When and Where to Watch England vs South Africa Live Telecast: உலகக் கோப்பை கிர்க்கெட் 2019 தொடர், இன்று(மே.30) லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. கிரவுண்ட் பெயரை ரீசண்ட்டா எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? நியூசிலாந்துகிட்ட பயிற்சிப் போட்டியில் இந்தியா தர்ம அடி வாங்கிய அதே ஸ்டேடியம் தான். சரி விஷயத்துக்கு வருவோம்.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில், டிஃபன்ஸ் ஆடாமல் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடப் போகும் அணி என்றால் அது இங்கிலாந்து தான்.
இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், க்றிஸ் வோக்ஸ் என்று மிக வலிமையான கட்டமைப்புடன் களமிறங்குகிறது இங்கிலாந்து.
'டாஸ் போடும் போது தான் பிளேயிங் 11 யார் என்று அறிவிக்க முடியும்' என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியிருப்பதால், அந்த சஸ்பென்ஸ் இப்போது ரிவீல் ஆகாது.
தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சரிவிகிதமாக இருந்தாலும், டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. ஸோ, காகிசோ ரபாடா, லுங்கி ங்கிடி, ஆண்டிலே பெலுக்வாயோ, க்றிஸ் மொரிஸ் கொண்ட ஃபேஸ் அட்டாக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கும் என தெரிகிறது.
பேட்டிங்கில் ஐபிஎல்-ல் கன்சிஸ்டன்ட் காட்டிய டி காக், டு பிளசிஸ், ஹஷிம் ஆம்லா, எய்டன் மார்க்ரம் ஆகியோர் பலம் சேர்ப்பார்கள். ஆனால், ஃபார்மில் இல்லாத டேவிட் மில்லர் தான், கேப்டன் டு பிளசிஸ்-க்கு இப்போது தலைவலியாக இருக்கிறார்.
கென்னிங்டன் ஓவல் ஸ்டேடியம், ஃபிளாட் பிட்ச் கொண்டது. பேட்டுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் பிடித்த களம். ஆனால், இன்றைய போட்டி மேக மூட்டங்களுக்கு இடையே நடக்கும் என வானிலை மையம் தெரிவித்து இருப்பதால், அடர் மேகங்களுக்கு மத்தியில் பவுலர்ஸ் ராஜாங்கம் நடத்த வாய்ப்புள்ளது. ஸ்விங் தாறுமாறாக செல்லும். பவுன்ஸ் பந்தாவாக எகிறும்.
மொத்தத்தில், இன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு அருமையான கிரிக்கெட் காத்திருக்கிறது என்பது உறுதி!
இந்திய நேரப்படி பிறபகல் 3 மணிக்கு இப்போட்டி ஒளிபரப்பாகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக காணலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் கமெண்ட்ரியுடன் போட்டியை காணலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டார் ப்ரீமியமில் போட்டியை காணலாம்.