தார். இதனால் 5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறுகிறது.



  • Apr 25, 2025 19:55 IST

    4 ஓவர்களில் 37 ரன்கள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓவர்களில் 37 ரன்களை அடித்துள்ளது. ஆயுஷ் மாத்ரே 16 பந்துகளில் 28 ரன்கள் மற்றும் சாம் கரண் 8 பந்துகளில் 8 ரன்கள் அடித்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.



  • Apr 25, 2025 19:38 IST

    ஆரம்பமே அதிர்ச்சி - முதல் பந்திலேயே ஆட்டமிழந்த ரஷீத்

    சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் விதமாக ஷேக் ரஷீத், தனது முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில், சென்னை அணி முதல் ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்தது.



  • Apr 25, 2025 19:20 IST

    இரு அணிகளின் இம்பாக்ட் பிளேயர்கள் விபரம்

    சென்னை சூப்பர் கிங்ஸ்: அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், ஜேமி ஓவர்டன்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபினவ் மனோகர், சச்சின் பேபி, ராகுல் சாஹர், வியான் முல்டர்



  • Apr 25, 2025 19:18 IST

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி



  • Apr 25, 2025 19:17 IST

    சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்

    சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, தீபக் ஹூடா, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா



  • Apr 25, 2025 19:16 IST

    ரச்சின், சங்கர் அவுட்; பிரேவிஸ், ஹூடா உள்ளே - தோனி

    எம்.எஸ். தோனி: நாங்கள் முதலில் பந்து வீச விரும்புவதற்கு பனி தான் முக்கிய காரணம். கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் நீங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடாதபோது, மற்ற வீரர்களுக்கும் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாங்கள் செயல்முறையைச் சரியாகப் பெற விரும்புகிறோம், மீதமுள்ள ஆட்டங்களில் அதைத்தான் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தைப் பார்க்கிறோம், சில சேர்க்கைகளைப் பார்க்கிறோம், எங்கள் திறனில் நம்பிக்கை வைத்து நாங்கள் விரும்புவதைச் செய்கிறோம். மைதானம் எப்படி இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. வீரர்கள் தங்கள் சிறந்த திறமையை முயற்சி செய்கிறார்கள், பழைய சிவப்பு மண் மைதானம் நன்றாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், 2010 சாம்பியன்ஸ் லீக்கிற்கு முந்தையது. நாங்கள் 2 மாற்றங்களைச் செய்துள்ளோம். ரச்சின் மற்றும் சங்கர் அவுட். பிரேவிஸ் மற்றும் ஹூடா உள்ளே.



  • Apr 25, 2025 19:13 IST

    சென்னைக்கு எதிரான போட்டி எப்போதும் ஒரு பெரிய ஆட்டம் – பேட் கம்மின்ஸ்

    பேட் கம்மின்ஸ்: முதலில் ஒரு பவுலிங் செய்ய விரும்புகிறோம். சென்னைக்கு எதிரான போட்டி எப்போதும் ஒரு பெரிய ஆட்டம், ஓரிரு தோல்விகளுக்குப் பிறகு மீண்டு வருவார்கள், ஆனால் அது ஒரு புதிய மைதானம், வீரர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்கள். விக்கெட் நன்றாக இருந்தால், அவர்கள் ஒரு பெரிய ஸ்கோரைப் பெறலாம், இல்லையெனில், அவர்கள் சிறப்பாகச் செயல்படவும் துணைபுரியும். ஆடுகளம் கொஞ்சம் வறண்டதாகத் தெரிகிறது.



  • Apr 25, 2025 19:09 IST

    டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங்; சென்னை முதலில் பேட்டிங்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.



  • Apr 25, 2025 19:08 IST

    டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை முதலில் பேட்டிங் செய்கிறது



  • Apr 25, 2025 18:30 IST

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர்ப்பார்க்கப்படும் ப்ளேயிங் லெவன்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, எஷான் மலிங்கா

    இம்பாக்ட் ப்ளேயர்: ராகுல் சாஹர்



  • Apr 25, 2025 18:28 IST

    சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்ப்பார்க்கப்படும் ப்ளேயிங் லெவன்

    சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா

    இம்பாக்ட் ப்ளேயர்: ஆர் அஸ்வின்



Sunrisers Hyderabad Ipl Chennai Super Kings

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: