IPL 2024 | Chennai Super Kings | Sunrisers Hyderabad: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும் 46-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
இந்த இரு அணிகளில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அதன் முந்தைய ஆட்டத்தில் லக்னோவிடம் தோல்வியடைந்தது. மறுபுறம், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் பெங்களூரு அணியிடம் தோல்வியுற்றது. ஆதலால், இரு அணிகளும் வெற்றிக்கான தேடலில் இருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையில் கடைசியாக ஐதராபாத்தில் நடந்த மோதலில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதற்கு பதிலடி கொடுக்க சென்னை அணி அதன் கோட்டையில் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் 20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 14ல் வெற்றி பெற்றுள்ளது, ஐதராபாத் அணி 6 முறை வெற்றி பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Apr 28, 2024 23:37 ISTசென்னை வெற்றி
19 ஆவது ஓவரை முஸ்தாபிசுர் வீசினார். முதல் பந்தில் அகமது பவுண்டரி அடித்தார். 2 ஆவது பந்தில் அகமது அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய உனத்கட் 5 ஆவது பந்தில் அவுட் ஆனார். ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
Apr 28, 2024 23:29 ISTகம்மின்ஸ் அவுட்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 18 ஓவர்கள் முடிவில் 128/8
18 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். 3 ஆவது பந்தில் கம்மின்ஸ் அவுட் ஆனார். அடுத்து புவனேஷ்வர் களமிறங்கினார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 23:25 ISTசமத் அவுட்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 17 ஓவர்கள் முடிவில் 124/7
17 ஆவது ஓவரை ஷர்துல் வீசினார். 2 ஆவது பந்தில் சமத் அவுட் ஆனார். அடுத்து கம்மின்ஸ் களமிறங்கினார். 4 ஆவது பந்தில் கம்மின்ஸ் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 23:17 ISTகிளாசன் அவுட்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 16 ஓவர்கள் முடிவில் 118/6
16 ஆவது ஓவரை பதிரனா வீசினார். 2 ஆவது பந்தில் சமத் சிக்சர் அடித்தார். 4 ஆவது பந்தில் மிட்சலிடம் கேட்ச் கொடுத்து கிளாசன் 20 ரன்களில் அவுட் ஆனார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 23:05 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 15 ஓவர்கள் முடிவில் 109/5
15 ஆவது ஓவரை ஷர்துல் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 23:04 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 14 ஓவர்கள் முடிவில் 106/5
14 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:56 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 13 ஓவர்கள் முடிவில் 102/5
13 ஆவது ஓவரை ஷர்துல் வீசினார். முதல் பந்தில் சமத் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:52 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 12 ஓவர்கள் முடிவில் 95/5
12 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். 3 ஆவது பந்தில் கிளாசன் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:50 ISTமார்க்ரம் அவுட்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 11 ஓவர்கள் முடிவில் 86/5
11 ஆவது ஓவரை பதிரனா வீசினார். 5 ஆவது பந்தில் மார்க்ரம் போல்டானார். அடுத்து சமத் களமிறங்கினார், இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:45 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 10 ஓவர்கள் முடிவில் 78/4
10 ஆவது ஓவரை முஸ்தாபிசுர் வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:37 ISTநிதிஷ் அவுட்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 9 ஓவர்கள் முடிவில் 73/4
9 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். 5 ஆவது பந்தில் நிதிஷ் அவுட் ஆனார். நிதிஷ் 15 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து கிளாசன் களமிறங்கினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:30 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 8 ஓவர்கள் முடிவில் 70/3
8 ஆவது ஓவரை ஷர்துல் வீசினார். முதல் பந்தில் மார்க்ரம் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:24 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 7 ஓவர்கள் முடிவில் 59/3
7 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:16 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 6 ஓவர்கள் முடிவில் 53/3
6 ஆவது ஓவரை முஸ்தாபிசுர் வீசினார். முதல் பந்தில் மார்க்ரம் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:15 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 5 ஓவர்கள் முடிவில் 45/3
5 ஆவது ஓவரை சாஹர் வீசினார். சாஹர் சிறப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:08 ISTஅபிஷேக் அவுட்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 4 ஓவர்கள் முடிவில் 42/3
4 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். 3 ஆவது பந்தில் அபிஷேக் பவுண்டரி விளாசினார். ஆனால் 4 ஆவது பந்தில் மிட்சலிடம் கேட்ச் கொடுத்து, 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் களமிறங்கினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:04 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 3 ஓவர்கள் முடிவில் 33/2
3 ஆவது ஓவரை சாஹர் வீசினார். 2 மற்றும் 3 ஆவது மார்க்ரம் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 22:03 ISTஅடுத்தடுத்து 2 விக்கெட்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 2 ஓவர்கள் முடிவில் 21/2
2 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். ஹெட் முதல் பந்தில் சிக்சர் அடித்தார். அபிஷேக் 3 ஆவது பந்தை சிக்சருக்கு தூக்கினார். 5 ஆவது பந்தில் ஹெட் அவுட் ஆனார். ஹெட் 13 ரன்களில் மிட்சலிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய அன்மோல் முதல் பந்திலே மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக மார்க்ரம் களமிறங்கினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 21:59 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: முதல் ஓவர் முடிவில் 7/0
சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ஹெட் மற்றும் அபிஷேக் வர்மா களமிறங்கினர். சென்னை அணியில் முதல் ஓவரை சாஹர் வீசினார். ஹெட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. ஹைதராபாத் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 21:27 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 20 ஓவர்கள் முடிவில் 212/3
20 ஆவது ஓவரை நடராஜன் வீசினார். தோனி தனது முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 5 ஆவது பந்தில் துபே சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 21:23 ISTசதத்தை தவறவிட்ட ருதுராஜ்
கடைசி ஓவரில் ருதுராஜ் அவுட் ஆனார். அவர் நடராஜன் பந்தில் நிதிஷிடம் கேட்ச் கொடுத்தார். ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். இதனைத்தொடர்ந்து தோனி களமிறங்கினார்
-
Apr 28, 2024 21:19 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 19 ஓவர்கள் முடிவில் 200/2
19 ஆவது ஓவரை உனத்கட் வீசினார். உனத்கட் சிறப்பாக பந்து வீசி பவுண்டரிகளை கொடுக்காமல் தடுத்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 21:15 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 18 ஓவர்கள் முடிவில் 192/2
18 ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் பந்தில் துபே சிக்சர் விளாசினார். 2 ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 21:09 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 17 ஓவர்கள் முடிவில் 176/2
17 ஆவது ஓவரை நடராஜன் வீசினார். 2 ஆவது பந்தில் துபே சிக்சர் விளாசினார். மூன்றாவது பந்தில் விக்கெட் வாய்ப்பு நழுவிய நிலையில், 5 ஆவது பந்தில் துபே மீண்டும் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 21:03 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 16 ஓவர்கள் முடிவில் 159/2
16 ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். ருதுராஜ், கடைசி 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 21:00 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 15 ஓவர்கள் முடிவில் 148/2
15 ஆவது ஓவரை புவனேஷ்வர் வீசினார். 3 ஆவது பந்தில் சிக்சர் அடித்த ருதுராஜ், 4 ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:58 ISTமிட்சல் அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 14 ஓவர்கள் முடிவில் 134/2
14 ஆவது ஓவரை உனத்கட் வீசினார். 3 ஆவது பந்தில் மிட்சல் அவுட் ஆனார். அவர் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து நிதிஷிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து துபே களமிறங்கினார். 5 ஆவது பந்தில் ருதுராஜ் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:40 ISTமிட்சல் அரைசதம்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 13 ஓவர்கள் முடிவில் 123/1
13 ஆவது ஓவரை அகமது வீசினார். 3 ஆவது பந்தில் மிட்சல் பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிட்சல் அரைசதம் கடந்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:36 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 12 ஓவர்கள் முடிவில் 115/1
12 ஆவது ஓவரை அகமது வீசினார். முதல் 2 பந்துகளை மிட்சல் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:33 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 11 ஓவர்கள் முடிவில் 101/1
11 ஆவது ஓவரை நடராஜன் வீசினார். 5 ஆவது பந்தில் மிட்சல் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:26 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 10 ஓவர்கள் முடிவில் 92/1
10 ஆவது ஓவரை உனத்கட் வீசினார். 3 ஆவது பந்தில் மிட்சல் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:23 ISTருதுராஜ் அரை சதம்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 9 ஓவர்கள் முடிவில் 82/1
9 ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் பந்தை மிட்சல் சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில் ருதுராஜ் சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:18 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 8 ஓவர்கள் முடிவில் 67/1
8 ஆவது ஓவரை அகமது வீசினார். 4 ஆவது பந்தில் ருதுராஜ் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:09 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 7 ஓவர்கள் முடிவில் 59/1
7 ஆவது ஓவரை உனத்கட் வீசினார். 2 ஆவது பந்தில் ருதுராஜ் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:02 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 6 ஓவர்கள் முடிவில் 50/1
6 ஆவது ஓவரை நடராஜன் வீசினார். 2 ஆவது பந்தில் ருதுராஜ் பவுண்டரி அடித்தார். இருப்பினும் நடராஜன் சிறப்பாக பந்து வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 20:00 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 5 ஓவர்கள் முடிவில் 45/1
5 ஆவது ஓவரை புவனேஷ்வர் வீசினார். 2 ஆவது பந்தில் மிட்சல் பவுண்டரி அடித்தார். 4 மற்றும் 5 ஆவது பந்துகளை ருதுராஜ் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 19:55 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 4 ஓவர்கள் முடிவில் 30/1
4 ஆவது ஓவரை நிதிஷ் வீசினார். 4 ஆவது பந்தில் ருதுராஜ் பவுண்டரி அடித்தார். 5 ஆவது பந்தையும் ருதுராஜ் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 19:52 ISTரஹானே அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 3 ஓவர்கள் முடிவில் 19/1
3 ஆவது ஓவரை புவனேஷ்வர் வீசினார். முதல் பந்தில் ரஹானே பவுண்டரி அடித்தார். 5 ஆவது பந்தில் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து ரஹானே அவுட் ஆனார். ரஹானே 9 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து மிட்சல் களமிறங்கினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 19:48 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 2 ஓவர்கள் முடிவில் 13/0
2 ஆவது ஓவரை நிதிஷ் வீசினார். கடைசி பந்தில் ருதுராஜ் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 19:38 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: முதல் ஓவர் முடிவில் 6/0
சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ருதுராஜ் களமிறங்கினர். ஹைதரபாத் அணியில் முதல் ஓவரை புவனேஷ்வர் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வந்தது. சென்னை அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 28, 2024 19:14 ISTஇம்பாக்ட் ப்ளேயர்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: உம்ரான் மாலிக், மயங்க் மார்கண்டே, அன்மோல்ப்ரீத் சிங், க்ளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர்
சென்னை சூப்பர் கிங்ஸ்: சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர்
-
Apr 28, 2024 19:12 ISTசென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா
-
Apr 28, 2024 19:11 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், டி நடராஜன்
-
Apr 28, 2024 19:10 ISTகிளட்ச் தருணங்களை நாங்கள் இழந்துவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்: (முதலில் பேட்டிங் செய்வதில்) உண்மையில் மகிழ்ச்சி இல்லை. டாஸ் வெல்வோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம், எங்களால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. அவர்களுக்கு எதிராக ரன்களை குவித்தால் நிச்சயம் அவர்கள் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஆட்டத்தில் அந்த கிளட்ச் தருணங்களை நாங்கள் இழந்துவிட்டோம். பந்துவீச்சுடன் கூட, பவர்பிளேயில் அந்த தொடக்கங்களை நாங்கள் பெறவில்லை, சில சமயங்களில் நாங்கள் அதைப் பெற்றபோது எங்களால் நன்றாக முடிக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக, நாங்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் அந்த கிளட்ச் தருணங்களை வெல்வதற்கு முயல்வோம்
-
Apr 28, 2024 19:07 ISTஎங்கள் வீரர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் - பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்: நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். நிச்சயமாக, அது ஏன் மிகவும் சத்தமாக இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம். எங்கள் வீரர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். எங்களிடம் ஒரு புதிய பந்தில் சிறப்பாக வீசும் புவனேஷ்வர் இருக்கிறார், தேவையான இடங்களில் நான் நிரப்புகிறேன். நாங்கள் ஒரு கூடுதல் பேட்டருடன் செல்கிறோம், மார்கண்டே இன்றைய போட்டியில் இல்லை. மாலையில் பனி வரலாம் எனவே நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளோம்.
-
Apr 28, 2024 19:04 ISTடாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
-
Apr 28, 2024 18:28 ISTவானிலை அறிக்கை
accuweather.com படி, மாலையில், வெப்பநிலை சுமார் 31 டிகிரி இருக்கும். இருப்பினும், உண்மையான உணர்வு 37 டிகிரியாக இருக்கும். ஈரப்பதம் சுமார் 80% இருக்கும். மழைக்கு வாய்ப்பே இல்லை.
-
Apr 28, 2024 18:04 ISTசன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச அணி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச அணி: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ராம், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட் [இம்பாக்ட் ப்ளேயர்: டி நடராஜன்]
-
Apr 28, 2024 17:55 ISTசென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி: ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, எம்.எஸ். தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா [இம்பாக்ட் ப்ளேயர்: ஷர்துல் தாக்கூர்]
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.