Advertisment

CSK vs SRH: பலமான அணி எது? வரலாறு என்ன சொல்கிறது?

CSK vs SRH Live Score: புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது சி.எஸ்.கே.வுக்கு எதிராக கடந்த காலங்களில் சன் ரைசர்ஸ் பந்துவீச்சு எடுபடவில்லை.

author-image
WebDesk
New Update
CSK vs SRH: பலமான அணி எது? வரலாறு என்ன சொல்கிறது?

CSK vs SRH Tamil News: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இந்த வெற்றி முக்கியமானது.

Advertisment

ஐபிஎல் 2020 சீசனின் 14-வது ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று (அக். 2) நடக்கிறது. 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) இதில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த சீசனில் இதுவரை இரு அணிகளுமே எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடவில்லை. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை வென்ற சி.எஸ்.கே அதன்பிறகு அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. சன் ரைசர்ஸ் அணி அதே ஒரு வெற்றியுடன், புள்ளிகள் பட்டியலில் சி.எஸ்.கே.வுக்கு சற்று மேலே இருக்கிறது.

இன்று வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் 2 அல்லது 3 இடங்கள் முன்னேற முடியும். இரு அணிகளின் கடந்தகால ஆட்டங்களைப் பார்த்தால் 9-3 என சி.எஸ்.கே வலுவாக சன் ரைசர்ஸை டாமினேட் செய்திருக்கிறது. குறிப்பாக சாம்பியன் பட்டம் வென்ற 2018-ல் மோதிய 4 ஆட்டங்களிலும் சன் ரைசர்ஸை துவம்சம் செய்திருக்கிறது சி.எஸ்.கே. கடந்த ஆண்டு தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பதிவு செய்திருக்கின்றன.

பேட்டிங்கில் சன் ரைசர்ஸுக்கு எதிராக வாட்சன் இதுவரை மொத்தம் 532 ரன்களை குவித்திருக்கிறார். சன் ரைசர்ஸ் தரப்பில் வார்னர், சி.எஸ்.கே.வுக்கு எதிராக 445 ரன்கள் குவித்ததே அதிகபட்சம். பந்து வீச்சில் சி.எஸ்.கே வீரர் பிராவோ 14 விக்கெட்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறார். சன் ரைசர்ஸ் தரப்பில் புவனேஷ்வர் குமார் மொத்தம் 7 விக்கெட் எடுத்திருக்கிறார். புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது சி.எஸ்.கே.வுக்கு எதிராக கடந்த காலங்களில் சன் ரைசர்ஸ் பந்துவீச்சு எடுபடவில்லை.

சி.எஸ்.கே.வுக்கு இன்றைய ஆட்டத்தில் ராயுடு, பிராவோ ஆகியோர் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முரளி விஜய், ஹேசில்வுட் வெளியே உட்கார வைக்கப்படலாம். சன் ரைசர்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் மிரட்டக்கூடும்.

இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை ஸ்டார் குழுமத் தொலைக்காட்சிகளில் நேரலையாகக் காணலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment